மேற்கிந்திய தீவுகள் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது . முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றிபெற்று 1-0 என வங்கதேசம் முன்னிலையில் இருந்தது .
இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நவம்பர் 30 ஆம் தேதி தாக்காவில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேசம் தனது முதல் இன்னிங்ஸில் 508 ரன்களை குவித்தது. மகமதுல்லா 10 பவுண்டரிகளுடன் அதிகபட்சமாக 136 ரன்களை அடித்தார். ஷகிப் அல் ஹசன் 80 ரன்களை அடித்தார். இஸ்லாம் 54 ரன்களும் , லிடன் தாஸ் 76 ரன்களையும் அடித்தனர் . ரோஜ் , வாரிக்கண் , பிஸோ, கிரய்க் பிராத்வெய்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர் .
பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வங்கதேச பவுலர்களின் தாக்குதலில் தடுமாறி விக்கெட்களை இழந்து வெளியேறினர் . வெஸ்ட் இண்டிஸ் அணி 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து பாலோ ஆன் ஆனது. ஹட்மைர் அதிகபட்சமாக 39 ரன்களை அடித்தார். மெஹிந்தி ஹாசன் 7 விக்கெட்டுகளையும் ஷகிப் அல் ஆசன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர் .
இந்த இன்னிங்ஸில் முக்கியமான சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் முதல் 5 பேட்ஸ்மேன்களும் போல்டு ஆகி வெளியேறினர் . இதற்கு முன்பு இது போன்ற நிகழ்வு 1890 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் நடந்த டெஸ்ட் போட்டியில் நடந்தது . அதன் பின் 128 ஆண்டுகள் கழித்து தற்போது அந்த சாதனையை வங்கதேசம் சமன் செய்துள்ளது .
பாலோ ஆன் ஆன வெஸ்ட் இண்டீஸ் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது . இதிலும் 213 ரன்களை மட்டுமே அடித்து அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது . மேற்கிந்திய தீவுகள் அணியின் சார்பாக ஹட்மைர் 9 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 93 ரன்களை விளாசினார்.கேமர் ரோஜ் 37 ரன்னும் சை ஹப் 25 ரன்களையும் அடித்தனர் . மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர் .
வங்கதேசம் அணியின் சார்பாக 2வது இன்னிங்ஸில் மெஹிந்தி ஹாசன் 5 விக்கெட்டுகளும் , இஸ்லாம் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர் .
இப்போட்டியில் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தமாக 12 விக்கெட்டுகளை வீழ்த்திய மெஹிந்தி ஹாசன் ஆட்டநாயகன் விருதினை பெற்றார் . இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய ஷகிப் அல் ஹசன் தொடர் ஆட்டநாயகன் விருதினை பெற்றார் . ஷகிப் அல் ஹசன் ஆசியக் கோப்பையில் ஏற்பட்ட காயம் காரணமாக 2 மாதங்கள் ஓய்வில் இருந்தது குறிப்பிடத்தக்கது .
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் வங்கதேச அணி டெஸ்ட் தொடரை வென்றது . இரு அணிகளும் மோதும் ஒருநாள் போட்டித்தொடர் டிசம்பர் 9 ஆம் தேதி தாக்காவில் நடைபெறவுள்ளது .