ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளி அன்று பெர்த்தில் தொடங்கியது.ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்கள் அடித்தது. நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 63 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை எடுத்திருந்தது.
இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்க இந்திய அணி வீரர்கள் விராட் கோலி மற்றும் ரகானே களமிறங்கினர். இன்றைய நாளின் தொடக்க ஓவரில் , நாதன் லயான் வீசிய 4வது பந்தில் ரகானே டிம் பெய்ன்-டம் கேட்ச் ஆனார். ரகானே மொத்தமாக 105 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸருடன் 51 ரன்களை அடித்தார். பின்னர் களமிறங்கிய ஹனுமா விகாரி , விராட் கோலியுடன் கைகோர்த்து விளையாட தொடங்கினார் .
இந்திய அணி தனது 80வது ஓவரில் 200 ரன்களை கடந்தது. ஆரம்பம் முதலே பொறுமையாக விளையாடிய கேப்டன் விராட் கோலி 81 வது ஓவரில் 2வது பந்தில் பவுண்டரியை விளாசி தனது 25வது சர்வதேச டெஸ்ட் சதத்தினை விளாசி தள்ளினார். இவர் தனது 25வது சதத்தினை விளாச 127 இன்னிங்ஸ் மட்டுமே எடுத்துக் கொண்டார். உலகில் டான் பிராட் மேனிற்கு பிறகு விராட் கோலியே குறைவான இன்னிங்ஸில் 25 சதத்தினை விளாசியுள்ளார்.
மேலும் இவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டெஸ்ட்டில் மட்டும் 7 சதங்களை விளாசியுள்ளார்.அதில் 6 சதங்கள் ஆஸ்திரேலியா-வில் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அதிக சதங்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார். கடைசியாக சச்சின் டெண்டுல்கர் 1992ல் பெர்த் ஆடுகளத்தில் சதமடித்தார். அதற்குப் பிறகு 2018ல் விராட் கோலி சதமடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் ஆசிய பேட்ஸ்மேன் ஒரே வருடத்தில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா , இங்கிலாந்து என மூன்று நாடுகளிலும் சதமடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பு விராட் கோலியை எங்கள் மண்ணில் சதம் விளாச விட மாட்டோம் என்று பேட் கமின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.
பொறுமையாக விளையாடிய ஹனுமா விகாரி , ஹசில்வுட் வீசிய பந்தில் டிம் பெய்ன்-டம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 46 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 20 ரன்களை அடித்தார்.
நிதானமாக அணியின் ரன்களை உயர்த்திக் கொண்டிருந்த கேப்டன் விராட் கோலி 93வது ஓவரில் பேட் கமின்ஸ் வீசிய கடைசி பந்தில் ஹாண்ட்ஸ் கோம்-டம் கேட்ச் ஆனார். ஆனால் இந்த கேட்ச் தரையில் பட்டு பிடித்தது போலவே கேமிராவில் தெரிந்தது. இதனால் மூன்றாவது நடுவரிடம் முறையிடப்படடது
இவ்வாறு மூன்றாவது நடுவருக்கு செல்லும் போது கள நடுவர் தன்னுடைய முடிவை அறிவிக்க வேண்டும். கள நடுவர் அவுட் என மூன்றாம் நடுவருக்கு சைகை காட்டினார். ஏனெனில் கேட்ச் பிடித்த ஃபில்டர் தான் பிடித்தாக கூறியதால் அவுட் என்று கள நடுவர் கூறினார். ஃபீல்டரிடம் விசாரித்து முடிவை அறிவிக்க எதற்கு 3ஆம் நடுவரிடம் அப்பில் செய்ய வேண்டும் என்ற பல கேள்விகள் கிரிக்கெட் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இந்த விக்கெட் மோசடியால் விராட் கோலி மிகவும் கோபத்துடன் பெவிலியன் திரும்பினார். இதேபோல் 2008ல் சிட்னி ஆடுகளத்தில் கங்குலிக்கு , ரிக்கி பாண்டிங்-கே அவுட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி மொத்தமாக 257 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 123 ரன்களை குவித்தார். பின்னர் களமிறங்கிய முகமது ஷமி தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே நாதன் லயான் ஓவரில் டிம் பெய்னிடம் கேட்ச் ஆனார்
இந்திய அணி உணவு இடைவேளையில் 7 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்களை எடுத்தது. இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விட 74 ரன்கள் பின்தங்கியுள்ளது.
பின்னர் வந்த இஷாந்த் ஷர்மா-வும் 11 பந்துகளை எதிர்கொண்டு 1 ரன்னில் நாதன் லயானிடம் காட்டன் போல்ட் ஆகி வெளியேறினார்
அதன்பின் நிலைத்து ஆடிய ரிஷப் பன்ட் , நாதன் லயான் வீசிய பந்தில் ஸ்டார்கிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 51 பந்தில் 2 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸருடன் 36 ரன்களை அடித்தார். பின்னர் அதே ஓவரில் ஐந்தாவது பந்தில் பூம்ரா கவாஜா-விடம் கேட்ச் ஆகி 4 ரன்களில் வெளியேறினார்.
இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 106 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 283 ரன்களை அடித்தது. ஆஸ்திரேலியா அணி சார்பில் நாதன் லயான் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவர் இந்தியாவிற்கு எதிராக மட்டும் 7 முறை 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஸ்ட்ராக் மற்றும் ஹசில்வுட் தலா 2 விக்கெட்டுகளையும் பேட் கமின்ஸ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலிய அணியை விட 43 ரன்கள் பின்தங்கியுள்ளது.
இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரெலிய அணி தொடக்க வீரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 12வது ஓவரில் முகமது ஷமி வீசிய பந்து நேரடியாக ஆரோன் ஃபின்ச்-ன் விரலை தாக்கியது . இதனால் அவர் ரிட்டர்ன் ஹார்ட் ஆனார்.
தேநீர் இடைவேளையில் ஆஸ்திரேலிய அணி 12 ஓவர்களை எதிர்கொண்டு விக்கெட் இழப்பின்றி 33 ரன்கள் எடுத்திருந்தது
18வது ஓவரில் பூம்ரா வீசிய பந்தில் மார்கஸ் ஹாரிஸ் போல்ட் ஆனார். இவர் மொத்தமாக 56 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகளுடன் 20 ரன்களை அடித்தார். 21வது ஓவரில் ஷமி வீசிய பந்தில் ஷான் மார்ஸ் , ரிஷப் ஃபன்ட்-டிடம் கேட்ச் ஆனார்.
26வது ஓவரில் இஷாந்த் சர்மா வீசிய பந்தில் பீட்டர் ஹான்ட்ஸ்கோம் எல்.பி.டபுள்யு ஆனார். இவர் மொத்தமாக 14 பந்தில் 3 பவுண்டரிகளுடன் 13 ரன்களை அடித்தார். 40 வது ஓவரில் முகமது ஷமி வீசிய பந்தில் டிராவிஸ் ஹெட் , இஷாந்த் ஷர்மா-விடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 49 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 19 ரன்களை அடித்தார்.
மூன்றாம் நாள் ஆட்டமுடிவில் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்ஸில் 48 ஓவர்களை எதிர்கொண்டு 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை அடித்தது.ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை விட 175 ரன்கள் முன்னிலையில் உள்ளது. கவாஜா 41 ரன்களுடனும் , டிம் பெய்ன் 8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.