உலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் மிகபிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது. இந்த உலககோப்பை தொடரில் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த உலககோப்பை தொடரின் லீக் போட்டிகள் முதற்பாதி போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த உலககோப்பை தொடரில் லீக் போட்டிகள் முடிவடைய உள்ள நிலையில் ஆஸ்திரேலியா அணி இந்த உலககோப்பையின் முதல் அணியாக அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. ஆஸ்திரேலியா அணி விளையாடியுள்ள ஏழு போட்டிகளில் ஆறு போட்டிகள் வெற்றி பெற்று அரையிறுதி போட்டி தகுதி பெற்றுள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்னும் ஒரு போட்டிகள் வெற்றி பெறும் பட்சத்தில் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும். ஆனால் நான்காவது அணியாக அரையிறுதி போட்டிக்கு தகுதிபெறும் அணிக்கு பெறும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கபடுகிறது.
இந்த உலககோப்பை தொடரின் 33 வது லீக் போட்டி இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்றது. இந்ந போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. நியூசிலாந்து அணி இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றியே பெற்ற நிலையில் இந்த போட்டியிலும் வெற்றி பெறும் முனைபில் விளையாடியது. அதே நேரத்தில் பாகிஸ்தான் அணிக்கு இந்த போட்டி மிகவும் முக்கியமான போட்டியாக பாராக்கபட்டது. எனனில் பாகிஸ்தான் அணி இனிவரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பதால் இந்த போட்டியின் மீது எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தெர்வு செய்தது.
அதன் படி முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் மார்டின் கப்தில் மற்றும் காலின் முன்ரோ இருவரும் களம் இறங்கிய நிலையில் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே முகமது அமீர் மற்றும் ஹஷன் அப்ரிடியின் அற்புதமான பந்து வீச்சில் திணறினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே மார்டின் கப்தில் மற்றும் முன்ரோ இருவரும் அவுட் ஆக அடுத்து களம் இறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் மட்டும் நிலைத்து விளையாடினார். மறுமுனையில் களம் இறங்கிய அனைத்து வீரர்களையும் தனது பந்து வீச்சின் முலம் திணற செய்தார் ஷஹின் அப்ரிடி.
ரோஸ் டெய்லர் மற்றும் டாம் லேதம் அடுத்தடுத்து அவுட் ஆக அதன் பின்னர் களம் இறங்கிய ஜீம்மி நீசம் மட்டும் நிலைத்து விளையாடினார். கேப்டன் நிலைத்து விளையாடிய நிலையில் ஷதாப் கான் பந்தில் அவுட் ஆக அதன் பின்னர் களம் இறங்கிய கொலின் டி கிராண்டோகோம் நீசம் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த இருவரும் ரன்களை உயர்த்தினார். இருவரின் சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து அணி சற்று நிலைத்து விளையாடிய நிலையில் 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 237-6 ரன்களை அடித்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜீம்மி நீசம் 97 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார். பாகிஸ்தான் அணியில் ஷஹின் அப்ரிடி 3 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.
அதன் பின்னர் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் பக்கர் ஜமான் மற்றம் இமாம் உல் ஹக் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே பக்கர் ஜமான் 9 ரன்னில் போல்ட் பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய பாபர் ஆஷம் வழக்கமான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.
தொடர்ந்து இந்த உலககோப்பை தொடரில் அனைத்து போட்டிகளிலும் பாகிஸ்தான் அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வரும் பாபர் ஆஷம் நியூசிலாந்து எதிரான போட்டியில் 30 ரன்களுக்கு மேல் அடித்த போது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக வேகமாக 3000+ ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார். முதல் இடத்தில் தென் ஆப்ரிக்காவின் அஷிம் அம்லா 57 இன்னிங்ஸில் 3000 ரன்களை அடித்த நிலையில் பாபர் ஆஷம் 68 இன்னிங்ஸில் இந்த சாதனையை படைத்தார். இவருக்கு அடுத்தாக வீவி ரிச்சட்ஸ் 69 இன்னிங்ஸில் அடித்துள்ளார். அதன் பின்னர் ஆசிய அணிகளில் அதிவேகமாக 3000+ ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் இந்திய வீரர்கள் ஷிகர் தவண் மற்றும் வீராட் கோலி இருவரையும் பின்னுக்கு தள்ளி முதல் இடத்தில் உள்ளார்.
ஷிகர் தவண் 72 இன்னிங்ஸில் அடித்த நிலையில் வீராட் கோலி 75 இன்னிஸில் அடித்தும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இதன் முலம் பாகிஸ்தான் அணியில் அதிகவேகமாக 3000 ரன்களை கடந்தவர் என்ற சாதனையே படைத்தார் பாபர் ஆஷம். இந்த போட்டியில் பாபர் ஆஷம் தனது முதல் உலககோப்பை சதத்தை பதிவு செய்தார். இதன் சதத்தின் முலம் குறைந்த இன்னிங்ஸில் 10 சதங்களை அடித்தவர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.