பிக் பேஷ் டீ-20 லீக் 8 வது சீசன் ஆஸ்திரேலியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது . இந்தியவின் ஐபிஎல் போன்று நடத்தப்படும் புகழ் பெற்ற கிரிக்கெட் தொடர் பிக் பாஷ் டீ-20 லீக் . இதில் தற்போழுது 8 வது சீசனின் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது . இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் ஆஸ்திரேலியாவின் அனைத்து இளம் வீரர்கள் மற்றும் மூத்த வீரர்கள் விளையாடி வருகின்றனர். மற்ற நாடு வீரர்களும் பெரும் அளவில் பங்கேற்று வருகின்றனர். இந்த தொடரில் 56 லீக் போட்டிகளை கொண்டது, இதில் 48 வது போட்டி இன்று ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பென் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெர்த் ஸ்கார்ஷஸ் மற்றும் பிரிஸ்பென் ஹீட் அணிகள் மோதின .
இந்த போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பென் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன் படி களம் இறங்கிய பெர்த் ஸ்கார்ஷஸ் அணியில் தொடக்க வீரர்களாக ஜாஸ் ங்லிஸ் மற்றும் சான் மார்ஷ் இருவரும் களம் இறங்கினர். தொடக்கத்திலேயே சரிவை கண்டது பெர்த் அணி சான் மார்ஷ் 2 ரன்னில் முஜிப் ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களம் இறங்கிய பென்கிராப்ட் நிலைத்து விளையாடினார். ஜாஸ் ங்லிஸ் 9 ரன்னில் மேத்திவ் குனேமான் ஓவரில் அவுட் ஆகினார். இதனை அடுத்து களம் இறங்கிய டர்னர் 2 ரன்னில் முஜிப் ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். அதனை அடுத்து களம் இறங்கிய மிட்சில் மார்ஷ் 15 ரன்னில் கட்டிங் பந்தில் அவுட் ஆகினார்.
நிலைத்து விளையாடிய பென்கிராப்ட் 32 ரன்னில் முஜிப் பந்தில் அவுட் ஆகினார். அதனை அடுத்து களம் இறங்கிய நிக் ஹப்சன் அதிரடியாக விளையாடினார். மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் விக்கெட்களை இழந்தனர். பின்னர் களம் இறங்கிய கின்ஸிலிப் 9 ரன்னில் அவுட் ஆகினார். அதன் பின்னர் பந்து வீசிய லலோர் ஹாட்-ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். அவர் வீசிய 17.6 ஓவரில் ஆன்ரோ டை 4 ரன்னிலும், 19.1 வது ஓவரில் கேல்லி 2 ரன்னிலும், 19.2 பந்தில் ஹப்சன் 43 ரன்னிலும் தங்களது விக்கெட்களை இழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 128-9 ரன்களை எடுத்தது.
இதனை அடுத்து களம் இறங்கிய பிரிஸ்பென் அணியில் தொடக்க வீரர்களாக மெக்ஸ் பிரியன்ட் மற்றும் கட்டிங் இருவரும் களம் இறங்கினர். கட்டிங் 12 ரன்னில் குடிர் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் களம் இறங்கிய லிண் நிலைத்து விளையாடினார். மெகஸ் பிரியன்ட் 26 ரன்னில் கின்ஸிலிப் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் களம் இறங்கிய பிரண்டன் மெக்கலம் 3 ரன்னில் கேல்லி ஓவரில் அவுட் ஆகினார். பின்னர் களம் இறங்கிய ரேன்ஷா 15 ரன்னில் கேல்லி பந்தில் அவுட் ஆகினார். நிலைத்து விளையாடிய லிண் 56 ரன்கள் எடுத்து ஆட்டம் இலக்காமல் இருந்தார். 17.3 ஓவரில் 130 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை முஜிப் பெற்றார்.