உஸ்மான் கவாஜா இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையடுவாரா மாட்டாரா?

ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன் - உஸ்மான் கவாஜா
ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன் - உஸ்மான் கவாஜா

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற் கொண்டு மூன்று T20 போட்டிகள், நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் விளையாட உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் முதல் தொடரான T20 போட்டிகள் வருகின்ற நவம்பர் மாதம் 21ஆம் தொடங்க உள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடர்கள், அடுத்த மாதம் டிசம்பர் 06ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி ஒரு நல்ல தொடக்க பேட்ஸ்மேன் வேண்டும் என்று தேடிக்கொண்டு இருக்கிறது. டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் பந்தை சேதப்படுத்திய புகாரின் தடையில் இருந்து இன்னும் வெளிவரவில்லை.

ஆதலால், ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு ஒரு நல்ல தொடக்க பேட்ஸ்மேன் தேவைப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியிடம் துபாயில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் போட்டிகளில் உஸ்மான் கவாஜா நன்கு பேட்டிங் செய்து ஆஸ்திரேலியா அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். அன்றைக்கு உஸ்மான் கவாஜா 302 பந்துகள் எதிர் கொண்டு 141 ரன்கள் அடித்து ஆஸ்திரேலியா அணியை தோல்வியில் இருந்து விடுவித்தார்.

இதே, பாகிஸ்தான் தொடரில் துபாயில் விளையாடும் போது காயம் ஏற்பட்டு இப்போது அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இவரை மிகவும் நம்பியுள்ளது. இவர் விரைவில் உடல் நிலை தேறி மீண்டும் ஆஸ்திரேலியா அணிக்கு விளையாட வேண்டும் என்பதில் ஆஸ்திரேலியா அணி குறியாக உள்ளது.

காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட உஸ்மான் கவாஜா, இப்பொது உடல் நிலை தேறிவருகிறார். இருந்தாலும் முழு உடல் தகுதி இருந்தால் மட்டுமே ஆஸ்திரேலியா அணிக்கு விளையாடும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கும்.

உடல் நிலை தேறி வருவதால், இவரின் உடல் தகுதியை சோதிக்க ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இவரை வருகின்ற நவம்பர் 29ஆம் தேதி இந்தியா XI அணிக்கும் மற்றும் ஆஸ்திரேலியா XI அணிக்கும் நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டியில் விளையாட சொல்லியுள்ளது.

இந்த சுற்றுப்பயண போட்டியில் விளையாடி அவர் உடல் தகுதி நிருபித்திவிட்டால், ஆஸ்திரேலியா அணிக்காக இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பது உறுதி.

காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வு எடுக்கும் உஸ்மான் கவாஜா கூறுகையில், "100% இப்போது என்னால் ட்ரெட்மில்லில் ஓட முடிகிறது. நாளை முதல், என்னால் வெளியில் ஓட முடியும் என நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

கடுமையான பயிற்சி எடுத்து கொண்டு இருக்கும் உஸ்மான் கவாஜா ஆஸ்திரேலியா அணிக்கு விளையாடினால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு ஒரு பெரிய வலிமை கூடும் என்பதில் ஐயமில்லை.

உஸ்மான் கவாஜா இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக நன்கு ஆட கூடியவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இருந்தாலும் இவர் இன்னும் முழு உடல் தகுதி பெறவில்லை என்பதால் இப்போதைக்கு இவர் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்காக விளையாடுவது பெரும் கேள்விக்குறி தான்.

App download animated image Get the free App now