ஆஸ்திரேலியா vs இந்தியா 2018/19: மூன்றாவது ஒருநாள் போட்டியின் மேட்ச் ரிப்போர்ட்

Two captain's during toss
Two captain's during toss

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 , 4 டெஸ்ட், 3 ஓடிஐ போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடர் 1-1 என டிரா ஆனது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-2 என இந்திய அணி முதன்முறையாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று உலகச்சாதனையை படைத்தது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரு ஒருநாள் போட்டியில் தலா ஒவ்வொரு போட்டிகளில் வென்று சமநிலையில் உள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பௌலிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. முகமது சிராஜ்-ற்கு பதிலாக விஜய் சங்கர் தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் இடம்பெற்றார். குல்தீப் யாதவ்-ற்கு பதிலாக யுஜ்வேந்திர சகாப்தம் இடம்பெற்றார். ராயுடு-விற்கு பதிலாக கேதார் ஜாதவ் களமிறங்கினார். ஆஸ்திரேலிய அணியில் நாதன் லயான்-ற்கு பதிலாக ஜாம்பா இடம் பெற்றார். பெகான்ட்ஆப்-ற்கு பதிலாக ஸடேன்லெக் இடம் பெற்றார்.

மழையினால் ஆட்டம் இந்திய நேரப்படி காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அலெக்ஸ் கேரி , ஆரோன் ஃபின்ச் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். முதல் ஒவரை புவனேஸ்வர் குமார் வீசினார். ஆட்டம் தொடங்கி இரண்டு பந்து வீசப்பட்ட போது மழையினால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. பின்னர் 8:25ற்கு போட்டி தொடங்கியது. முதல் பவர்பிளே முகமது ஷமி மற்றொரு பந்துவீச்சாளராக பந்துவீச்சை மேற்கொண்டார். புவனேஸ்வர் குமார் வீசிய 3வது ஓவரின் 5வது பந்தில் , அலெக்ஸ் கேரி 5 ரன்களில் விராட் கோலி-யிடம் கேட்ச் ஆனார். சற்று நிலைத்து விளையாட வேண்டும் என்ற நோக்கில் ஆடிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் 9வது ஓவரில் புவனேஸ்வர் குமார் வீசிய பந்தில் 14 ரன்களில் எல்.பி.டபுள்யு ஆனார்.

Bhuvi
Bhuvi

ஆஸ்திரேலிய அணி தனது முதல் பவர்பிளே (1-10 ஓவர்கள்) முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 30 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் களமிறங்கிய ஷான் மார்ஸ் மற்றும் கவாஜா சற்று பொறுமையாக விளையாடினர். 20வது ஓவரில் இவர்களது பார்ட்னர் ஷிப்பில் 50 ரன்கள் வந்தது. சகால் வீசிய 23வது ஓவரின் முதல் பந்தில் ஷான் மார்ஸ், தோனியிடம் ஸ்டம்ப் ஹிட் ஆனார். இவர் மொத்தமாக 54 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகளுடன் 39 ரன்களை அடித்தார். பின்னர் அதே ஓவரில் நான்காவது பந்தில் கவாஜா , சகால்-டம் காட்டன் போல்ட் ஆனார். இவர் மொத்தமாக 51 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகளுடன் 34 ரன்களை அடித்தார்.

சகால் வீசிய 30வது ஓவரின் 3வது பந்தில் ஸ்டாயனிஸ் 10 ரன்களில் , ரோகித் சர்மா-விடம் கேட்ச் ஆனார். சற்று அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் , முகமது ஷமி வேகத்தில் 35ஓவரின் 5 வது பந்தில் புவனேஸ்வர் குமார்-ரிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 19 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகளுடன் 29 ரன்களை அடித்தார். பின்னர் களமிறங்கிய ஹான்ட்ஸ் கோம், ரிச்சர்ட்சன் நிதானமாக விளையாடி வந்தனர். 42வது ஓவரின் 5வது பந்தில் ஹான்ட்ஸ் கோம் தனது மூன்றாவது ஒருநாள் அரை சதத்தை அடித்தார். சகால் வீசிய 44வது ஓவரின் 4வது பந்தில் ரிச்சர்ட்சன் 16 ரன்களில் கேதார் ஜாதவ்-விடம் கேட்ச் ஆனார். சகால் வீசிய 46வது ஓவரின் கடைசி பந்தில் சிறப்பாக விளையாடிய ஹான்ட்ஸ் கோம் , எல.பி.டபுள்யு ஆனார். இவர் மொத்தமாக 63 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகளுடன் 58 ரன்களை அடித்தார்.

Chahal
Chahal

சகால் வீசிய 48வது ஓவரின் 4வது பாலில் ஜாம்பா 8 ரன்களில் , விஜய் சங்கர்-ரிடம் கேட்ச் ஆனார். சகாலின் இந்த விக்கெட்டின் மூலம் ஆஸ்திரேலியாவில் , ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தார்.அத்துடன் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசிய இந்தியர்கள் பட்டியலிலும் ஏழாவது இடத்தை பிடித்தார். இம்ரான் தாஹிருக்குப் பிறகு தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா என இரு நாடுகளிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். அதுமட்டுமல்லாமல் அந்நிய மண்ணில் இரு 5-விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

Chahal
Chahal

முகமது ஷமி வீசிய அடுத்த ஓவரில் ஸ்டேன்லெக் போல்ட் ஆனார். ஆஸ்திரேலிய அணி மொத்தமாக 49.4 ஓவரை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் சகால் 6 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார் , முகமது ஷமி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். சகாலி-ற்கு ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் இதுவே அதிக பட்ச விக்கெட்டுகள் இதுவே ஆகும்.

231என்ற இலக்குடன் இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் தவான் களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரை ரிச்சர்ட்சன் வீசினார். சிடில் வீசிய 6 ஓவரின் கடைசி பந்தில் ரோகித் சர்மா 9 ரன்களில் ஷான் மார்ஸ்-டம் கேட்ச் ஆனார். மிகவும் பொறுமையாக விளையாடிய தவான் ஸ்டாய்னிஸ் வீசிய 17வது ஓவரின் 2வது பந்தில் காட்டன் போல்ட் ஆனார். இவர் மொத்தமாக 46 பந்துகளில் 23 ரன்களை அடித்தார்.

MSD
MSD

28வது ஓவரில் தோனி-கோலி பங்களிப்பில் 50 ரன்கள் வந்தது. ரிச்சர்ட்சன் வீசிய 30வது ஓவரின் கடைசி பந்தில் கோலி 46 ரன்களில் , அலெக்ஸ் கேரி-டம் கேட்ச் ஆனார். பின்னர் களமிறங்கிய கேதார் ஜாதவ் , தோனியுடன் சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தினார். 38வது ஓவரில் தோனி தனது 70வது சர்வதேச ஒருநாள் அரைசதத்தை விளாசினார். பின்னர் கேதார் ஜாதவ் 47வது ஓவரில் தனது 3வது சர்வதேச ஓடிஐ சதத்தினை விளாசினார்.தோனி-கேதார் ஜாதவ் பார்ட்னர் ஷிப்பில் மட்டும் இந்திய 121 ரன்கள் வந்தது.

Kedar jadhav
Kedar jadhav

இந்த ஜோடியின் மூலம் இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 49.2வது ஓவரில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த இலக்கை எட்டி வெற்றி பெற்றது இந்திய அணி. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஓடிஐ தொடரை 2-1 என வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக சகால் தேர்வு செய்யப்பட்டார். தொடர் ஆட்டநாயகனாக தோனி தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now