ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மிகப்பெரிய கிரிக்கெட் தொடர் பிக் பாஷ் லீக் டி -20 கிரிக்கெட் தொடர். இந்த தொடரின் எட்டாவது சீசன் ஆஸ்திஸ்திரேவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் அரை இறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றனர். முதல் அரை இறுதி போட்டியில் ஹொபார்ட் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி. இந்த நிலையில் இரண்டாவது அரை இறுதி போட்டி மெல்போர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் மெல்போர்ன் ரெனெகெட்ஸ் அணி மற்றும் சிட்னி சிக்ஸெர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு முன்னேறும் என்பதால் மிகவும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனெகெட்ஸ் அணி முதலில் பந்து விச்சை தேர்வு செய்தது. அதன் படி களம் இறங்கிய சிட்னி சிக்ஸெர்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ஜோஷ் பிலிப் மற்றும் டேனியல் ஹ்யூஃக்ஸ் இருவரும் களம் இறங்கினர்.
இந்த ஜோடி தொடக்கத்தின் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் மெல்போர்ன் அணி தடுமாறியது. இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டம் இரு வீரர்களும் அரை சதங்களை விளாசினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 87 ரன்களை குவித்தது. இந்த ஜோடியை கேமரூன் பாய்ஷ் தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் பிரித்தார். ஜோஷ் பிலிப் 52 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த ஜேம்ஸ் வின்ஸ் நிலைத்து விளையாட டேனியல் ஹ்யூஃக்ஸ் 52 ரன்னில் தனது விக்கெட்டை பாய்ஷ் பந்தில் இழந்தார். இதனை அடுத்து களம் இறங்கிய கேப்டன் ஹென்றிக்யூஸ் நிலைத்து விளையாடினார். நிலைத்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய வின்ஸ் 28 ரன்னில் அவுட் ஆகினார். அதன் பின்னர் இறங்கிய சில்க் 18 ரன்னிலும் ஹென்றிக்யூஸ் 28 ரன்னிலும் கடைசி வரை களத்தில் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் சிட்னி அணி 180 ரன்களை அடித்தது.
இதனை அடுத்து களம் இறங்கிய மெல்போர்ன் அணி தனது இன்னிங்ஸை விளையாடியது. தொடக்கத்தில் களம் இறங்கிய மார்கஸ் ஹாரிஸ் 4 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இவருடன் களம் இறங்கிய ஆரோன் பின்ச் நிலைத்து விளையாடினார். அதன் பின்னர் வந்த சாம் ஹார்ப்பர் நிலைத்து விளையாடினார். அதிரடியாக விளையாடி ஹார்ப்பர் 36 ரன்னில் அவுட் ஆகினார். ஸ்டிவ் ஓ கீப் வீசிய பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய கேமரூன் ஒய்ட் நிலைத்து விளையாடினார். ஒய்ட் 29 ரன்களில் ஸான் ஆபட் பந்தில் அவுட் ஆகினார். வந்த வேகத்தில் ஹார்வி 2 ரன்னில் ஹென்றிக்யூஸ் பந்தில் அவுட் ஆகினார்.
அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்த நிலையில் அடுத்து களம் இறங்கிய கிரிஸ்டியன் தனது அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்த மெல்போர்ன் அணி தனது வெற்றி இலக்கை அடைந்து 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கிரிஸ்டியன் கடைசி வரை ஆட்டமிலக்காமல் 31 ரன்னில் களத்தில் இருந்தார். ஆட்ட நாயகன் பட்டத்தையும் பெற்றார் டேனியல் கிரிஸ்டியன்.