பிக் பேஷ் டீ-20 லீக் 8 வது சீசன் ஆஸ்திரேலியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவின் ஐபிஎல் போன்று நடத்தப்படும் புகழ் பெற்ற கிரிக்கெட் தொடர் பிக் பாஷ் டீ-20 லீக். இதில் தற்போழுது 8 வது சீசனின் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் ஆஸ்திரேலியாவின் அனைத்து இளம் வீரர்கள் மற்றும் மூத்த வீரர்கள் விளையாடி வருகின்றனர். மற்ற நாட்டு வீரர்களும் பெரும் அளவில் பங்கேற்று வருகின்றனர். இந்த தொடர் மொத்தம் 56 லீக் போட்டிகளை கொண்டது, இதில் 53 வது போட்டி இன்று ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பென் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மெல்போன்ர் ஸ்டார்ஸ் மற்றும் பிரிஸ்பென் ஹொட் அணிகள் மோதின. மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 4வது இடத்திலும் பிரிஸ்பென் அணி 5வது இடத்திலும் உள்ளதால் இந்த போட்டி இரண்டு அணிகளுக்கும் முக்கியமானதாக கருதப்பட்டது. . இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி முன்னேற்றம் அடையும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்கு போராடியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பென் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி களம் இறங்கிய மெல்போர்ன் அணியில் தொடக்க வீரர்களாக மார்கஸ் ஸ்டொயிநிஸ் மற்றும் பென் டன்ங் இருவரும் களம் இறங்கினர். அணி 33 ரன்கள் எடுத்தபோது பென் டன்ங் 14 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் களம் இறங்கிய பிடர் ஹாண்டஸ்கோம்ப் 1 ரன்னில் ஜாஷ் லேலர் பந்தில் அவுட் ஆகினார். மறுமுனையில் அதிரடியில் மிரட்டினார் ஸ்டோயிநிஸ். அதன் பின்னர் களம் இறங்கிய மேக்ஸ்வேல் 5 ரன்னில் லேலர் பந்தில் அவுட் ஆகினார். இவரை அடுத்து களம் இறங்கிய நிக் மேடின்ஸன் 12 ரன்னில் மிட்செல் ச்வேப்சொன் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த ஸெப் கொட்ச் 11 ரன்னில் ஜேக் பிரஸ்டிவிட்ஜ் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய ட்வெயின் பிராவோ அதிரடியாக விளையாடி 21 ரன்களை அடித்து ரன் அவுட் ஆகி வெளியேறினார். பிரிஸ்பென் அணியில் அதிக விக்கெட்களை லேலர் 3 விக்கெட் எடுத்தார். 20 ஓவர் முடிவில் மெல்போர்ன் அணி 156 ரன்களை எடுத்தது.
இதனை அடுத்து களம் இறங்கிய பிரிஸ்பென் அணியில் தொடக்கவீரர்களாக பென் கட்டிங் மற்றும் மேக்ஸ் பிரையன்ட் இருவரும் களம் இறங்கினர். தொடக்கத்திலேயே அதிரடி காட்டிய இருவரும் அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். இருவரையும் விக்கெட்களையும் எடுக்க முடியாமல் மெல்போர்ன் அணி வீரர்கள் தடுமாறினர். இருவரும் முதல் பவர்பிளேக்கு 94 ரன்களை குவித்து ஆடடம் இழக்காமல் இருந்த நிலையில், இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இறுதியில் பிரிஸ்பேன் அணி விக்கெட் இழப்பின்றி 158 ரன்களை அடித்து வெற்றி பெற்றது. மேக்ஸ் பிரையன்ட் 71 ரன்களும் கட்டிங் 81 ரன்களையும் குவித்தனர். இந்த வெற்றியின் முலம் பிரிஸ்பென் அணியின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.