பி.பி.எல் 2018-19: ஒரே பந்தில் 17 ரன்கள் வாரி வழங்கிய முதல் வீரர் 

ரிலே மெரிடித் மெல்போர்ன் அணிக்கு எதிராக பந்து வீசிய பொழுது 
ரிலே மெரிடித் மெல்போர்ன் அணிக்கு எதிராக பந்து வீசிய பொழுது 

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் வெற்றியை தொடர்ந்து ஒவ்வொரு நாடும் டி20 தொடரை நடத்த ஆரம்பித்தனர். தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் உலக அளவில் பிரபலமாகிவருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இத்தொடரில் யாரும் எதிர்பார்க்காத விதமாக ஒரு சோகமான சாதனை அரங்கேறியது. அதை நிகழ்த்தியவர் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியை சேர்ந்த ரிலே மெரிடித். டாஸ் வென்று முதலில் பீல்டிங் தேர்வு செய்த மெல்போர்ன் அணி ஹோபார்ட் அணியை பேட்டிங் ஆட செய்தது. மேத்தியூ வெட் மற்றும் டார்சி ஷார்ட் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஆஸ்திரேலியா இந்தியா தொடரில் வெட் பங்கேற்கவில்லை. ஆனால் இத்தொடரில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்து வருகிறார். ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி தற்போது தொடரின் புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 87 ரன்கள் எடுத்து ஹோபார்ட் அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்தனர். சிறப்பான துவக்கம் அளித்த வெட் 30 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். இவருக்கு பக்கபலமாக மெக்டெர்மோட் மற்றும் மிலென்கோ 39 மற்றும் 27 ரன்கள் முறையே எடுத்து 20 ஓவர் முடிவில் 183 ரன்கள் அணி எட்ட காரணமாக இருந்தனர்.184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை விரட்ட வந்த மெல்போர்ன் அணிக்கு வரப்பிரசாதமாக அமைந்தது இரண்டாம் இன்னிங்சின் முதல் ஓவர்.

முதல் ஓவரை வீசிய ரிலே, முதல் மூன்று பந்துகளில் வெறும் ஒரு ரன் மட்டுமே கொடுத்தார். ஆனால் அடுத்து வந்தது பேரிடி. 4வது பந்தை வீசிய அவர் நோபால் வீசியதால் 1 ரன் வழங்கப்பட்டது. மீண்டும் ப்ரீ ஹிட் முறையில் வீசப்பட்ட 4வது பந்தை அகலமாக வீசியதால் வைட் பந்து பௌண்டரிக்கு சென்றது. இதனால் மெல்போர்ன் அணிக்கு 5 ரன்கள் மேலும் வழங்கப்பட்டது. மீண்டும் 4வது பந்தை வீச வந்த ரிலே, அடுத்தடுத்து ஒன்றல்ல இரண்டு நோபால் வீசி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனால் மைதானத்தில் இருந்த ஹோபார்ட் ரசிகர்கள் ரிலேவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். நோபால் வீசியது மட்டுமில்லாமல் சுலபமான பந்தை வீசிய அவர், பௌண்டரி வழங்கினார்.

பிறகு ஹோபார்ட் அணியின் கேப்டன் வெட், ரிலேவிற்கு நீண்ட நேரம் எதோ அறிவுரை வழங்க ஒருவழியாக 4வது பந்தை சரியாக வீசினார். இவரின் இந்த மோசமான தொடக்கத்தால் மெல்போர்ன் அணி முதல் ஓவரிலேயே 23 ரன்கள் எடுத்தது. இருப்பினும் இந்த வாய்ப்பை மெல்போர்ன் அணி பயன்படுத்திக்கொள்ளவில்லை. மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசிய ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் டார்சி ஷார்ட் எதிரணியின் ரன் வேட்டையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருவரும் தலா இரண்டு விக்கெட்கள் எடுக்க, ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி மெல்போர்ன் ரெனேகேட்ஸ் அணியை 16 ரன்கள் வித்தியாத்தில் வென்றது. ஹோபார்ட் அணி வென்றதால் ரிலேவிற்கு அவரது மோசமான சாதனை ஓரளவுக்கு மனதிற்கு ஆறுதலாய் இருக்கும்.

App download animated image Get the free App now