அயர்லாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு மேற்கு இந்திய தீவுகள் மற்றும் வங்கதேச அணி அந்நாட்டு அணியுடன் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இந்த தொடரில் வங்கதேசம், மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்து ஆகிய மூன்று அணிகளும் பங்கேற்று விளையாடினர். இந்த தொடர் உலககோப்பை தொடருக்கு முன்பாக நடைபெறும் தொடர் என்பதால் வங்கதேசம் மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு இந்த தொடர் மிகவும் முக்கியமான தொடர். இந்த தொடரில் ஒரு அணி மற்ற இரு அணியுடனும் இரண்டு முறை மோதின. இதில் வங்கதேச அணி நடைபெற்ற நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளிலும் மேற்கு இந்திய தீவுகள் அணி நான்கு போட்டியில் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். நேற்று இந்த தொடரின் இறுதி போட்டி டர்பன் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் அணியில் தொடக்க வீரர்கள் ஷாய் ஹோப் மற்றும் சுனில் அம்ப்ரிஸ் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இருவரும் இந்த தொடரில் எற்கனவே சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்தனர்.
முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 144 ரன்கள் சேர்த்தது. இருவரும் அரைசதம் அடித்து அசத்திய நிலையில் ஷாய் ஹோப் 74 ரன்னில் மெஹெடி ஹசன் பந்தில் அவுட் ஆகினார். மேற்கு இந்திய தீவுகள் அணி 20.1 ஓவரில் 152-1 என்ற நிலையில் இருந்த போது மழை குறுக்கிட்டது. தொடர் மழையால் ஆட்டம் வெகுநேரம் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் மழை நின்ற பிறகு ஆட்டத்தின் நேரம் காரணமாக 24 ஓவர்களாக குறைக்கப்பட்டது. வங்கதேச அணிக்கு 24 ஓவர்களில் 210 ரன்களை இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதை அடுத்து களம் இறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர்கள் தமிம் இக்பால் மற்றும் சௌவுமியா சர்க்கர் இருவரும் களம் இறங்கினர். தமிம் இக்பால் 18 ரன்னிலேயே கேப்ரியல் பந்தில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் களம் இறங்கிய சப்பீர் ரஹ்மான் டக்அவுட் ஆகி மேலும் அதிர்ச்சி அளித்தார். வங்கதேச அணி 60-2 என்ற நிலையில் இருந்தபோது சௌவுமியா சர்க்கர் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தி அரைசதம் விளாசினார்.
அதே வேகத்தில் 66 ரன்னில் ரேய்மன் ரீஃபர் பந்தில் அவுட் ஆகினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய முஷ்பிகுர் ரஹீம் 36 ரன்னில் அதே ரீஃபர் பந்தில் அவுட் ஆக ஆட்டத்தின் போக்கு மாறியது. அதன் பின்னர் வந்த முகமது மீதுன் 17 ரன்னில் அவுட் ஆகிய நிலையில் அடுத்து ஜோடி சேர்ந்த முகமதுல்லாஹ் மற்றும் மோசடடெக் ஹொசைன் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இளம் வீரர் ஹொசைன் அதிரடியாக ஐந்து சிக்ஸர்கள் விளாச வங்கதேச அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் முத்தரப்பு தொடரை வென்று அசத்தியது வங்கதேச அணி. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ஹொசைன் தேர்வு செய்யப்பட்டார்.