தற்போது நடந்து வரும் நியூசிலாந்து- இந்தியா போட்டித் தொடர் முடிந்தவுடன் வங்கதேச அணி நியூசிலாந்து சுற்றுப் பயணம் மேற்க்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் விளையாட உள்ளது. அதற்கான வீரர்களை தற்போது வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
போட்டி அட்டவணை:
13 பிப்ரவரி – முதல் ஒருநாள் போட்டி, நேப்பியர்
16 பிப்ரவரி – இரண்டாவது ஒருநாள் போட்டி, கிரிஷ்ட்சர்ச்
20 பிப்ரவரி – மூன்றாவது ஒருநாள் போட்டி, டூனிடின்
டெஸ்ட் போட்டி அட்டவணை
28 பிப்ரவரி – முதல் டெஸ்ட் போட்டி, ஹாமில்டன்
8 மார்ச் – இரண்டாவது டெஸ்ட் போட்டி, வில்லிங்கடன்
16 மார்ச் – மூன்றாவது டெஸ்ட் போட்டி, கிரிஷ்ட்சர்ச்
வீரர்கள் விவரம்:
டெஸ்ட் போட்டி வீரர்கள்:
இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களை அறிவித்துள்ளது வங்கதேச கிரிக்கெட் நிர்வாகம். இதில் டெஸ்ட் அணியில் சபீர் ரகுமான் மற்றும் டஷ்கின் அகமது ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். வங்கதேச அணியின் விராத் கோலி என அழைக்கப்படும் சபீர் ரகுமான் தற்போது நடந்து வரும் பிபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி ரன்கள் குவித்தார். அதுமட்டுமல்லாமல் அவர் அரைசதம் குவித்த பின் விராத் கோலி போன்றே மட்டையை உயர்த்தி கையை அசைத்தது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டது. 23 வயதான வேகப்பந்து வீச்சாளரான டஷ்கின் அகமது தற்போது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியின் கேப்டனாக சகீப் அல் ஹாசன் செயல்படுகிறார்.
டெஸ்ட் அணி
சகீப் அல் ஹாசன் (கேப்டன்), முகமது மிதுன், மொமினுல் ஹாகியு, முஸ்தபிசூர் ரகுமான், முகமதுல்லா, முஸ்தபிசூர் ரஹீம் (விக்கெட் கீப்பர்) , மெஹதி ஹாசன், டய்ஜுல் இஸ்லாம், கலீல் அகமது, நயீம் ஹாசன், சட்மான் இஸ்லாம், லிட்டன் தாஸ், தமீம் இக்பால், அபூ ஜெயட், டஷ்கின் அகமது.
ஒருநாள் தொடர்:
ஒருநாள் தொடரில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர் கொள்கிறது மொர்ட்டஷா தலைலைமையிலான வங்கதேச அணி. வங்கதேச அணி நியூசிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பறிறியதே இல்லை. இந்த முறை தொடரை கைப்பற்ற வங்கதேச அணி பெறும் ஆர்வத்துடன் உள்ளது. அதுமட்டுமல்லாது வங்கதேச கேப்டன் மொர்ட்டஷா வங்கதேச அரசியலில் இறங்கிவிட்டதால் உலக கோப்பை போட்டியுடன் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதனால் இந்த தொடரில் அவரது செயல்பாடு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருநாள் அணி
மொர்ட்டஷா (கேப்டன்), தமீம் இக்பால், சவுமியா சர்க்கார், லிட்டன் தாஸ், சகீப் அல் ஹாசன், முஸ்தபிசூர் ரஹீம், முகமதுல்லா, ரூபெல் உசேன், முஸ்தபிசூர் ரகுமான், மெஹதி ஹாசன், முகமது மிதுன், ஷாய்பிடுன், நகீம் ஹாசன், டஷ்கின் அகமது, சபீர் ரகுமான்
இந்த அணியில் பேட்டிங்ல் தமீம் இக்பால், லிட்டன் தாஸ், சவுமியா சர்க்கார், ரஹீம் போன்ற வீரர்கள் இருப்பது அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. ஆல் ரவுண்டர்கள் சகீப் அல் ஹாசன் , முகமதுல்லா போன்ற வீரர்கள் பவுலிங்ல் மட்டுமல்லாது மிடில் ஆர்டர் பேட்டிங்கிலும் பலம் சேர்க்கின்றனர். பந்து வீச்சில் மொரட்டஷா, முஸ்தபிசூர் ரகுமான், மெஹதி ஹாசன், ரூபெல் உசேன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.