#3 ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 100 வது விக்கெட்டுகளை வீழ்த்தவுள்ள புவனேஸ்வர் குமார்
புவனேஸ்வர் குமார் மற்றும் முகமது ஆகிய இரு இந்திய பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தங்களது 100 வது சர்வதேச ஓடிஐ விக்கெட்டுகளை வீழ்த்த உள்ளனர். புவனேஸ்வர் குமார் தற்போது 99 விக்கெட்டுகளை ஒருநாள் போட்டிகளில் வீழ்த்தியுள்ளார். இன்னும் ஒரு விக்கெட்டினை எடுத்தால் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 100 வது விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை பெறுவார்.
இவர் ஒரு மெதுவாக விக்கெட்டுகளை வீழ்த்திக் கொண்டு வருபவர் ஆவார். இவர் இதுவரை 95 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 99 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். ஓடிஐ-யில் இவரது சராசரி 38 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 45 ஆகவும் உள்ளது. இது ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு உகந்தது அல்ல. புவனேஸ்வர் குமார் இந்திய அணியில் ஒரு முக்கியமான பந்துவீச்சாளராக உள்ளார். ஆனால் அவ்வளவாக இவரது பந்துவீச்சு பேட்ஸ்மேன்களிடம் தாக்குதலை ஏற்படுத்துவதில்லை.
புவனேஸ்வர் குமார் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சாளராக தற்போது இந்திய அணியில் உள்ளார். இவர் டெத் ஓவர்களில் சிறப்பான ஆட்டத்திறனை வெளிபடுத்தும் திறமை உடையவராக உள்ளார். இவர் மெதுவாக விக்கெட்டுகளை வீழ்த்தி வந்தாலும் அவ்வளவாக எதிரணிக்கு ரன்களை விட்டுக்கொடுப்பதில்லை. மிகவும் ரன்களை கட்டுப்படுத்தி பந்துவீசும் திறனை பெற்றுள்ளார். அத்துடன் பேட்டிங்கிலும் தற்போது கலக்கி வருகிறார். எனவே கண்டிப்பாக உலகக் கோப்பையில் இவர் விளையாடுவார்.