#1 ஒருநாள் கிரிக்கெட்டில் 50 அரைசதங்களை வீழ்த்த போகிறார் விராட் கோலி
சாதனை முறியடிப்பு என்றால் அனைவருக்கும் தற்போது நியாபகத்திற்கு வருபவர் விராட் கோலி .முக்கியமாக ஓடிஐ கிரிக்கெட். இவர் தற்போது ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரை வென்று பெரும் வரலாற்று உலகச்சாதனையை படைத்துள்ளார். அத்துடன் முதல் இந்திய கேப்டன் மற்றும் முதல் ஆசியக் கேப்டனாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியவர் என்ற சாதனையை படைத்தார்.கடந்த 33 வருடங்களில் ஆஸ்திரேலிய அணியை டெஸ்ட்டில் ஃபாலோ ஆன் பெற வைத்தது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. டெல்லியை சேர்ந்த இளம் இந்திய கேப்டன் அனைவராலும் புகழக் கூடியவராக தற்போது விளங்குகிறார் .
ஒரு கிரிக்கெட் வீரராக மற்றொரு மைல்கல்லை தற்போது அடையவிருக்கிறார் விராட் கோலி . இவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னும் 2 அரைசதங்களை வீழ்த்தினால் ஓடிஐ கிரிக்கெட்டில் 50 அரைசதங்களை அடித்தவர் என்ற பெருமையை பெறுவார் . விராட் கோலி 214 ஓடிஐ போட்டிகளில் பங்கேற்று 38 சதங்கள் மற்றும் 48 அரைசதங்களை விளாசியுள்ளார். இந்த சாதனையை நிறைய வீரர்கள் நிகழ்த்தியது இல்லை. விராட் கோலி இந்த சாதனையில் 6வது இந்தியராக இணைய உள்ளார்.
ஆஸ்திரேலிய அணி இவருக்கு ரன்களை விளாச ஒரு பிடித்த மற்றும் சாதகமான அணியாகும். எனவே ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தற்போதைய ஒருநாள் தொடரில் இந்த சாதனையை நிகழ்த்தி பெருமை மேல் பெருமையை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.