ஒரு நல்ல பந்துவீச்சாளர்மூலம் பேட்ஸ்மேன்களின் தலைக்குக் குறிவைக்கப்படும் short pitch என்னும் குறுகிய பந்துகள், அவர்களுக்கு அடிக்கடி அச்சுறுத்தும் வகையில் இருக்கும்.
அதிகப்படியான பேட்ஸ்மேன்கள் இதனை எதிர்க்கொள்ளும்போதோ அல்லது அடிக்கத் தவறும்போதோ ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.
இருப்பினும், வெகுவிரைவிலே பந்தின் நீளத்தை கணித்து மின்னல் வேகத்தைப் போன்று ரன்களை குவிக்கும் பேட்ஸ்மேன்கள், ஹூக்/புல் ஷாட்களால் அடிப்பர். பந்தைத் தடுப்பதற்கு பதிலாகப் பந்தவீச்சாளர்களை எதிர்கொள்ளப் பின்னோக்கி காலெடுத்து அக்குறுகிய பந்துகளைச் சமாளிப்பர்.
இவையே ஒரு திறமையுள்ள பேட்ஸ்மேன் மட்டுமல்லாது கிரிக்கெட் வரலாற்றின் ஒரு சிறந்த வீரருக்கான அடையாளம் எனக் கூறுவர்.
இவ்வகையான பந்துகளில் கைதேர்ந்த ஐந்து வீரர்களைப் பின்வருமாறு காண்போம்.
5.கார்டன் கீரினிஜ்(Gordon Greenidge):
இதுவரை ஆடிய அணிகளில் 1970,80களில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணியே சிறந்தணியாக இன்றளவும் கருதப்படுகிறது. அதில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் தொடக்க ஆட்டக்காரரான கார்டன் கீரினிட்ஜ் ஆவார்.
இவர் மிகவும் ஆக்ரோஷமான ஆட்டத்தின் முலம் துவக்கத்திலிருந்தே பந்தைத் திணறடித்திருந்தாலும், சிறந்த பந்தைத் தடுக்கும் திறன்பெற்றிருந்தார். இவரது முதல் குறிக்கோள் பந்துவீச்சாளர்களை ஆதிக்கம் செலுத்துவதே ஆகும்.
தலையையோ உடலையோ நோக்கி வரும் பந்துகளை இவர் சந்திக்க நேரிடும்போது கருணையற்றவராகவே காணப்பட்டார்.மேலும் அவர் ஹூக்/புல் ஷாட்களால் இவரது விருப்பமானவையாக மாறின.
இவர் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஆஸ்திரேலியாவில் உள்ள பெரிய ஆடுகளங்களில் விளையாடியபோது பந்தைப் பவுண்டரிக்கு அனுப்ப தவறியதில்லை. பல சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளைக் கூட இவர் பல வருடங்களாக அவ்வாறே எதிர்கொண்டார்.
4.ஜாக்கஸ் காலிஸ் (Jacques Kalis):
அனைத்து கால கிரிக்கெட்டின் ஒரு சிறந்த ஆல்ரவுண்டராகக் கருதப்படுபவர் காலிஸ்.அதற்குமேலாக இவர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு நல்ல பேட்ஸ்மேனாகவும் விளங்குகிறார்.இவரது கிரிக்கெட் தொழில்நுட்பம், ஓட்டங்களைச் சேகரிக்கும் தாகம் அதனினும் மேலாக 19 வருட அர்ப்பணிப்பு ஆகியவற்றை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
இவர் அனைத்து வகையான ஷாட்களை அறிந்திறிந்த பொழுதும்
ull ஷாட்களால் ஒரு மிகச்சிறந்த வீரராகவும் திகழ்ந்தார்.இவரது முதல் எண்ணம் என்னவென்றால் கோடுகளைவிட்டு வெளியேற்றப்பட வேண்டும் என்பதே.ஆனால் இவர் பந்தை அடிக்க நினைக்கும்போது அதை அடித்தே தீருவார்.
இவர் ஹூக் ஷாட்களை குறிப்பிடும்வகையில் அடித்திடவில்லை மாறாக இழுவை ஷாட்களை தனது மணிக்கட்டை சுழற்றியே அற்புதமாக அடித்தார்.இம்மாதிரியான நீண்ட தூரம் காற்றில் பறக்கும் பந்துகளை வேறொருவரால் அடிக்க வாய்ப்பே இல்லை.
3.சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar):
சச்சின் டெண்டுல்கர் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஆகச்சிறந்த மட்டையாளராகத் திகழ்ந்தார். அதிவேக ஆடுகளங்களில் உலகின் தலைச்சிறந்த பந்துவீச்சாளர்களின் சவால்களை எதிர்கொண்டமைக்காக நன்கு அறியப்பட்டார்.இந்த இந்திய வரலாற்று நாயகனின் மிகப்பெரும் ஆதாயம், பிற பேட்ஸ்மேன்களைவிட விரைவாகப் பந்தைக் கையாள்வது, விக்கெட் சரியும் நேரத்தில் கூட தன் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்வதே ஆகும்.
அவர் அரிதாகவே ஹூக் ஷாட்களை அடிக்க நேர்ந்தபோதிலும், அவர் சிறப்பாக ஆட நினைத்த நேரத்தில் கூடப் புல்(pull) ஷாட்களையே தேர்ந்தெடுத்தார்.
இவரது ஆகச்சிறந்த சாதனைகளை அதிவேக ஆடுகளங்களான ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் பார்த்தாலே போதும் இவர் புல் (pull) ஷாட்களை எவ்வாறு கையாண்டாரெனக் கணக்கிடலாம்.
