இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 , 4 டெஸ்ட், 3 ஓடிஐ போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடர் 1-1 என டிரா ஆனது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-2 என இந்திய அணி முதன்முறையாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று உலகச்சாதனையை படைத்தது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்டில் இன்று(ஜனவரி 15) இந்திய நேரப்படி காலை 8:50 ற்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் கலீல் அகமதுவிற்கு பதிலாக முகமது சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டார். முகமது சிராஜிற்கு இந்த ஒருநாள் போட்டி அறிமுக சர்வதேச ஒருநாள் போட்டியாகும். ஆஸ்திரேலிய அணியில் எவ்வித மாற்றமும் இன்றி வீரர்கள் களமிறங்கினர்.
ஆரோன் ஃபின்ச் மற்றும் அலெக்ஸ் கேரி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இவருடன் முதல் பவர்பிளே ஓவரில் முகமது ஷமி பந்துவீச்சை மேற்கொண்டார். புவனேஸ்வர் குமார் வீசிய 7வது ஓவரின் கடைசி பந்தில் ஆரோன் ஃபின்ச் 6 ரன்களில் போல்ட் ஆனார். அடுத்த ஓவரில் ஷமி வீசிய பந்தில் அலெக்ஸ் கேரி தவானிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 27 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகளுடன் 18 ரன்களை அடித்தார்.
16வது ஓவரில் கவாஜா மற்றும் ஷான் மார்ஸ் பங்களிப்பில் ஆஸ்திரேலிய அணிக்கு 50 ரன்கள் வந்தது. 19வது ஓவரின் 3வது பந்தில் கவாஜ் , ரவீந்திர ஜடேஜா-விடம் ரன் அவுட் ஆனார். இவர் மொத்தமாக 23 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகளுடன் 21 ரன்களை எடுத்தார். நிதானமாக விளையாடிய ஷான் மார்ஸ் 24வது ஓவரின் 5 வது பந்தில் தனது 14வது சர்வதேச அரை ஓடிஐ அரை சதத்தை விளாசினார்.
ஜடேஜா வீசிய 28வது ஓவரின் 2வது பந்தில் ஹான்ட்ஸ் கோம் , தோனியிடம் ஸ்டம்ப் ஹிட் ஆனார். இவர் மொத்தமாக 22 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 20 ரன்களை அடித்தார். இதுவரை ஜடேஜா-வின் பந்துவீச்சில் எம்.எஸ்.தோனி 18முறை ஸ்டம்ப் ஹிட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
36.2 வது ஓவரில் ஸ்டாய்னிஸ் மற்றும் ஷான் மார்ஸ் பங்களிப்பில் மற்றொரு 50 ரன்கள் பார்ட்னர் ஷப் ஆஸ்திரேலிய அணிக்கு வந்தது. முகமது ஷமி வீசிய 34வது ஓவரின் 4வது பந்தில் ஸ்டாய்னிஸ் , தோனியிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 36 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகளுடன் 29 ரன்களை எடுத்தார். பின்னர் களமிறங்கிய மேக்ஸ்வெல் ஷான் மார்ஸ-உடன் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். 40 ஓவரின் 4வது பாலில் ஷான் மார்ஸ் தனது 7வது சர்வதேச சதத்தினை விளாசினார்.
48வது ஓவரில் புவனேஸ்வர் குமார் வீசிய பந்தில் , மேக்ஸ் வெல் தினேஷ் கார்த்திக்-டம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 37 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 48 ரன்களை அடித்தார். பின்னர் அதே ஓவரில் இறுதி பந்தில் ஷான் மார்ஸ் , ஜடேஜா-விடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 123 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 131 ரன்களை அடித்தார். இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்த ஆஸ்திரேலிய வீரர்களின் பட்டியலில் ஷான் மார்ஸ் 5வது இடத்தைப் பிடித்தார்.
