ஐபிஎல் தொடரானது இந்தியாவில் வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்பட்டு வரும் தொடர் ஆகும். இந்த ஐபிஎல் தொடர், 2008ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 11 வருடமாக இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் முன்னணி வீரர்களை விட, புதிதாய் களமிறங்கும் இளம் வீரர்கள் தான் அதிரடியாய் விளையாடுகின்றனர். எனவே ஐபிஎல் தொடரில் திறமையான இளம் வீரர்களுக்கு பஞ்சமிருக்காது.
இந்த ஐபிஎல் தொடரை பயன்படுத்தி தனது திறமையை வெளிப்படுத்தும், இளம் வீரர்கள் தனது தாய் நாட்டிற்காக விளையாடும் வாய்ப்பை பெற்று வருகின்றனர். பொதுவாக டி20 தொடரை பொறுத்தவரை ஒரு பேட்ஸ்மேனின் ஸ்ட்ரைக் ரேட் என்பது, அவர் எப்படிப்பட்ட பேட்ஸ்மேன் என்பதை வெளி உலகத்திற்கு காட்டுகிறது. இவ்வாறு ஐபிஎல் தொடரில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள வீரர்களைப் பற்றி இங்கு காண்போம்.
#3) க்ளென் மேக்ஸ்வெல் (ஸ்ட்ரைக் ரேட் 161.13)
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த அதிரடி வீரரான கிளென் மேக்ஸ்வெல். ஐபிஎல் தொடரில் அதிரடி வீரர்களின் பட்டியலில், மிக முக்கியமான இடத்தில் இருப்பவர் மேக்ஸ்வெல். வந்த சிறிது நேரத்தில் அதிரடியை காட்டக் கூடிய திறமை படைத்தவர். 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர், இவருக்கு மிகச் சிறப்பானதாக அமைந்தது. 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இவர் 16 போட்டிகளில் மொத்தம் 554 ரன்களை விளாசினார். இதுவரை அவர் மொத்தம் 69 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 1297 ரன்களை குவித்துள்ளார். அதில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 161.13 ஆகும்.
#2) ரிஷப் பண்ட் (ஸ்ட்ரைக் ரேட் 162.71)
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் இளம் அதிரடி வீரரான ரிஷப் பண்ட். இவர் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் தற்போது இந்திய அணியில் தனக்கென நிரந்தர ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடினார். அதில் அவர் குவித்த மொத்த ரன்கள் 684 ஆகும். இதுவரை மொத்தம் 38 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, அதில் 1248 ரன்கள் குவித்துள்ளார். அதில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 162.71 ஆகும்.
#1) ஆண்ட்ரே ரசல் ( ஸ்ட்ரைக் ரேட் 177.29 )
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த ரசல். இவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார். எந்த சூழ்நிலையாக இருந்தாலும் போட்டியை தன் வசம் மாற்றக் கூடிய திறமை படைத்தவர். பேட்டிங்கில் மட்டுமின்றி பந்துவீச்சிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவர் 140 கி.மீ வேகத்தில் பந்து வீசுகிறார். இதுவரை மொத்தம் 44 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 177.29 ஆகும்.