2.விவ் ரிச்சர்ட்ஸ் (Viv Richards):
கிரிக்கெட் உலகின் அபாயகரமான மட்டையாளர்களின் அரசனாக விளங்கியவர் விவ் ரிச்சர்ட்ஸ்.எவர் ஒருவரானும் இவர் உலகின் தலைச்சிறந்த பந்துவீச்சாளர்களை எவ்வாறு கையாண்டார் என்பதையே நோக்குவர்.மற்ற வீரர்களைவிட இவரே நன்கு அனைவராலும் அறியப்பட்டார்.மேலும் பந்தைக் கையாளும் யுக்தியால் ரசிகர்களை ஈர்த்தார்.கிரிக்கெட் உலகில் தனக்கு நிகர் தானே எனவும் நிரூபித்தார்.
இவர் தலைக்கவசம் அணியாமல் ஒரு திமிருத் தனமாக களத்தில் இறங்கிவிட்டாலே போதும் பந்து வீச்சாளர்களுக்குப் பயம் தொற்றிக்கொள்ளும். அன்றைய காலத்தின் டிவிலியர்ஸ் என்று ரிச்சர்ட்ஸை அழைத்தால் அது மிகையாகாது. எப்பேற்பட்ட பந்து தன்னை நோக்கி வந்தாலும் மைதானத்தின் நாலாபுறமும் சிதறடிப்பார்.கிட்டத்தட்ட இருமுறை மேற்கிந்திய தீவுகள் உலக சாம்பியன் ஆனதும் இவராலேயே.அப்போது இம்மாதிரியான திறம்பட சமாளிக்கும் வீரர்கள் கிரிக்கெட் உலகில் மிக மிகக் குறைவே.அதுபோல் இவரைப் போன்ற ஒரு வீரர் கிடைக்க பல நூற்றாண்டுகள் ஆகும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.இதுவே போதும் அவரது ஆக்ரோஷத்திற்கு அறிகுறியாகும்.மேலும், இவர் ஹூக் மற்றும் புல்(pull) ஷாட்களை கையாண்டு தனது கிரிக்கெட் கேரியரை மேம்படுத்தியது அதிசயத்தக்க ஒன்றில்லை.
இவ்வாறான ஷார்ட் பிட்ச்சை(short pitch) கையாள்வதில் அவர் தனி ஒரு அடையாளமாக விளங்கினார்.அவரது முதல் எண்ணமே எதிர்நோக்கி வரும் ஷார்ட் பிட்ச் பந்தை அதன் உயரத்தை பொருத்து தக்க நேரத்தில் ஹூக் ஷாட்களாக மாற்றுவதே.இவரது ஹூக் ஷாட்கள் பல எல்லைக்கோட்டை தொட்டன. மறுபுறம் இவரது கடினமான புல் ஷாட்கள் பீல்டர்களால் தடுக்கப்பட்டன.
1.ரிக்கி பாண்டிங் (Ricky Ponting):
கிரிக்கெட் உலகில் சச்சினுக்கு அடுத்த இடத்தில் அதிக சாதனைகளைப் படைத்தவர் இவரே.இவர் பலமுறை பந்துவீச்சாளர்களைக் கண் கலங்க செய்தும் உள்ளார்.தொடர்ந்து மும்முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியா அணியில் இவரது பங்கு போற்றத்தக்கது.பேட்டிங்கில் மட்டுமல்லாது அணியை வழிநடத்துவதிலும் இவருக்குப் போட்டி வேறு யாரும் இல்லை.இது தவிர அணியின் குறைகளைக் விளக்கும் திறனும் ஆட்டத்தை வெற்றியோடு முடிக்க செய்யும் யுக்தியும் இவரது ஆட்டத்தில் நிறைந்தே காணப்பட்டது. ஒருங்கிணைந்த வலுப்பெற்ற ஆஸ்திரேலியா அணியைப் பல ஆண்டுகளாக காத்த பெருமை இவரையே சாரும்.ரிக்கி பாண்டிங்கை விரைவில் ஆட்டமிழக்க செய்ய அதிவேக பந்துவீச்சாளர்களால் கடைபிடிக்கப்பட்ட யுக்தியே குறுகிய பந்து (short pitch) முறையாகும்.
வடக்கை பேட்ஸ்மனான இவர் ஏறத்தாழ 17 வருடங்கள் கிரிக்கெட் உலகில் ஹூக் மற்றும் புல் ஷாட்களில் கைத்தேர்ந்தவராகத் தன்னை நிருபித்தார். மேலும் அவ்வகையான பந்தைக் கையாளும் இவரது போக்கே ஆகச்சிறந்ததாகவும் அறியப்பட்டன.
கால்களைப் பின்னோக்கி அடித்தாடும் இவரது திறன் பிறரைவிட வேறுபட்டது.மேலும் பெரிதும் இவரை பிரபலமடைய செய்தது, இவர் பந்துகளை நேர்த்தியாக அடித்தது மட்டுமல்லாது மிகவும் குறுகி சரியான இடைவெளியில் வந்த பந்துகளைக் கச்சிதமாய் அடிப்பார்.
இவரது ஹூக் மற்றும் புல் ஷாட்கள் பார்வையாளர்களைப் பிரமிப்படைய செய்தன. பல நேரங்களில் கணக்கான இடைவெளியையும் காண முடிந்தது. இருப்பினும், முன்னே வந்து ஆடச் செய்யும் பந்துகளிலும் இவர் விரும்பியபடி புல் ஷாட்களாக மாற்றிய காரணத்தினாலே மிகச்சிறந்த புல் ஷாட்களை அடிக்கும் வீரராக நன்கு அறியப்பட்டார்.
எழுத்து:
எஸ்.சமதார்
மொழியாக்கம்:
சே.கலைவாணன்