ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி கடந்த வியாழன் அன்று சிட்னி-யில் தொடங்கியது. சிட்னியில் நடைபெறும் இன்றைய நாள் பின்க் டே டெஸ்ட் என்பதால் ஆடுகளம் முழுவதும் இன்று பின்க் வண்ணமயமாக காட்சியளித்தது.
இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் அடித்து டிக்ளர் செய்தது.நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்களை எடுத்திருந்தது.
இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்க ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கவாஜா மற்றும் மார்கஸ் ஹாரிஸ் களமிறங்கினர். 22வது ஓவரில் குல்தீப் யாதவ் வீசிய சுழலில் கவாஜா , புஜாரா-விடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 71 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகளுடன் 27 ரன்களை அடித்தார். கவாஜா - மார்கஸ் ஹாரிஸ் பார்ட்னர் ஷிப்பில் ஆஸ்திரேலிய அணிக்கு 71 ரன்கள் வந்தது.
பொறுமையாக விளையாடி வந்த மார்கஸ் ஹாரிஸ் 25வது ஓவரில் தனது இரண்டாவது சர்வதேச அரை சதத்தை அடித்தார். ஆஸ்திரேலிய அணி உணவு இடைவேளையில் 1 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்திருந்தது. 43வது ஓவரில் ஜடேஜா-வின் சுழலில் சிறப்பாக விளையாடி வந்த மார்கஸ் ஹாரிஸ் போல்ட் ஆனார். இவர் மொத்தமாக 120 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டரிகளுடன் 79 ரன்களை அடித்தார். பின்னர் களமிறங்கிய ஷான் மார்ஸ் நிலைத்து விளையாடமல் ஜடேஜா சுழலில் ரகானே-விடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 13 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகளுடன் 8 ரன்களை அடித்தார்.
சற்று நிலைத்து விளையாடிய மாரனஸ் லபுசேன்-ம் , முகமது ஷமி வேகத்தில் ரகானே-விடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 95 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரிகளுடன் 38 ரன்களை அடித்தார். 67வது ஓவரில் குல்தீப் யாதவ் வீசிய பந்தில் டிராவிஸ் ஹெட் காட்டன் போல்ட் ஆனார். இவர் மொத்தமாக 56 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகளுடன் 20 ரன்களை அடித்தார். ஆஸ்திரேலிய அணி தேநீர் இடைவேளையில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்திருந்தது.
69வது ஓவரில் குல்தீப் சுழலில் டிம் பெய்ன் , போல்ட் ஆனார். இவர் மொத்தமாக 14 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரியுடன் 5 ரன்களை அடித்தார். 83வது ஓவரில் போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து மழை குறுக்கிட்டதால் இன்றைய ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இன்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியாஸ்திரேலியா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் , ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் , முகமது ஷமி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விட 386 ரன்கள் முன்னிலையில் உள்ளது. பேட் கமின்ஸ் 25 ரன்களுடனும் , ஹாண்ட்ஸ் கோம் 28 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.