இலங்கைக்கு எதிரான ஆஸ்திரேலிய டெஸ்ட் குழு அறிவிப்பு

களிப்புடன் காணப்படும் ஆஸ்திரேலிய வீரர்கள் - இந்தியா எதிர் ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்
களிப்புடன் காணப்படும் ஆஸ்திரேலிய வீரர்கள் - இந்தியா எதிர் ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்

இந்திய கிரிக்கெட் அணியிடம் நான்கு போட்டிகள் டெஸ்ட் தொடரினை தமது சொந்த மண்ணில் வைத்து 2-1 என இழந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடனான ஒரு நாள் தொடரை முடித்த பின்னர் அடுத்ததாக வரும் இலங்கை அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றது.

இந்த டெஸ்ட் தொடருக்கான 13 பேர் கொண்ட ஆஸ்திரேலிய டெஸ்ட் குழு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரில் ஆடிய சான் மார்ஷ், பீடர் ஹென்ஸ்கோம்ப், ஆரன் பின்ச் மற்றும் மிச்சல் மார்ஷ் ஆகிய நான்கு வீரர்களும் இலங்கை அணியுடனான டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணி இலங்கை அணியுடனான டெஸ்ட் போட்டிகளில் அறிமுக வீரர் வில் புகோவ்ஸ்கி, ஜோ பேர்ன்ஸ், பீடர் சிடில் மற்றும் மேட் ரேன்சா ஆகியோருக்கு வாய்ப்பு தந்திருக்கின்றது.

வேகப்பந்து வீச்சாளரான பீடர் சிடில் இந்த டெஸ்ட் தொடர் மூலம் (கடைசியாக 2018ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் போட்டிகளின் பின்னர் ), ஆஸ்திரேலிய அணிக்காக மீண்டும் விளையாடும் வாய்ப்பினை பெற்றிருக்கின்றார்.

இதேநேரம் 20 வயது மட்டுமே நிரம்பிய பேட்ஸ்மேனான வில் புகோவ்ஸ்கி ஆஸ்திரேலிய உள்ளூர் தொடரில் விக்டோரியா அணிக்காக ஆடி வருவதுடன், வேஸ்டர்ன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அண்மையில் இடம்பெற்ற ஒரு உள்ளூர் போட்டியில் 283 ரன்களை பெற்றிருந்தார். அதோடு பெர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் அவரது பேட்டிங் சராசரி 50 இணை நெருங்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வில் புகோவ்ஸ்கி ஒரு புறமிக்க குயின்ஸ்லாந்து அணிக்காக உள்ளூர் போட்டிகளில் ஆடி வரும், பேட்ஸ்மேனாகிய மேட் ரேன்சாவும் தொடர்ச்சியாக திறமைகளினை வெளிப்படுத்தி வந்திருப்பதால் 2018ஆம் ஆண்டின் மார்ச் மாதத்திற்கு பின்னர் ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஆட வாய்ப்பினை பெற்றுள்ளார்.

இதேநேரம் இந்திய டெஸ்ட் தொடரில் ஸ்லெஜிங்கிற்கு பேர் போன டிம் பெயின் ஆஸ்திரேலிய அணியை இலங்கை அணியுடனான டெஸ்ட் போட்டிகளிலும் வழிநடத்தும் தலைவராக உள்ளார்.

தொடரில் ஆஸ்த்திரேலிய அணிக்கு பேட்ஸ்மன்களாக பலம் சேர்க்க அணித்தலைவர் டிம் பெயினோடு, உஸ்மான் காவாஜா, மார்கஸ் ஹரிஸ் ஆகியோர் காணப்படுகின்றனர்.

இதேவேளை ஆஸ்திரேலிய அணிக்கு பந்துவீச்சில் பலம்சேர்க்க மிச்செல் ஸ்டார்க், நேதன் லயன் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் காணப்படுகின்றனர்.

ஆஸ்திரேலிய அணி, இலங்கை அணியுடன் டெஸ்ட் தொடரில் மோதும் முதல் போட்டி பிரிஸ்பேன் நகரில் ஜனவரி 24 இல் பகலிரவு டெஸ்ட் ஆட்டமாக இடம்பெறுவதோடு, இரண்டாம் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 1 இல் கன்பராவில் இடம்பெறுகின்றது.

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி :

1. டிம் பெய்ன் (அணித்தலைவர்)

2. ஜோஸ் ஹேசல்வூட்

3. ஜோ பேன்ஸ்

4. பேட் கம்மின்ஸ்

5. மார்கஸ் ஹர்ரிஸ்

6. ட்ராவிஸ் ஹேட்

7. உஸ்மான் கவாஜா

8. மார்னாஸ் லபஸ்சாக்னே

9. நேதன் லயன்

10. வில் புகோவ்ஸ்கி

11. மேட் ரேன்சா

12. மிச்செல் ஸ்டார்க்

13. பீடர் சிடில்

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now