ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த புதன் அன்று மெல்போர்ன்-னில் தொடங்கியது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் அடித்து டிக்ளர் செய்தது. ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 151 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஃபாலோ ஆன் ஆனது . ஆனால் இந்திய அணி ஃபாலோ ஆன் தராமல் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. மூன்றாம் நாள் ஆட்டமுடிவில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்திருந்தது.
அதைத்தொடர்ந்து நான்காம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த இந்திய அணி வீரர்கள் மயான்க் அகர்வால் மற்றும் ரிஷப் ஃபன்ட் சற்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 33வது ஓவரில் பேட் கமின்ஸ் வீசிய கடைசி பந்தில் மயான்க் அகர்வால் போல்ட் ஆனார். இவர் மொத்தமாக 101 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 42 ரன்களை அடித்தார். பின்னர் களமிறங்கிய ஜடேஜா-வும் நிலைத்து ஆடாமல் பேட் கமின்ஸ் வீசிய பந்தில் கவாஜா-விடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 6 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரியுடன் 5 ரன்களை அடித்தார். பின்னர் அடுத்த ஓவரிலேயே ஹசில்வுட் வீசிய பந்தில் ரிஷப் ஃபன்ட் , டிம் பெய்ன்-டம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 43 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர்களுடன் 33 ரன்களை அடித்தார். ரிஷப் ஃபன்ட் விக்கெட்டுடன் இந்திய அணி டிக்ளர் செய்தது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் மொத்தமாக 37 ஓவர்களை எதிர்கொண்டு 8 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் அடித்து டிக்ளர் செய்தது . ஆஸ்திரேலிய அணி சார்பில் பேட் கமின்ஸ் 6 விக்கெட்டுகளையும் , ஹசில்வுட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
417 ரன்கள் என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரர்கள் களமிறங்கினர். 2வது ஓவரில் பூம்ரா வீசிய பந்தில் ஆரோன் ஃபின்ச் 3 ரன்களில் விராட் கோலி-யிடம் கேட்ச் ஆனார். அதன்பின் 9 வது ஓவரில் ஜடேஜா சுழலில் மார்கஸ் ஹாரிஸ் , மயான்க் அகர்வால்-லிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 27 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரியுடன் 13 ரன்களை அடித்தார். ஆஸ்திரேலிய அணி உணவு இடைவேளையில் 2 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்திருந்தது.
21 வது ஓவரில் முகமது ஷமி வேகத்தில் எல்.பி.டபுள்யு ஆனார் கவாஜா. இவர் மொத்தமாக 59 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 33 ரன்களை அடித்தார். பின்னர் களமிறங்கிய ஷான் மார்ஷ் டிராவிஸ் ஹெட்-வுடன் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்த ஆரம்பித்தார். 33 வது ஓவரில் ஷான் மார்ஸ் எல்.பி.டபுள்யு ஆனார். இவர் மொத்தமாக 72 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 44 ரன்களை அடித்தார். பின்னர் களமிறங்கிய மிட்செல் மார்ஷ்-வும் 10 ரன்களில் ஜடேஜாவின் சுழலில் கோலியிடம் கேட்ச் ஆனார். ஆஸ்திரேலிய அணி தேநீர் இடைவேளையில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்களை அடித்திருந்தது.
அதன்பின் டிம் பெய்ன் கேப்டனாக தனது பொறுப்பான ஆட்டத்தை ஆடினார். 54 வது ஓவரில் இஷாந்த் சர்மா வீசிய பந்தில் டிராவிஸ் ஹெட் போல்ட் ஆனார். இவர் மொத்தமாக 92 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகளுடன் 34 ரன்களை அடித்தார். நிதானமாக ஆடிய டிம் பெய்ன்-னும் ஜடேஜா சுழலில் ரிஷப் ஃபன்ட்-டிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 67 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகளுடன் 26 ரன்களை அடித்தார். ரிஷப் ஃபன்ட்-ன் இந்த கேட்சினால் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக (19 கேட்சுகள்) கேட்சினை பிடித்த 3வது இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெற்றார். 71வது ஓவரில் முகமது ஷமி வீசிய பந்தில் ஸ்டார்க் , போல்ட் ஆனார். இவர் மொத்தமாக 27 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகளுடன் 18 ரன்களை அடித்தார்.
இரண்டு விக்கெட்டுகள் மட்டும்தான் இருந்ததால் இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட நேர்த்திலிருந்து மேலும் அரைமணி நேரம் அளிக்கப்பட்டது. அதாவது 8 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்ட 90 ஓவர்களுடன் அளிக்கப்பட்டது. சிறப்பாக விளையாடிய பேட் கமின்ஸ் தனது 2வது சர்வதேச டெஸ்ட் அரைசதத்தை விளாசினார். அத்துடன் தனது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்களையும் கடந்தார். இந்த டெஸ்ட்டில் 2வது இன்னிங்சில் பேட் கமின்ஸ் தனது தனது டெஸ்ட் கிரிக்கெட்டின் அதிகபட்ச விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய அணி இன்றைய ஆட்டநேர முடிவில் 85 ஓவர்களை எதிர்கொண்டு 8 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் அடித்தது. இந்திய அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் பூம்ரா, ஷமி தலா 2 விக்கெட்டுகளையும், இஷாந்த் ஷர்மா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற இன்னும் 141 ரன்கள் தேவை. பேட் கமின்ஸ் 61 ரன்களுடனும் , நாதன் லயான் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்