பிக் பேஷ் டீ-20 லீக் 8 வது சீசன் ஆஸ்திரேலியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவின் ஐபிஎல் போன்று நடத்தப்படும் புகழ் பெற்ற கிரிக்கெட் தொடர் பிக் பாஷ் டீ-20 லீக். இதில் தற்போழுது 8 வது சீசனின் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் ஆஸ்திரேலியாவின் அனைத்து இளம் வீரர்கள் மற்றும் மூத்த வீரர்கள் விளையாடி வருகின்றனர். மற்ற நாட்டு வீரர்களும் பெரும் அளவில் பங்கேற்று வருகின்றனர். இந்த தொடர் மொத்தம் 56 லீக் போட்டிகளை கொண்டது, தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது பிக் பேஷ் லீக் போட்டிகள இதில் 55 வது போட்டி இன்று ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெர்ரா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சிட்னி தண்டர்ஸ் மற்றும் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின. ஏற்கனவே அரைஇறுதிக்கு தகுதிப்பெற்றுள்ளது ஹோபார்ட் அணி. அரைஇறுதி வாய்ப்பை இழந்த நிலையில் தனது கடைசி லீக் போட்டியை விளையாடுகிறது சிட்னி தண்டர்ஸ் அணி.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சிட்னி தண்டர்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் களம் இறங்கிய ஹோபார்ட் அணியில் தொடக்க வீரர்களாக மேத்வ் வேட் மற்றும் டி ஆர்சி ஸ்ர்ட் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே டி ஆர்சி ஸ்ர்ட் 7 ரன்னில் பேட் கம்மிங் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் களம் இறங்கிய காலேப் பால் ஜெவேல் வந்த வேகத்தில் 7 ரன்னில் கிரிஸ் கிரின் பந்தில் அவுட் ஆகினார். இதனை அடுத்து களம் இறங்கிய பென் மெக்டெர்மட் நிலைத்து விளையாடினர். நிலைத்து விளையாடி மேத்வ் வேட் 45 ரன்னில் பேட் கம்மிங்ஸ் பந்தில் அவுட் ஆகினார். இதனை அடுத்து களம் இறங்கிய ஜார்ஜ் பெய்லி 53 ரன்னில் ரன் அவுட் ஆகினார். நிலைத்து விளையாடிய பென் மெக்டெர்மட் 44 ரன்னில் கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். ஹோபார்ட் அணி 20 ஓவர்கள் முடிவில் 165 ரன்களை எடுத்தது.
இதனை அடுத்து களம் இறங்கிய சிட்னி தண்டர்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக கவாஜா மற்றும் வாட்சன் இருவரும் களம் இறங்கினர். தொடக்கத்தில் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்திய சிட்னி அணியில், வாட்சன் முதல் விக்கெட்டாக 15 ரன்னில் ரிலே மெரிடித் பந்தில் அவுட் ஆகினார். இதனால் அடுத்து களம் இறங்கிய ஃபர்குஸன் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடக்கத்தில் களம் இறங்கிய கவாஜா 36 ரன்னில் க்கைஸ் அஹ்மத் பந்தில் அவுட் ஆகினார். அடுத்தாக களம் இறங்கிய ஆன்டன் டெவிச் 4 ரன்னில் டி ஆர்சி ஸ்ர்ட் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் களம் இறங்கிய டேனியல் சாம்ஸ் 7 ரன்னில் டி ஆர்சி ஸ்ர்ட் பந்தில் அவுட் ஆகினார். இவரை தொடர்ந்து களம் இறங்கிய கில்கஸ் டக் அவுட் ஆகினார். நிலைத்து விளையாடி ஃபர்குஸன் 47 ரன்னில் ஆர்சர் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் வந்த வீரர்கள் கைகொடுக்க சிட்னி அணி 166 ரன்களை அடித்து வெற்றி பெற்றது. பேட் கம்மிங்ஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.