அதன் பின்னர் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் பக்கர் ஜமான் மற்றம் இமாம் உல் ஹக் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே பக்கர் ஜமான் 9 ரன்னில் போல்ட் பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய பாபர் ஆஷம் வழக்கமான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.
தொடர்ந்து இந்த உலககோப்பை தொடரில் அனைத்து போட்டிகளிலும் பாகிஸ்தான் அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வரும் பாபர் ஆஷம் நியூசிலாந்து எதிரான போட்டியில் 30 ரன்களுக்கு மேல் அடித்த போது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக வேகமாக 3000+ ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார். முதல் இடத்தில் தென் ஆப்ரிக்காவின் அஷிம் அம்லா 57 இன்னிங்ஸில் 3000 ரன்களை அடித்த நிலையில் பாபர் ஆஷம் 68 இன்னிங்ஸில் இந்த சாதனையை படைத்தார். இவருக்கு அடுத்தாக வீவி ரிச்சட்ஸ் 69 இன்னிங்ஸில் அடித்துள்ளார். அதன் பின்னர் ஆசிய அணிகளில் அதிவேகமாக 3000+ ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் இந்திய வீரர்கள் ஷிகர் தவண் மற்றும் வீராட் கோலி இருவரையும் பின்னுக்கு தள்ளி முதல் இடத்தில் உள்ளார்.
ஷிகர் தவண் 72 இன்னிங்ஸில் அடித்த நிலையில் வீராட் கோலி 75 இன்னிஸில் அடித்தும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இதன் முலம் பாகிஸ்தான் அணியில் அதிகவேகமாக 3000 ரன்களை கடந்தவர் என்ற சாதனையே படைத்தார் பாபர் ஆஷம். இந்த போட்டியில் பாபர் ஆஷம் தனது முதல் உலககோப்பை சதத்தை பதிவு செய்தார். இதன் சதத்தின் முலம் குறைந்த இன்னிங்ஸில் 10 சதங்களை அடித்தவர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.