#2 ஷிகார் தவான் ஒருநாள் போட்டிகளில் 5000 ரன்களை கடக்க உள்ளார்.
"கபார்" என்று கிரிக்கெட் உலகில் அழைக்கப்படும் ஷிகார் தவான் தன்னுடைய கிரிக்கெட் வாழ்வில் ஒரு புதிய மைல்கல்லை அடையவிருக்கிறார். தவான் 114 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று பிரம்மிக்க வைக்கும் 46 என்ற சராசரியுடனும் , 15 சதங்களுடனும் 4935 ரன்களை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அடித்துள்ளார். இன்னும் 65 ரன்கள் அடித்தால் 5000 ரன்களை ஒருநாள் போட்டிகளில் கடந்தவர் என்ற பெருமையை பெறுவார்.
இவர் இன்னும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்த மைல்கல்லை அடைந்தால் அதிவேகமாக ஒருநாள் போட்டிகளில் 5000 ரன்களை கடந்த உலகின் மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெறுவார். ஆம்லா 101 போட்டிகளில் 5000 ரன்களை கடந்து முதல் இடத்தில் உள்ளார். விவ் ரிச்சர்ட் , விராட் கோலி ஆகியோர் 114 போட்டிகளில் 5000 ரன்களை கடந்து இரண்டாவது இடத்திலும் உள்ளனர். சமீபத்தில் ஒருநாள் போட்டிகளில் சிறந்த ஆட்டத்திறனுடன் ஷிகார் தவான் செயல்பட்டு வருகிறார். 2018-ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் குவித்தோர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அத்துடன் இந்த வருடத்தில் டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
ஷிகார் தவான் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் சிறப்பாகவும் , ஒரு ஆர்வத்துடனும் அருமையாக விளையாடி வருகிறார்.அத்துடன் 2019 உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா-வுடன் தவான் தான் களமிறங்க வேண்டும் என ரசிகர்களும் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.