வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்ள முக்கியமானவர் ஷகிப் அல் ஹசன்.

ஷகிப் பேட்டிங் உலகக்கோப்பை தொடர்.
ஷகிப் பேட்டிங் உலகக்கோப்பை தொடர்.

உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணியில் மிகவும் நம்பிக்கைக்குரியவராக ஷகிப் அல் ஹசன் இருந்து வருகிறார். திங்கட்கிழமையன்று வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது வங்கதேச அணி. ஷகிப் தொடை காயத்திலிருந்து மீண்டு வருவது வங்கதேச அணிக்கு அவசியமானது. பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் அணியைச் சமநிலை படுத்த உதவியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஷகிப் ஒரு அற்புதமான இன்னிங்ஸ் விளையாடிச் சதம் அடித்தார். இலக்கு அதிகமாக இருந்ததால் வங்கதேச அணி வெற்றி பெற முடியவில்லை. தென் ஆப்பிரிக்கா அணியுடன் முதல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர்.

இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடிய வங்கதேச அணி ஒரு போட்டியில் வெற்றி, இரு தோல்வி, ஒரு போட்டி முடிவு இல்லாமல் போனது.

இந்தத் தொடரில் ஷகிப் பேட்டிங்கில் இரண்டு அரைசதம், ஒரு சதம் என வங்க தேச அணியின் பேட்டிங் வலுவடைய முக்கிய காரணமாக இருந்து வருகிறார்.

இலங்கைக்கு எதிராக போட்டியில் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இங்கிலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் சிறிய காயம் ஷகிப்க்கு ஏற்ப்பட்டதாக வங்கதேச பயிற்சியாளர் ஸ்டீவ் ரோட்ஸ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

காயம் ஏற்ப்பட்ட போதிலும் அதை பொருட்படுத்தாமல் மிகவும் நன்றாக விளையாடினார். இந்த வாரம் முழுவதும் ஓய்வில் உள்ள அவர் நன்றாக சிகிச்சை பெற்று முழு உடல் தகுதியுடன் வர முடியும். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் ஷகிப் விளையாட முடியும் என்று நம்பிக்கை இருக்கிறது.

தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மழை காரணமாக 7.3 ஓவர்கள் மட்டுமே பந்து வீச முடிந்தது. அதற்கு அடுத்த நாள் இலங்கை மற்றும் வங்க தேச அணிகள் மோதும் போட்டி முழுவதும் மழை காரணமாக டாஸ் கூட போடமுடியவில்லை.

புள்ளிபட்டியலில் அரை இறுதிக்கு தகுதி பெறும் அணிகளை தீர்மானிப்பதில் மழைக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கும். இதுவரை 3 போட்டிகளில் மழை காரணமாக முடிவு இல்லாமல் போனது.

points table
points table

தற்போதைய வங்க தேச பயிற்சியாளரும், முன்னாள் இங்கிலாந்து வீரரான ரோட்ஸ் தனது சொந்த நாட்டில் வானிலை பற்றி நன்றாக அறிந்திருப்பார். இங்கிலாந்து அணிக்காக 11 டெஸ்ட் மற்றும் ஒன்பது ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார் ரோட்ஸ்.

“மழை எப்போது வரும் என்று தெரியாது. உலகம் முழுவதும் மக்கள் மழையைப் பெறுகிறார்களா என்பது தெரியாது. ஆனால், இப்போது சில சிக்கல்களை மழையால் காண்கிறோம்”.

“உலகக்கோப்பை தொடரின் அமைப்பாளர்களுக்கு ஒரு பெரிய தலைவலி இருந்திருக்கும் என்று தெரியும். ஆனால் ஒவ்வொரு போட்டிகளுக்கும் இடையே நிறைய நேரம் கிடைத்தது” என்று ரோட்ஸ் கூறினார்.

இது நீண்ட நாட்கள் நடைபெறும் தொடர். மைதானத்தில் ரசிகர்கள் போட்டியை காண வந்த பிறகு மழை ஏமாற்றி விடுகிறது. மழை இன்னும் சில போட்டிகளின் முடிவை மாற்றியமைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

Quick Links

App download animated image Get the free App now