சர்ச்சைகளின் மன்னர்கள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் 

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி என்றாலே ஒரு காலத்தில் யாரும் அசைக்க முடியாத அணியாக இருந்தது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் வெற்றி எப்போதுமே மகத்தான வெற்றியாக திகழும். ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை வீழ்த்துவது மற்ற கிரிக்கெட் அணிகளுக்கு கடும் சவாலாக தான் இருக்கும்.

ஆஸ்திரேலியா நாட்டின் தேசிய விளையாட்டு கிரிக்கெட் தான். அப்படி இருக்க அவர்கள் எப்படி விளையாடுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இப்படி பட்ட ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, வெற்றி பெற வேண்டும் என்று ஆட்ட மைதானத்தில் பல குறுக்கு வழிகளையும் கையாண்டு உள்ளனர். இப்படி குறுக்கு வழிகளை கையாண்டு பல சர்ச்சைகளுக்கும் உள்ளானார்கள். இதனால் சரச்சைகளின் மன்னர்கள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் என்றும் சொல்லலாம்.

2008 - தரையில் விழுந்த பந்தை கேட்சை பிடித்தாக கூறிய ரிக்கி பாண்டிங்

ரிக்கி பாண்டிங்
ரிக்கி பாண்டிங்

2007- 08 இந்திய கிரிக்கெட் அணி அணில் கும்பிளே தலைமையில் ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் மேற் கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையே நடந்த 2ஆவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் நடந்தது. இதில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற 333 ரன்கள் தேவையென்ற நிலையில் 2ஆவது இன்னிங்ஸ் ஆடியது. அப்பொழுது ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீ வீசிய பந்தில் இந்திய கிரிக்கெட் பேட்ஸ்மேன் "தாதா" என்று அழைக்கப்படும் சவுரவ் கங்குலி ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி கேப்டன் ரிக்கி பாண்டிங்யிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆனால் உண்மையில் அந்த பந்தை தரையில் பட்டு தான் கேட்ச் பிடித்தார் ரிக்கி பாண்டிங். போட்டி நடுவரிடம் தான் கேட்ச் பிடித்ததாக கூறி சவுரவ் கங்குலி விக்கெட்டை எடுத்தனர். இந்த விஷயம் வீரேந்தர் ஷேவாக் மற்றும் ரிக்கி பாண்டிங் இடையே பெரும் பூகம்பமாக வெடித்தது.

2017 - ட்ரெஸ்ஸிங் ரூமில் உள்ள வீரர்களிடம் ரிவியூ கேட்ட ஸ்டீவன் ஸ்மித்

ஸ்டீவன் ஸ்மித்
ஸ்டீவன் ஸ்மித்

2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவியில் சுற்று பயணம் மேற் கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இரு அணிகளுக்கு இடையில் நடந்த 2ஆவது டெஸ்ட் போட்டி பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடை பெற்றது. இதில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வெற்றி பெற 188 ரன்கள் தேவை என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட தொடங்கியது. ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் உமேஷ் யாதவ் பந்து வீச்சில் LBW ஆனார். DRS ரிவியூ கேட்க வேண்டும் என்றால் களத்தில் இருக்கும் வீரர்களை தான் ஆலோசிக்க வேண்டும். ஆனால் ஸ்டீவன் ஸ்மித் ட்ரெஸ்ஸிங் ரூமில் உள்ள வீரர்களிடம் களத்தில் நின்றபடியே ஆலோசனை கேட்டது இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலிக்கு பெரும் கோபத்தை வரவழைத்தது. இந்த சர்ச்சை விராட் கோலி மற்றும் ஸ்டீவன் ஸ்மித் இடையே பெரும் போராக மாறியது.

2018 - பந்தை சேதப்படுத்திய புகார்

பான் கிராப்ட் மற்றும் ஸ்டீவன் ஸ்மித்
பான் கிராப்ட் மற்றும் ஸ்டீவன் ஸ்மித்

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்று பயணம் மேற் கொண்டு நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் 3ஆவது டெஸ்ட் போட்டி கேப்டவுன் நியூலாண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா அணி வலுவான நிலையில் இருக்கும்பொழுது ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி விக்கெட்களை எடுக்க ஒரு குறுக்கு வழியை தேர்ந்தெடுத்தனர். பந்தை சேதப்படுத்தி தென்னாப்பிரிக்கா விக்கெட்களை சாய்க்க முடிவெடுத்தனர்.

அதன் படி, ஆஸ்திரேலியா வீரர் பான் கிராப்ட் தனது உள்ளாடையில் மறைத்து வைத்து இருந்த SAND PAPER யை வெளியே எடுத்து யாருக்கும் தெரியாமல் பந்து மீது அழுத்தம் கொடுத்து தேய்த்து விட்டார். இவர் செய்த காரியம் கேமரா மூலம் உலகுக்கு வெளி கொண்டு வரப்பட்டது. இதை தொடர்ந்து உடனடியாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பந்தை சேதப்படுத்திய பான் கிராப்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இந்த செயல் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு தலைகுனிவை ஏற்படுத்தியது

2018 - விராட் கோலி கேட்சை பீட்டர் ஹண்ட்ஸ்காம் பிடித்தாரா இல்லையா?

அவுட் என்று கூறுகிறார் பீட்டர் ஹண்ட்ஸ்காம் 
அவுட் என்று கூறுகிறார் பீட்டர் ஹண்ட்ஸ்காம்

2018 - 19 இந்திய கிரிக்கெட் அணி விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியாவியில் சுற்று பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்சில் பேட் கம்மின்ஸ் வீசிய பந்து வீச்சில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி பீட்டர் ஹண்ட்ஸ்காமிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பீட்டர் ஹண்ட்ஸ்காம் பிடித்த கேட்ச் பெரும் சர்ச்சை உண்டாக்கியது. அவர் பிடித்த கேட்ச் பந்து தரையில் பட்டது போல் இருந்தது. ஆனால், பீட்டர் ஹண்ட்ஸ்காம் தான் கேட்சை சரியாக பிடித்ததாக கூறினார். போட்டி நடுவரும் பீட்டர் ஹண்ட்ஸ்காம் கூறியதை ஏற்று விராட் கோலிக்கு அவுட் வழங்கினார். விராட் கோலி DRS முறைப்படி ரிவியூ கேட்டார். மூன்றாவது நடுவரும் அவுட் கொடுத்ததால் விராட் கோலி களத்தை விட்டு வெளியேறினார். இந்த கேட்ச் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now