மெல்போர்ன் அணியை வீழ்த்தியது ஹொபார்ட் அணி

Pravin
Harbert team
Harbert team

பிக் பேஷ் டி-20 லீக் 8 வது சீசன் ஆஸ்திரேலியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்தியவின் ஐபிஎல் போன்று நடத்தப்படும் புகழ் பெற்ற கிரிக்கெட் தொடர் பிக் பாஷ் டி-20 லீக். இதில் தற்போழுது 8 வது சீசனின் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் ஆஸ்திரேலியாவின் அனைத்து இளம் வீரர்கள் மற்றும் மூத்த வீரர்கள் விளையாடி வருகின்றனர். மற்ற நாடு வீரர்களும் பெரும் அளவில் பங்கேற்று வருகின்றனர். இந்த தொடரில் 56 லீக் போட்டிகளை கொண்டது, இதில் 51 வது போட்டி இன்று ஆஸ்திரேலியாவில் உள்ள ஹொபார்ட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹொபார்ட் ஹரிக்கன்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனெகெட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் மெல்போர்ன் வெற்றி பெற்று இரண்டாவது இடத்திற்கு முன்னேற முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கபட்டது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் அணி முதலில் பேடிங்கை தேர்வு செய்தது. அதனை அடுத்து முதலில் களம் இறங்கிய ஹொபார்ட் ஹரிக்கன்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக அதிரடி மன்னர்கள் மேத்வ் வேட் மற்றும் டி ஆர்சி ஸ்ர்ட் இருவரும் களம் இறங்கினர். தொடக்கத்திலேயே அதிரடி காட்டிய வேட் மற்றும் டி ஆர்சி ஸ்ர்ட் இருவரும் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இந்த ஜோடி 87 ரன்களை குவித்தது. 9 வது ஒவரை விசிய கேன் ரிச்சர்ட்சன், வேட் 58 ரன்னிலும் டி ஆர்ட் ஸ்ர்ட் 28 ரன்னிலும் அவுட் ஆக்கினார். பின்னர் வந்த ஜெவேல் 4 ரன்னில் நபி பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் களம் இறங்கிய பென் மெக்டேர்மட் நிலைத்து விளையாட மறுபக்கம் களம் இறங்கிய ஜார்ஜ் பெய்லி 9 ரன்னில் ஹாரி கர்நீ பந்தில் அவுட் ஆகினார். பின்னர் வந்த சைமன் மிலென்கோ அதிரடியாக விளையாடி 27 ரன்களை அடித்தார். பின்னர் வந்த ஆர்சர் 3 ரன்னில் அவுட் ஆக ஹொபார்ட் அணி 183-6 ரன்களை எடுத்தது.

Aarchar
Aarchar

பின்னர் களம் இறங்கிய மெல்போர்ன் அணியில் தொடக்க வீரர்களாக ஆரோன் ஃபின்ச் மற்றும் மார்கஸ் ஹாரிஸ் இருவரும் களம் இறங்கினர். தொடக்கத்திலேயே 3 ரன்னில் ஆர்சர் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார் ஹாரிஸ். பின்னர் வந்த சாம் ஹார்ப்பர் ஃபின்ச் உடன் இணைந்து நிலைத்து விளையாடினார். ஃபின்ச் 35 ரன்னில் க்கைஸ் அஹ்மத் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் வந்த டாம் கூப்பர் நிலைத்து விளையாட சாம் ஹார்ப்பர் 20 ரன்னில் டி ஆர்சி ஸ்ர்ட் பந்தில் அவுட் ஆகினார்.

Aaron Finch
Aaron Finch

பின்னர் வந்த நபி 3 ரன்னில் டி ஆர்சி ஸ்ர்ட் பந்தில் அவுட் ஆகினார். டாம் கூப்பர் அதிரடி காட்ட ரன் அதிகரித்தது. கிரிஸ்டியன் 15 ரன்னில் மெடிரித் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் வந்த ஹார்வி 15 ரன்னில் ஆர்சர் பந்திலும் டாம் கூப்பர் 44 ரன்னில் க்கைஸ் அஹ்மத் பந்திலும் அவுட் ஆகினர். மெல்போர்ன் அணி 20 ஓவர் முடிவில் 167 ரன்களை எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மேத்வ் வேட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Edited by Fambeat Tamil