பிக் பேஷ் டீ-20 லீக் 8 வது சீசன் ஆஸ்திரேலியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது . இந்தியவின் ஐபிஎல் போன்று நடத்தப்படும் புகழ் பெற்ற கிரிக்கெட் தொடர் பிக் பாஷ் டீ-20 லீக் . இதில் தற்போழுது 8 வது சீசனின் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது . இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் ஆஸ்திரேலியாவின் அனைத்து இளம் வீரர்கள் மற்றும் மூத்த வீரர்கள் விளையாடி வருகின்றனர். மற்ற நாடு வீரர்களும் பெரும் அளவில் பங்கேற்று வருகின்றனர். இந்த தொடரில் 56 லீக் போட்டிகளை கொண்டது, இதில் 44 வது போட்டி இன்று ஆஸ்திரேலியாவில் உள்ள ஹாபார்ட் மைதானத்தில் நடைபெற்றது . இந்த போட்டியில் ஹாபார்ட் ஹரிக்கன்ஸ் மற்றும் பிரிஸ்பென் ஹீட் அணிகள் மோதின .
இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஹாபார்ட் ஹரிக்கன்ஸ் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது . அதன் படி களம் இறங்கிய பிர்ஸ்பென் அணியில் தொடக்க வீரர்களாக மெக்ஸ் மற்றும் மெக்குலம் களம் இறங்கினர் . மெக்ஸ் 7 ரன்னிலும், மெக்குலம் 3 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர் . பின்னர் களம் இறங்கிய லின் 10 ரன்னில் ஆர்சர் பந்தில் அவுட் ஆகி வெளியாகினார் . பின்னர் வந்த ரேன்ஷா அதே ஓவரில் ஆர்சர் பந்தில் டக் அவுட் ஆகி வெளியேற்னார் . பின்னர் ஜோடி சேர்ந்த ரோஸ் மற்றும் பைசன் இருவரும் நிலைத்து நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் . இந்த ஜோடி 100 ரன்களுக்கு மேல் நிலைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது . பின்னர் ரோஸ் 62 ரன்னிலும் பைசன் 50 ரன்னிலும் தங்களது விக்கெட்களை இழந்தனர் . 20 ஓவர்கள் முடிவில் பிரிஸ்பென் அணி 145 ரன்கள் எடுத்தது . ஹாபார்ட் அணியில் ஆர்சர் 2 விக்கெட்களும் , மேடி 2 விக்கெட்களும் , ப்வுளகனர் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர் .
146 என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய ஹாபாரட் அணியில் தொடக்க வீரர்காளாக அணியின் கேப்டன் மேத்திவ் வாடு மற்றும் ஸர்ட் களம் இறங்கினர் மேத்திவ் வாட் 12 ரன்னில் கட்டிங் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார் . பின்னர் டி ஷார்ட் உடன் ஜோடி சேர்ந்த ஜெவால் நிலைத்து நின்று விளையாடினார். இருவரும் அணியின் வெற்றிக்கு உதவினர் . இருவரும் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்டுத்தி இருவரும் அரைசதத்தை கடந்தனர் . டி ஷார்ட் 68 ரன்களை எடுத்தார் அதொடு சேர்த்து இந்த சிசனில் மட்டும் 572 ரன்களை அடித்து முதல் 500 ரன்களை கடந்தவர் என்ற சாதனையை பிக் பேஸ் லிக் தொடரில் படைத்தார் . ஜெவால் 61 ரன்களும் எடுத்தார் . 146 ரன்கள் இலக்கை 14.2 ஓவரில் எட்டி எளிதில் வெற்றி பெற்றது ஹாபார்ட் அணி . ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய டி ஷார்ட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஹாபார்ட் அணி இதுவரை விளையாடி உள்ள 11 போட்டிகளில் 9 போட்டிகளில் வெற்றி பெற்று பாய்ண்ட்ஸ் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது .