1.ரிக்கி பாண்டிங் (Ricky Ponting):
கிரிக்கெட் உலகில் சச்சினுக்கு அடுத்த இடத்தில் அதிக சாதனைகளைப் படைத்தவர் இவரே.இவர் பலமுறை பந்துவீச்சாளர்களைக் கண் கலங்க செய்தும் உள்ளார்.தொடர்ந்து மும்முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியா அணியில் இவரது பங்கு போற்றத்தக்கது.பேட்டிங்கில் மட்டுமல்லாது அணியை வழிநடத்துவதிலும் இவருக்குப் போட்டி வேறு யாரும் இல்லை.இது தவிர அணியின் குறைகளைக் விளக்கும் திறனும் ஆட்டத்தை வெற்றியோடு முடிக்க செய்யும் யுக்தியும் இவரது ஆட்டத்தில் நிறைந்தே காணப்பட்டது. ஒருங்கிணைந்த வலுப்பெற்ற ஆஸ்திரேலியா அணியைப் பல ஆண்டுகளாக காத்த பெருமை இவரையே சாரும்.ரிக்கி பாண்டிங்கை விரைவில் ஆட்டமிழக்க செய்ய அதிவேக பந்துவீச்சாளர்களால் கடைபிடிக்கப்பட்ட யுக்தியே குறுகிய பந்து (short pitch) முறையாகும்.
வடக்கை பேட்ஸ்மனான இவர் ஏறத்தாழ 17 வருடங்கள் கிரிக்கெட் உலகில் ஹூக் மற்றும் புல் ஷாட்களில் கைத்தேர்ந்தவராகத் தன்னை நிருபித்தார். மேலும் அவ்வகையான பந்தைக் கையாளும் இவரது போக்கே ஆகச்சிறந்ததாகவும் அறியப்பட்டன.
கால்களைப் பின்னோக்கி அடித்தாடும் இவரது திறன் பிறரைவிட வேறுபட்டது.மேலும் பெரிதும் இவரை பிரபலமடைய செய்தது, இவர் பந்துகளை நேர்த்தியாக அடித்தது மட்டுமல்லாது மிகவும் குறுகி சரியான இடைவெளியில் வந்த பந்துகளைக் கச்சிதமாய் அடிப்பார்.
இவரது ஹூக் மற்றும் புல் ஷாட்கள் பார்வையாளர்களைப் பிரமிப்படைய செய்தன. பல நேரங்களில் கணக்கான இடைவெளியையும் காண முடிந்தது. இருப்பினும், முன்னே வந்து ஆடச் செய்யும் பந்துகளிலும் இவர் விரும்பியபடி புல் ஷாட்களாக மாற்றிய காரணத்தினாலே மிகச்சிறந்த புல் ஷாட்களை அடிக்கும் வீரராக நன்கு அறியப்பட்டார்.
எழுத்து:
எஸ்.சமதார்
மொழியாக்கம்:
சே.கலைவாணன்