ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மிகபெரிய டி-20 கிரிக்கெட் தொடர் பிக் பாஷ் லீக் கிரிக்கெட் தொடர். தற்போழுது இறுதி கட்டத்தை அடைந்துள்ள பிக் பாஷ் லீக்கின் அரையிறுதி போட்டிகள் நடைபெற்று வருகிறது. பிக் பாஷ் லீக்கில் அரை இறுதி போட்டிக்கு நான்கு அணிகள் தகுதி பெற்றன. இதில் முதல் அரை இறுதி போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றம் ஹொபார்ட் ஹரிகேன்ஸ் அணிகளும், இரண்டாவது அரை இறுதி போட்டியில் மெல்போர்ன் ரெனகெட்ஸ் மற்றும் சிட்னி சிக்ஸெர்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் இன்று முதல் அரை இறுதி போட்டி ஹொபார்ட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சமபலத்துடன் இரு அணிகளும் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் அணி ஹொபார்ட் அணியை முதலில் பேட்டிங் செய்ய செய்தது. அதன் படி களம் இறங்கிய ஹொபார்ட் அணியில் தொடக்க வீரர்களாக அணியின் கேப்டன் மேத்திவ் வேட் மற்றும் டி ஆர்சி ஸ்ர்ட் இருவரும் களம் இறங்கினர். இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய வேட் 2 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். நான்கு பந்துகளையே மட்டுமே சந்தித்த வேட் டெனியல் வோரல் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய ஜெவெல்ஸ் 1 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த பென் மெக்டெர்மட் நிலைத்து நின்று விளையாடினார். இந்த ஜோடி 40 ரன்களை சேர்த்த போது டி ஆர்சி ஷார்ட் 35 ரன்னில் ஆடம் ஜாம்பா பந்தில் அவுட் ஆகினார். இதனை தொடர்ந்து களம் இறங்கிய ஜார்ஜ் பெய்லி நிலைத்து நின்று விளையாடினார். இந்த ஜோடி4வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தது. நிலைத்து விளையாடிய பென் மெத்டெர்மட் அரை சதம் அடித்தார். ஜார்ஜ் பெய்லி 37 ரன்னில் டெனியல் வோரல் பந்தில் அவுட் ஆகினார். இவரை தொடர்ந்து களம் இறங்கிய சைமன் மிலென்கோ 3 ரன்னில் அவுட் ஆகினார். பின்னர் வந்த பௌல்க்னர் 4 ரன்னில் அவுட் ஆக ஹொபார்ட் அணி 20 ஓவர்கள் முடிவில் 153 எடுத்தது.
இதனை அடுத்து களம் இறங்கிய மெல்போர்ன் அணி தொடக்க வீரர்களாக மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் பென் டன்க் இருவரும் களம் இறங்கினர். பென் டன்க் 9 ரன்னில் ஆர்சர் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் வந்த பீடர் ஹாண்டஸ்கோம்ப் நிலைத்து விளையாடினார். மார்கஸ் ஸ்டோனிஸ் 18 ரன்னில் அகமத் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் களம் இறங்கிய நிக் மேடின்ஸன் 18 ரன்னில் அகமத் பந்தில் அவுட் ஆகினார். இதனை தொடர்ந்து நிலைத்து விளையாடிய ஹாண்டஸ்கோம்ப் 35 ரன்னில் அகமது பந்தில் அவுட் ஆகினார். 85-4 என்ற நிலையில் ஜோடி சேர்ந்த மேகஸ்வெல் மற்றும் ஸெப் கொட்ச் இருவரும் அதிரடியாக விளையாடி மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வெற்றி பெற செய்தனர். மேக்ஸ்வெல் 43 ரன்களும், கொட்ச் 33 ரன்களும் அடித்தனர். இந்த வெற்றியின் முலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் மெல்போர்ன் அணி வெற்றி அடைய முக்கிய காரணம் இருந்த டெனியல் வோரல் ஆட்ட நாயகன் பட்டத்தை வென்றார்.