பெர்த் அணியை வீழ்த்திய அடிலெய்ட் அணி

Pravin
Rashid khan
Rashid khan

பிக் பேஷ் டீ-20 லீக் 8 வது சீசன் ஆஸ்திரேலியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவின் ஐபிஎல் போன்று நடத்தப்படும் புகழ் பெற்ற கிரிக்கெட் தொடர் பிக் பாஷ் டீ-20 லீக். இதில் தற்போழுது 8 வது சீசனின் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் ஆஸ்திரேலியாவின் அனைத்து இளம் வீரர்கள் மற்றும் மூத்த வீரர்கள் விளையாடி வருகின்றனர். மற்ற நாடு வீரர்களும் பெரும் அளவில் பங்கேற்று வருகின்றனர். இந்த தொடரில் 56 லீக் போட்டிகளை கொண்டது, கடைசி கட்டத்தை எட்டியுள்ளது பிக் பேஷ் லீக் போட்டிகள் இதில் 54 வது போட்டி இன்று ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அடிலெய்ட் ஸ்ட்ரைகர்ஸ்மற்றும் பெர்த் ஸ்கார்ஷாஸ் அணிகள் மோதின. இரண்டு அணிகளும் அரைஇறுதி வாய்ப்பை தவறவிட்ட நிலையில் இந்த போட்டியை விளையாடுகின்றனர். இந்த போட்டியின் வெற்றி எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்த போவதில்லை என்பதால் ஆட்டத்தில் விருவிறுப்பு குறைந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பெர்த் ஸ்கார்ஷாஸ் அணி முதலில் பேடிங்கை தேர்வு செய்தது. அதன் படி பெர்த் அணியில் தொடக்க வீரர்களாக ஜோஷ் இங்லிஸ் மற்றும் நிக் ஹாப்சன் இருவரும் களம் இறங்கினர். ஹாப்சன் வந்த வேகத்தில் 9 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த பார்ன்க்ரோஃப்ட் சிறிது நேரம் நிலைத்து விளையாட இங்கிஸ் அதிரடியில் மிரட்டினார். பார்ன்க்ரோஃப்ட் 22 ரன்னில் ரஷித் கான் பந்தில் அவுட் ஆகினார். நிலைத்து விளையாடி இங்லிஸ் அரைசதம் அடித்தார். பின்னர் வந்த ஆஷ்டன் டர்னர் வந்த வேகத்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். நிலைத்து விளையாடிய இங்லிஸ் 55 ரன்னில் ஹாரி நில்சனிடம் ரன் அவுட் ஆகினார்.

Porth team
Porth team

இதனை அடுத்து வந்த மிட்சல் மார்ஷ் அதிரடியில் ஆட்டத்தை வெளிபடுத்தினர். அவருடம் விளையாடிய நேதன் கூல்ட்டர் – நைல் 25 ரன்னில் கேமருன் வாலென்டி பந்தில் அவுட் ஆகினார். பின்னர் களம் இறங்கிய சான் டெர்ரி 4 ரன்னில் ரஷித் கான் பந்தில் அவுட் ஆகினார். அதிரடியாக விளையாடிய மிட்சல் மார்ஷ் அரைசதம் அடித்து அசத்தினார். பெர்த் அணி 20 ஓவர் முடிவில் 174 ரன்களை சேர்த்தது.

Wells fifty
Wells fifty

இதனை அடுத்து களம் இறங்கிய அடிலெய்ட் அணியில் தொடக்க வீரர்களாக அலெக்ஸ் காரே மற்றும் ஜேக் வீதேர்லேடு இருவரும் களம் இறங்கினர். வீதேர்லேடு 9 ரன்னில் கெல்லி பந்தில் அவுட் ஆகினார். இதனை அடுத்து களம் இறங்கிய ட்ராவிஸ் ஹெட் 10 ரன்னில் கூல்ட்டர் – நைல் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் வந்த ஜோனதன் வெல்ஸ் நிலைத்து விளையாட அலெக்ஸ் காரே 24 ரன்னில் அவுட் ஆகினார். வெல்ஸ் உடன் இணைந்த ஹாரி நில்சன் அதிரடி காட்டினார். இருவரும் சிறப்பாக விளையாடி அடிலெய்ட் அணி வெற்றி பெற வைத்தனர். வெல்ஸ் 69 ரன்னில் கூல்ட்டர் நைல் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் வந்த வாலென்டி 5 ரன்னில் அவுட் ஆகினார். அடிலெய்டு அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் பெர்த் அணியை வென்றது.