உலககோப்பை தொடர் வரும் 30 ஆம் தேதி முதல் துவங்கி நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே பல அணிகளின் முக்கிய வீரர்கள் காயம் காரணமாக அணியிலிருந்து விலகியிருப்பதால் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை அறிவித்தது அந்நாட்டு நிர்வாகம். இந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய பந்துவீச்சாளாரான ஜே ரிச்சர்ட்சன் தற்போது காயம் காரணமாக உலககோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார.
உலககோப்பை தொடருக்கான ஒவ்வொரு நாடுகளும் தங்களது அணிகளை அறிவித்ததிலிருந்தே அதில் பல முண்ணனி வீரர்கள் இடம் பெறவில்லை என சர்ச்சைகள் எழுந்தன. உதாரணமாக இந்தியாவில் ராயுடு மற்றும் ரிஷப் பண்ட் , இலங்கை அணியில் அகிலா தனஜெயா , பாகிஸ்தான் அணியில் அமீர், இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர் என முக்கிய வீரர்கள் இடம்பெறாதது பல சர்ச்சைகளை கிளப்பியது. இருந்தபோதிலும் இவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சமீபத்தில் தென்னாப்ரிக்க அணகயின் வேகப்பந்து வீச்சாளரான நோர்ட்ஜி காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக அணியில் கிரிஷ் மோரிஷுக்கு இடமளிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி இந்திய அணியின் முக்கிய வீரரான கேதர் ஜாதவ் ஐபிஎல் பேட்டியில் விளையாடும் போது காயம் ஏற்பட்டதால் அவரும் உலககோப்பை தெடரில் பங்கேற்பது சந்தேகம் தான். ஒருவேளை அவர் உலககோப்பை தொடரில் பங்கேற்காவிட்டால் அவருக்கு பதிலாக அம்பத்தியு ராயுடு அல்லது பந்துவீச்சாளர் யாரேனும் ஒருவர் அணியில் சேர்க்கப்படுவர்.
இந்நிலையில் தற்போது ஜே ரிச்சர்ட்சன் காயம் காரணமாக உலககோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். அவர் பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடும் போது பீல்டிங்ல் ஈடுபட்ட போது அவர் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அந்த காயம் குணமாகாததால் தற்போது உலககோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார் அவர்.
உலககோப்பை தொடர் முடிந்த பின் நடைபெறவுள்ள இங்கிலாந்து அணிக்கெதிரான ஆஷஸ் தொடரின் அணியில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரின் இழப்பு ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய இழப்பாகவே கருதப்படுகிறது. இவர் இந்த வருடம் 12 போட்டிகளில் பங்கேற்று 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய பயிற்சியாளர் கூறுகையில், “ ரிச்சர்ட்சன் காயத்திலிருந்து விரைவில் மீள்வார் என எதிர்பார்த்தோம். அதனால் அவரை வலைப்பயிற்சியில் ஈடுபடுத்தும் போதுதான் அவர் இன்னும் முழுமையாக குணமாகவில்லை என எங்களுக்கு தெரியவந்தது. எனவே அவர் ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய XI அணியில் அவர் கட்டாயம் இடம் பெறுவார் என நம்புகிறோம்” எனவும் கூறினார்.
இந்நிலையில் ஜே ரிச்சர்ட்சன்-க்கு மாற்று வீரராக பல வீரர்களின் பெயர்கள் அணி நிர்வாகத்திடம் முன்வைக்கப்பட்டன. அதிலிருந்து கேன் ரிச்சர்ட்சன் மாற்று வீரராக அவருக்கு பதில் உலககோப்பை அணியில் இடம் பெறுவார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. கேன் ரிச்சர்ட்சன் தற்போது நடந்து முடிந்த பிபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீசி அசத்தினார். அந்த தொடரின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரரும் இவரே. இது இவரை அணியில் தேர்ந்தெடுக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இம்முறை ஸ்மித் மற்றும் வார்னர் அணிக்கு திரும்பியுள்ளது, ஆஸ்திரேலிய ஆணி பழைய பார்முக்கு வந்துள்ளது என பலம் வாய்ந்த அணியாக விலங்குகிறது ஆஸ்திரேலியா. இதில் கேன் ரிச்சர்ட்சன் வருகை அணிக்கு கூடுதல் பலத்தினை சேர்க்கிறது.