ஒரு அபூர்வமான மற்றும் நகைப்புக்கூறிய நிகழ்வு இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் நடந்தது. சுழற்பந்து வீச்சாளரால் வீசப்பட்ட பந்து நேரடியாக பேட்ஸ்மேனின் மேற்பகுதியில் சென்றது. இதனை ஸ்கூப் ஷாட் அடிக்க டிரென்ட் போல்ட் அடிக்க முயன்றபோது பந்து அவரது தலைக்கவசத்தின் கம்பிகளில் மாட்டிக் கொண்டது.
இதற்கிடையில் இலங்கை ஃபீல்டர்கள் டிரென்ட் போல்டிடம் நகைப்பை உண்டாக்கும் வகையில் பந்தை எடுக்க முயன்றனர். ஆனால் பேட்ஸ்மேன் அவர்களிடமிருந்து நழுவி நகைத்தார். அதன்பின் விக்கெட் கீப்பர் அந்த பந்தை எடுத்தார். மேலும் வர்ணனையாளும் பல நகைப்பினை ஏற்படுத்தினர்.
டிரென்ட் போல்ட் பொறுப்பான ஆட்டத்தை நியூசிலாந்திற்கு அளித்தார். இவர் இந்த இன்னிங்ஸில் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸருடன் 18 ரன்களை எடுத்தார். இவர் களமிறங்கிய போது 8 விக்கெட்டுகளுக்கு 222 ரன்கள் நியூசிலாந்து அணி எடுத்திருந்தது. இவரது சிறப்பான பங்களிப்பால் 248 ரன்களை முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணியால் அடைய முடிந்தது.
இந்த இன்னிங்ஸின் ஆரம்பத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. டாம் லேதம் மற்றும் ஜீட் ரீவாலின் தொடக்கம் சிறப்பாக அமைந்து 64 ரன்கள் முதல் விக்கெட்டிற்கு குறிக்கப்பட்டது. இருப்பினும் இலங்கையின் பந்துவீச்சில் ஒரே ஓவரில் டாம் லேதம் மற்றும் கானே வில்லியம்சன் வீழ்த்தப்பட்டதால் ஆட்டம் நியூசிலாந்து வசம் மாறியது. இதைத்தொடர்ந்து ஜீத் ரீவல்-லின் விக்கெட்டும் வீழ்த்தப்பட்டது.
இருப்பினும் ரோஸ் டெய்லர் மற்றும் ஹன்றி நிக்கோல்ஸின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம் 100 ரன்கள் பார்ட்னர் செய்யப்பட்டு நியூசிலாந்து வசம் ஆட்டம் மீண்டும் மாறியது. அதன்பின் இலங்கை பந்துவீச்சாளர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிபடுத்தி 60 ரன்கள் மட்டுமே அளித்து அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதிகபட்சமாக பேட்டிங்கில் ரோஸ் டெய்லர் 83 ரன்களையும், பௌலிங்கில் அகிலா தனஞ்செயா 5 விக்கெட்டுகளையும், சுரங்கா லக்மல் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் லஹீரு திரமன்னே இன்னிங்ஸின் தொடக்கத்திலே வீழ்த்தப்பட்டார். அதன்பின் இலங்கை கேப்டன் திமூத் கருடாரத்னே மற்றும் குசல் மென்டிஸ் இனைந்து ஒரு நிலையான பார்டனர் ஷீப் அமைத்தனர். ஆனால் கரூடராத்னே சிறப்பான தொடக்கத்தை அளித்தாலும் அதனை நீண்ட நேரம் வெளிபடுத்த தவறி 39 ரன்களில் வெளியேறினார். இருப்பினும் குசல் மென்டிஸ் மற்றும் ஆன்ஜீலோ மேதீவ்ஸ் ஆகியோர் பொறுப்பாக விளையாடி அரைசதம் விளாசி இலங்கை அணிக்கு பேட்டிச்கில் பக்கபலமாக நின்றார். இவர்களது விக்கெட்டிற்கு பின்னர் களமிறங்கிய குசல் பெராரா, தனஞ்செயா தீ செல்வா மற்றும் அகிலா தனஞ்செயா சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். விக்கெட் கீப்பர் நிரோஷா திக்வெல்லா மற்றும் சுரங்கா லக்மல் நிலைத்து விளையாடி நியூசிலாந்து பௌலிங்கை சமாளித்தனர்.
இரண்டாம் நேர ஆட்டமுடிவில் திக்வெல்லா 39 ரன்களுடனும், லக்மல் 29 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அஜஜ் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். போல்ட் மற்றும் சோமார் வில் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.