ஹோபார்ட் அணியை வீழ்த்தியது அடிலேய்ட் அணி

Pravin
Matthew wate
Matthew wate

பிக் பேஷ் டீ-20 லீக் 8 வது சீசன் ஆஸ்திரேலியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்தியவின் ஐபிஎல் போன்று நடத்தப்படும் புகழ் பெற்ற கிரிக்கெட் தொடர் பிக் பாஷ் டீ-20 லீக். இதில் தற்போழுது 8 வது சீசனின் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் ஆஸ்திரேலியாவின் அனைத்து இளம் வீரர்கள் மற்றும் மூத்த வீரர்கள் விளையாடி வருகின்றனர். மற்ற நாட்டு வீரர்களும் பெரும் அளவில் பங்கேற்று வருகின்றனர். இந்த தொடரில் 56 லீக் போட்டிகளை கொண்டது, இதில் 47 வது போட்டி இன்று ஆஸ்திரேலியாவில் உள்ள லஞ்சஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹோபார்ட் ஹரிக்கன்ஸ் மற்றும் அடிலேய்ட் ஸ்டரைக்கர்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற அடிலேய்ட் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன் படி களம் இறங்கியது ஹோபார்ட் அணியில் தொடக்க வீரர்களாக மேத்திவ் வேடு மற்றும் டி ஷார்ட் களம் இறங்கினர் . இருவரும் சிறப்பான தொடக்கத்தை தந்தனர். முதல் ஆறு ஓவரில் இருவரும் சிறப்பான ஆட்டத்தால் 53 ரன்களை சேர்த்தது. டி ஷார்ட் 26 ரன்னில் லாக்லின் ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த ஜாக்வால் சிறிது நேரம் நிலைத்து விளையாடினார். ஸ்கோர் 114 இருந்த போது ஜாக்வால் 17 ரன்னில் ரஷித் கான் ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். இதனை அடுத்து களம் இறங்கிய பென் மெக்டெர்மோட் 18 ரன்னில் ரஷித் கான் ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் நிலைத்து விளையாடிய வேடு 88 ரன்னில் லாக்லின் ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் . பின்னர் களம் இறங்கிய பிரைலி நேசர் ஓவரில் டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் களம் இறங்கிய பாவுல்க்னெர் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். ஜோப்ராஸ் ஆர்சர் 11 ரன்னில் லாக்லின் ஓவரில் அவுட் ஆகினார். ஹோபார்ட் அணி 20 ஓவர் முடிவில் 169 ரன்களை சேர்த்தது. அடிலேய்ட் அணியில் பென் லாக்லின் 3 விக்கெட்களை வீழ்த்தினார். ரஷித் கான் 2 விக்கெட்களை வீழ்த்தினார் .

Ben Laughlin
Ben Laughlin

பின்னர் களம் இறங்கிய அடிலேய்ட் அணியில் தொடக்க வீரர்களாக அலேக்ஸ் கேரி மற்றும் வெதரால்ட் களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்திலேயே அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினர். அலெக்ஸ் கேரி அரை சதத்தை கடந்தார். 54 ரன்னில் மலிங்கா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார் . இதனை அடுத்து களம் இறங்கிய லாக்மென் சிறிது நேரம் களத்தில் நின்றார் . மறுபுறம் நிலைத்து விளையாடிய வெதரால்ட் 82 ரன்னில் ஆர்சர் ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார்.

Weatherald
Weatherald

பின்னர் களம் இறங்கிய கேப்டன் இன்கிராம் நிலைத்து நின்றார் லாக்மென் 5 ரன்னில் ப்ரிமென் பந்தில் அவுட் ஆகினார். அடிலேட் அணி 17.5 ஓவரில் 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது . சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய வெதரால்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.