பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் பேர்ஸ்டோ அதிரடியாக 128 ரன்களை சேர்த்து, வெற்றி இலக்கான 359 ரன்களை இங்கிலாந்து அணி எளிதாக அடைய உதவினார்.
சவுதாம்ப்டனில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 373-3 ரன்களை குவித்தது இங்கிலாந்து அணி. இப்போட்டியிலும் அப்பேற்ப்பட்ட இலக்கை பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணிக்கு கொடுத்தது, பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் இமாம் உல் ஹக் 151 ரன்களை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் பாகிஸ்தான் அணி 358-8 ரன்களை சேர்த்தது.
359 என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்களான பேர்ஸ்டோ மற்றும் ராய் அதிரடி துவக்கம் கொடுத்தனர். 17.3 ஓவர்களில் 159 ரன்களை குவித்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 33 பந்துகளில் மீதமுள்ள நிலையில் எளிதாக இலக்கை அடைந்து வெற்றி பெற்றனர். குறிப்பாக ராய் 79 ரன்களுடனும் பேர்ஸ்டோ 128 ரன்களும் குவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிரடியாக ரன்களை சேர்த்த பேர்ஸ்டோ 15 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் விளாசினார். இவர் வெளியேறிய போது இங்கிலாந்து அணி ஒரு பந்துக்கு ஒரு ரன்னுக்கும் குறைவான வீதம் அடித்தால் போதும் என்ற நிலை இருந்தது. இதன் மூலம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எந்தவித சிக்கலும் இல்லாமல் எளிதாக ரன்களை சேர்த்தனர். ஜோ ரூட் (43) மொயின் அலி (46*) மற்றும் ஸ்டோக்ஸ் (37) போன்ற வீரர்கள் மீதமுள்ள ரன்களை சேர்த்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை வகிக்கின்றது. இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் இல்லாத போதும் இப்படிப்பட்ட இலக்கை எளிதாக அடைந்ததன் மூலம் இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசை எவ்வளவு பலமாக இருக்கின்றது என தெளிவாகத் தெரிகின்றது. இந்தப் போட்டியின் மூலம், இங்கிலாந்து அணிக்காக அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் மோர்கன். இங்கிலாந்து அணியின் கேப்டனான இவர் மூன்றாவது போட்டியில் அடில் ரஷித் மற்றும் ஜோஸ் பட்லருக்கு ஓய்வு அளித்திருந்தார்.
பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் நடந்த இப்போட்டியில் ராய் மற்றும் பேர்ஸ்டோ முதல் 5 ஓவர்களில் 26 ரன்ங்களை மட்டுமே குவித்திருந்தனர், இதற்குப் பிறகு ராய் 21 ரன்களில் இருந்தபோது ஹசன் அலி வீசிய பந்துவீச்சில் சாஹீன் அப்ரிடி எளிய கேட்சை கோட்டை விட்டார். இந்தக் கேட்சை தவற விட்டதன் மூலம் ராய் 76 ரன்களை சேர்த்தார் இதுவே பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவ வழிவகுத்தது.
ராய் தனது சதத்தை தவறவிட்டாலும் மறுமுனையில் பேர்ஸ்டோ கடந்த 11 மாதங்களில் முதல் ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். பாகிஸ்தான் அணி சொதப்பலான பீல்டிங்கை வெளிப்படுத்தியது, குறிப்பாக மொயீன் அலிக்கு இரண்டு முறை கேட்சை தவறவிட்டது. பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தாலும் இமாம் உல் ஹக் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார், 151 ரன்களை குவித்த இவர் முந்தைய சாதனையான பக்கர் ஜாமனின் (138) சாதனையை முறியடித்தார்.
இமாமிற்க்கு உறுதுணையாக இருந்த அசிஃப் அலி 43 பந்துகளில் 51 ரன்களை விளாசினார். இவர் பாகிஸ்தான் உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் கிரிஸ் வோக்ஸ் சிறப்பாக செயல்பட்டார். 10 ஓவர்களில் 67 ரன்களை வழங்கி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பந்துவீச்சில் பாபர் ஆஸாமை வெளியேற்றியது சிறப்பான தருணமாகும். அடில் ரஷித்க்காக இங்கிலாந்து அணியில் களமிறங்கிய டென்லி ஒரு ஓவர் மட்டுமே வீசினர்.