2.விவ் ரிச்சர்ட்ஸ் (Viv Richards):
கிரிக்கெட் உலகின் அபாயகரமான மட்டையாளர்களின் அரசனாக விளங்கியவர் விவ் ரிச்சர்ட்ஸ்.எவர் ஒருவரானும் இவர் உலகின் தலைச்சிறந்த பந்துவீச்சாளர்களை எவ்வாறு கையாண்டார் என்பதையே நோக்குவர்.மற்ற வீரர்களைவிட இவரே நன்கு அனைவராலும் அறியப்பட்டார்.மேலும் பந்தைக் கையாளும் யுக்தியால் ரசிகர்களை ஈர்த்தார்.கிரிக்கெட் உலகில் தனக்கு நிகர் தானே எனவும் நிரூபித்தார்.
இவர் தலைக்கவசம் அணியாமல் ஒரு திமிருத் தனமாக களத்தில் இறங்கிவிட்டாலே போதும் பந்து வீச்சாளர்களுக்குப் பயம் தொற்றிக்கொள்ளும். அன்றைய காலத்தின் டிவிலியர்ஸ் என்று ரிச்சர்ட்ஸை அழைத்தால் அது மிகையாகாது. எப்பேற்பட்ட பந்து தன்னை நோக்கி வந்தாலும் மைதானத்தின் நாலாபுறமும் சிதறடிப்பார்.கிட்டத்தட்ட இருமுறை மேற்கிந்திய தீவுகள் உலக சாம்பியன் ஆனதும் இவராலேயே.அப்போது இம்மாதிரியான திறம்பட சமாளிக்கும் வீரர்கள் கிரிக்கெட் உலகில் மிக மிகக் குறைவே.அதுபோல் இவரைப் போன்ற ஒரு வீரர் கிடைக்க பல நூற்றாண்டுகள் ஆகும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.இதுவே போதும் அவரது ஆக்ரோஷத்திற்கு அறிகுறியாகும்.மேலும், இவர் ஹூக் மற்றும் புல்(pull) ஷாட்களை கையாண்டு தனது கிரிக்கெட் கேரியரை மேம்படுத்தியது அதிசயத்தக்க ஒன்றில்லை.
இவ்வாறான ஷார்ட் பிட்ச்சை(short pitch) கையாள்வதில் அவர் தனி ஒரு அடையாளமாக விளங்கினார்.அவரது முதல் எண்ணமே எதிர்நோக்கி வரும் ஷார்ட் பிட்ச் பந்தை அதன் உயரத்தை பொருத்து தக்க நேரத்தில் ஹூக் ஷாட்களாக மாற்றுவதே.இவரது ஹூக் ஷாட்கள் பல எல்லைக்கோட்டை தொட்டன. மறுபுறம் இவரது கடினமான புல் ஷாட்கள் பீல்டர்களால் தடுக்கப்பட்டன.