இந்திய அணி தனது ஒருநாள் கிரிக்கெட் அணியில் கிட்டத்தட்ட வலிமையான அணியாக தற்போது தயார் செய்து வைத்துள்ளது. இந்த அணியை ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்க உள்ளது. அத்துடன் உலகக் கோப்பை அணியிலும் தற்போது ஒருநாள் போட்டிகளில் விளையாடும் வீரர்களே இடம்பெறுவர். உடற்தகுதி மற்றும் ஆட்டத்திறனை பொறுத்து வேண்டுமானால் ஒருசில இடங்கள் மாற்றம் செய்ய வாய்ப்புள்ளது.
உலகக்கோப்பையில் பங்குபெறும் ஒவ்வொரு அணியும் உலகக்கோப்பையை கைப்பற்றும் நோக்கில் தங்களது முழு ஆட்டத்திறனையும் வெளிபடுத்தும் விதமாக அணியை தற்போது தயார் செய்து கொண்டுள்ளது. அத்துடன் ஸ்டார் பிளேயர்களுக்கு எவ்வித காயம் ஏற்படாமலும் பார்த்துக் கொள்வதில் கண்ணும் கருத்துமாய் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பாதுகாக்கிறது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடும் இந்திய அணி : ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகார் தவான், விராட் கோலி (கேப்டன்), ராயுடு, கேதார் ஜாதவ், ஜடேஜா, தோனி(விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, முகமது சிராஜ், முகமது ஷமி, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், யுஜ்வேந்திர சகால், கலீல் அகமது.
இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணி வீரர்கள் படைக்கவுள்ள சாதனைகள் மற்றும் அடையவுள்ள மைல்கற்களை பற்றி நாம் காண்போம்.
#5 ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 100வது விக்கெட்டை வீழ்த்தவுள்ள முகமது ஷமி
முகமது ஷமி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓடிஐ பந்துவீச்சாளராகவே களமிறங்கினார். பின்னர் நாளடைவில் தன்னை டெஸ்ட் பந்துவீச்சாளராக மாற்றிக் கொண்டார் ஷமி. இவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக முதலில் சிறப்பாக செயல்பட்டு வந்தார். பின்னர் காயம் காரணமாக அணியில் இடம்பெற இயலவில்லை.
முகமது ஷமி 2013ல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். இவர் இந்திய அணிக்காக 52 ஒருநாள் போட்டிகளில் பங்குகொண்டார். முகமது ஷமி-க்கு ஓடிஐ தொடரில் குறைந்த வாய்ப்புகளே வழங்கப்பட்டுள்ளது.
இவர் சமீபத்தில் தான் இந்திய ஒருநாள் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். இந்திய அணி தேர்வாளர்கள் இந்திய அணிக்கு ஒரு அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளரை தேர்வு செய்யும் நோக்கில் இவரை தேர்ந்தெடுத்துள்ளது. புவனேஸ்வர் குமார் மற்றும் பூம்ரா-வுடன் சேர்ந்து உலகக் கோப்பை அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முகமது ஷமி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 100வது விக்கெட்டுகளை வீழ்த்த இன்னும் 6 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.
#4 ஒருநாள் கிரிக்கெட்டில் ஜடேஜா 2000 ரன்களை கடக்க போகிறார்.
ரவீந்திர ஜடேஜா தற்போது பேட்டிங்கில் சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தி வருகிறார். ஓடிஐ கிரிக்கெட்டில் இவரது வருகையினால் இந்திய அணிக்கு பின்வரிசை பேட்ஸ்மேன் கிடைத்துள்ளார். அத்துடன் பின்வரிசை பேட்டிங்கை உலகக் கோப்பை அணியில் சற்று மெருகேற்றும் விதமாகவும் அமையும். ஜடேஜா இங்கிலாந்திற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 80 ரன்களை குவித்து தனது ஆட்டத்திறனை நிருபித்ததால் ஆசியக் கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்றார். பின்னர் நடந்த ராஜ்கோட்டில் நடந்த மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது முதல் டெஸ்ட் சதத்தினை அடித்தார். அத்துடன் ஆஸ்திரேலியாவிற்கெதிரான டெஸ்ட் தொடரிலும் சிறப்பாக பேட்டிங் மற்றும் பௌலிங்கில் தனது ஆட்டத்திறனை வெளிபடுத்தியுள்ளார்.
இடதுகை பேட்ஸ்மேன் ஜடேஜா அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பேட்டிங்கிலும் சரி , பௌலிங்கிலும் சரி சிறப்பாக செயல்பட்டு அசத்தியுள்ளார்.
இவர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 2000 ரன்களை அடைய இன்னும் 16 ரன்கள் அடிக்க வேண்டும். பௌலிங்கில் 169 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.