ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மிகபெரிய கிரிக்கெட் தொடர் பிக் பாஷ் டி-20 லீக் தொடர். இது இந்தியாவில் நடைபெறும் ஐபிஏல் தொடரை போன்று நடத்தபட்டு வருகிறது. இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த எட்டு வருடங்களாக நடைபெற்று வருகிறது. பிக் பாஷ் லீக்கின் எட்டாவது சீசன் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் எட்டுஅணிகள் ( மெல்போர்ன் ஸ்டார்ஸ், மெல்போர்ன் ரெனெகெட்ஸ், சிட்னி சிக்ஸெர்ஸ், சிட்னி தண்டர்ஸ், பெர்த் , ஹொபார்ட்ஹரிகேன்ஸ், அடிலேய்ட் ஸ்ட்ரைகர் , பிரிஸ்பேன் ) விளையாடினர். இந்த தொடரில் 56 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களை பெறும் அணிகள் அரை இறுதி போட்டிகளில் விளையாட உள்ளது. புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் ஹொபார்ட் ஹரிகேன்ஸ் அணி 14 போட்டிகள் விளையாடி 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் மெல்போர்ன் ரெனேகெட்ஸ் 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் சிட்னி சிக்ஸெர்ஸ் 8 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் அடிப்படையில் மூன்றாம் இடத்தில் உள்ளது. மெல்போர்ன் ஸ்டார்ஸ் 7 போட்டிகளில் வெற்றி பெற்று நான்காவது இடத்தில் உள்ளது.
முதல் அரைஇறுதி போட்டி( ஹொபார்ட் vs மெல்போர்ன் ஸ்டார்ஸ் )
முதல் அரைஇறுதி போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ள ஹொபார்ட் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள ஹொபார்ட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்த தொடரில் முதலில் இருந்தே வெற்றி பெற்று வரும் ஹொபார்ட் அணி வலுவான அணியாக பார்க்கபடுகிறது. இந்த போட்டி ஹொபார்ட் அணியின் மைதானத்தில் நடைபெறுவது அந்த அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் மேக்ஸ்வேல், டுவாயின் ப்ராவோ, ஸ்டோனிஸ், ஆடம் ஜாம்பா, பென் டங்க் ஆகியோர் உள்ளது பெரிய பலமாக பார்க்கபடுகிறது.
ஹொபார்ட் அணியில் கேப்டன் மேத்தீவ் வேட், டி ஆர்சி ஸ்ர்ட், ஜோப்ராஸ் ஆர்சர், ப்ரையிலி ஆகியோர் உள்ளனர்.
இரண்டாவது அரைஇறுதி போட்டி ( மெல்போர்ன் ரெனெகெட்ஸ் vs சிட்னி சிக்ஸெர்ஸ்)
இரண்டாவது அரைஇறுதி போட்டியில் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள மெல்போர்ன் ரெனெகெட்ஸ் அணியும் சிட்னி சிக்ஸெர்ஸ் அணியும் மோதுகின்றனர். இந்த போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பலம் வாய்ந்த மெல்போர்ன் அணியை சிட்னி சிக்ஸெர்ஸ் எதிர்கொள்கிறது. இரு அணிகளும் திறமையான வீரர்கள் உள்ளனர்.
மெல்போர்ன் அணியில் ஆரோன் பின்ச், டேனியல் கிரிஸ்டியன், நபி, கேன் ரிட்சர்சன், டாம் கூப்பர் ஆகியோர் உள்ளனர்.
சிட்னி அணியில் டாம் கரான் , ஹென்றிகஸ், பிலிப், வின்ஸ், சில்க் ஆகியோர் உள்ளனர்.
அரை இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் 17ம் தேதி நடைபெறும் இறுதிபோட்டிக்கு தகுதி பெரும் இதுவரை நான்கு அணியில் சிட்னி சிக்ஸெர்ஸ் அணி மட்டும் ஒரு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. மற்ற அணிகள் இன்னும் ஒரு முறை கூட வெற்றி பெறாத நிலையில் இந்த முறை யார் சாம்பியன்ஸ் பட்டத்தை பெறப்போவது யார் என்பதில் ரசிகர்ளிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.