49வது ஓவரில் முகமது ஷமி வீசிய பந்தில் ரிச்சர்ட்சன் , தவானிடம் 2 ரன்களில் கேட்ச் ஆனார். பின்னர் புவனேஸ்வர் குமார் வீசிய 50வது ஓவரின் முதல் பந்தில் சிடில் , கோலியிடம் கேட்ச் ஆகி டக் அவுட் ஆனார். ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் அடித்தது. இந்திய அணி சார்பில் புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். அறிமுக வீரர் முகமது சிராஜ் 10 ஓவர்களை வீசி விக்கெட் ஏதுமின்றி 76 ரன்களை தனது பந்துவீச்சில் குடுத்தார். தனது அறிமுக போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர்கள் என்ற மோசமான பெருமையை பெற்றார் முகமது சிராஜ்.
299 என்ற இலக்குடன் இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் தவான் களமிறங்கினர். தவான் மற்றும் ரோகித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். 8வது ஓவரில் பெரண்டர்ஆப் வீசிய பந்தில் தவான் , கவாஜா-விடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 28 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 32 ரன்களை அடித்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி ரோகித் சர்மா-வுடன் கைகோர்த்து விளையாட ஆரம்பித்தார். 17வது ஓவரில் ரோகித்-கோலி பார்ட்னர் ஷிப்பில் 50 ரன்கள் வந்தது.
18வது ஓவரில் ஸ்டாய்னிஸ் வீசிய பந்தில் ரோகித் சர்மா , ஹான்ட்ஸ் கோம்-டம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 52 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 43 ரன்களை அடித்தார். பின்னர் களமிறங்கிய ராயுடு , கோலியுடன் சேர்ந்து நிதானமான விளையாடினார். 30வது ஓவரின் 3 வது பந்தில் ராயுடு-கோலி பங்களிப்பில் 50 ரன்கள் வந்தது. 31வது ஓவரில் கோலி தனது 49 வது சர்வதேச ஓடிஐ அரை சதத்தை விளாசினார். அதேஓவரில் மேக்ஸ்வெல் வீசிய 3 வது பந்தில் ராயுடு, ஸ்டாய்னிஸ்-டம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 36 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகளுடன் 24 ரன்களை அடித்தார்.அதன்பின் தோனி களமிறங்கினார்.
38வது ஓவரில் தோனி-கோலியின் பார்ட்னர் ஷிப்பில் 50 ரன்கள் வந்தது. 43வது ஓவரில் விராட் கோலி தனது 39வது சர்வதேச ஓடிஐ சதத்தினை விளாசினார். இந்திய சேஸிங்கில் இது கோலியின் 24வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் கோலியின் கடைசி 19 ஓடிஐ இன்னிங்ஸில் இந்த சதம் 9வது சதமாகும். ரிச்சர்ட்சன் 44வது ஓவரின் 4வது பந்தில் விராட் கோலி , மேக்ஸ்வெல்-டம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 112 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 104 ரன்களை அடித்தார். அதன்பின் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார்.
50வது ஓவரின் முதல் பந்தில் தோனி சிக்ஸரை விளாசி தனது 69வது அரை சதத்தை விளாசினார். இந்திய அணி 50வது ஓவரின் 2வது பந்தில் இலக்கை எட்டி 6விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 ஒருநாள் போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வென்று 1-1 என இந்தியா சமன் செய்துள்ளது. தினேஷ் கார்த்திக் 25 ரன்களுடனும் , தோனி 55 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். அடிலெய்டு ஆடுகளத்தில் இந்த சேஸிங் இரண்டாவது அதிகபட்ச சேஸிங் ஆகும். சிறப்பாக விளையாடி சதமடித்த விராட் கோலி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.
மூன்றாவது மற்றும் தொடரை தீர்மானிக்கும் போட்டியானது மெல்போர்ன் ஆடுகளத்தில் ஜனவரி 18 அன்று நடைபெறவுள்ளது.