பரபரப்பான போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி !

Dhawan scored 42-ball 76
Dhawan scored 42-ball 76

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. பும்ராஹ், புவனேஷ் மற்றும் அஹமது ஆகிய வேகபந்து வீச்சாளர்களும், குல்தீப் மற்றும் க்ருனால் பாண்டியா ஆகிய சுழல் பந்து வீச்சாளர்களும் அணியில் இடம் பெற்றனர்.

டார்சி ஷார்ட் மற்றும் கேப்டன் பின்ச் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 24 ஆக இருந்தபோது டார்சி ஷார்ட் அவுட் ஆனார். ஆஸ்திரேலியாவில் தன்னுடைய முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்தார் கலீல் அஹமது. நிதானமாக ஆடிய பின்ச் 24 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். 10 ஓவர்களில் 75 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்திருந்தது ஆஸ்திரேலியா.

அதிரடியாக ஆடிய க்றிஸ் லின் 20 பந்துகளில் 4 சிக்சர்கள் உட்பட 37 ரன்கள் குவித்தார். பின்ச் மற்றும் லின் விக்கெட்களை குல்தீப் எடுத்தார். பின்னர் மேக்ஸ்வெல் மற்றும் ஸ்டாய்னிஸ் ஜோடி அதிரடியை தொடங்கியது. 14 வது ஓவரைப் பாண்டியா வீசினார். அந்த ஓவரில் 3 சிக்ஸ் உட்பட 23 ரன்கள் எடுத்தார் மேக்ஸ்வெல். 16.1 ஓவர்களில் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 153-3 ஆக இருந்தபோது மழை குறுக்கிட்டது.

பின்னர் ஆட்டம் 17 ஓவராகக் குறைக்கப்பட்டது. கடைசி ஓவரை வீசிய பும்ராஹ் 6 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்தார். 17 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா. மேக்ஸ்வெல் 24 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். ஸ்டாய்னிஸ் 19 பந்துகளில் 33 ரன்கள் எடுத்துக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

17 ஓவர்களில் 174 ரன்கள் டார்கெட் ஆக இந்திய அணிக்கு (DLS) முறையில் நிர்ணயக்கப்பட்டது. ரோஹித் மற்றும் தவான் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். 7 ரன்கள் எடுத்திருந்தபோது ரோஹித் ஷர்மா அவுட் ஆனார். பின்னர் இறங்கிய ராகுல் 13 ரன்னிலும், கோஹ்லி 4 ரன்னிலும் ஆடம் ஜம்பா பந்தில் வெளியேறினர். ஒருபுறம் விக்கெட்கள் சரிய, மறுபுறம் ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்களைத் துவம்சம் செய்தார் தவான். 10 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உட்பட 42 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார் தவான்.

தவான் விக்கெட்டிற்கு பிறகு கார்த்திக் மற்றும் பண்ட் ஜோடி சேர்ந்தனர். 13 ஓவரில் இந்தியாவின் ஸ்கோர் 114/4 ஆக இருந்தது. 14 வது ஓவரை ஆன்ட்ருவ் டை வீசினார். அந்த ஓவரில் 25 ரன்கள் எடுத்தது கார்த்திக்-பண்ட் ஜோடி. 18 பந்துகளில் 35 ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்டது. 15 வது ஓவரில் 11 ரன்கள் எடுத்தனர் கார்த்திக்-பண்ட் ஜோடி. 15 பந்துகளில் 20 ரன்கள் எடுத்திருந்தபோது பண்ட் ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்டாய்னிஸ் அந்த ஓவரை வீசினார். முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்தார் க்ருனால் பாண்டியா. இரண்டாவது பந்தில் ரன் எடுக்கப்படவில்லை. மூன்றாவது பந்தை தூக்கி அடிக்க மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் க்ருனால் பாண்டியா.

3 பந்துகளில் 1 1 ரன்கள் தேவை. அடுத்த பந்தில் கார்த்திக் அவுட். ஸ்லொவ் பந்தை தூக்கி அடித்து அவுட் ஆனார் கார்த்திக். 13 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார் கார்த்திக். இறுதியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1 – 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது.

Quick Links

App download animated image Get the free App now