இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான 2018/19க்கான வருடாந்திர ஒப்பந்தத்தை வெளியிட்டுள்ளது பி.சி.சி.ஐ. அக்டோபர் 2018 ல் தொடங்கி செப்டம்பர் 2019 வரை நீடிக்கும் இந்த ஒப்பந்தத்தில் மொத்தம் 25 கிரிக்கெட் வீரர்களும் 20 கிரிக்கெட் வீராங்கனைகளும் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு தரத்தின் அடிப்படையில் மாறுபட்ட தொகை கிடைக்கும்.
இந்த ஒப்பந்தத்தில் முதன் முறையாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிசப் பண்ட் இடம் பெற்றுள்ளார். அதுவும் நேரடியாக A தரத்தில் இடம் பெற்றுள்ளார். கடந்த வருட ஒப்பந்தத்தில் இடம் பெற தவறிய ரிசப் பண்ட் இம்முறை இரண்டாவது உயரிய தரமான A தரத்தில் இடம் பெற்றுள்ளார். இதன் மூலம் இவருக்கு ஆண்டுக்கு 5 கோடி இந்திய தொகை ஊதியமாக கிடைக்கும்.
ரிசப் பண்ட் மட்டுமின்றி மேலும் 10 வீரர்கள் A தரத்தில் இடம் பெற்றுள்ளனர். முதல் தரமான A+ ல் மூன்று வீரர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். கேப்டன் விராத் கோலி, தொடக்க வீரர் ரோகித் சர்மா மற்றும் பந்து வீச்சாளர் பூம்ரா இந்த தரத்தில் உள்ளனர். அவர்களுக்கு ஆண்டுக்கு 7 கோடி இந்திய தொகை ஊதியமாக கிடைக்கும்.
கே.எல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியாவை உள்ளடக்கிய குழு B தரத்தில் உள்ளனர். அவர்களுக்கு ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் ஊதியமாக கிடைக்கும். தரம் C யில் ஏழு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு ரூபாய் ஒரு கோடி ஆண்டு வருமானமாக கிடைக்கும்.
பெண்களுக்கான கிரிக்கெட் அணியில் ஒரு நாள் போட்டிகளின் கேப்டன் மித்தலி ராஜ், டி 20 போட்டிகளின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கர், தொடக்க ஆட்டகாரர் ஸ்மிரிதி மந்தனா, சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவ் முதல் தரமான A தரத்தில் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 50 லட்சம் ஊதியமாக கிடைக்கும்.
அதற்கு அடுத்தபடியான B தரத்தில் கோசாமி மற்றும் ஜெமிமா இடம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு ஆண்டுக்கு 30 லட்ச ரூபாய் கிடைக்கும். மீதமுள்ள 11 பேர் தரம் C யில் இடம் பெற்றுள்ளனர், அவர்களுக்கு ஆண்டுக்கு 10 லட்ச ரூபாய் கிடைக்கும்
பிசிசிஐ 2018/19 ஆம் ஆண்டுக்கான மத்திய ஒப்பந்த விபரம்
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி
தரம் A+ (7 கோடி) : விராட் கோலி, ஜாஸ்ப்ரித் பூம்ரா, ரோகித் சர்மா
தரம் A (5 கோடி) : ரவிசந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேசுவர் குமார், மகேந்திரசிங் தோனி, அஜின்கியா ரகானே, செட்டிஸ்வர் புஜாரா, சிகார் தவான், முகமது சமி, இசாந் சர்மா, குல்தீப் யாதவ், ரிசப் பண்ட்.
தரம் C(3 கோடி) : கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், அம்பாதி ராயுடு, மணிஷ் பாண்டே, ஹனுமா விஹாரி, கலீல் அஹமது, ரிதீமான் சாகா.
பெண்களுக்கான ஒப்பந்தம்
தரம் A(50 லட்சம்) : மித்தலி ராஜ், ஹர்மந்ப்ரீத் கௌர், ஸ்மிருதி மந்தனா, பூனம் யாதவ்
தரம் B (30 லட்சம்) : ஏக்தா பிஸ்த், கோசாமி, சீகா பாண்டே, தீப்தி சர்மா, ஜெமிமா
தரம் C (10 லட்சம்) : ராதா யாதவ், ஹேமலதா, அனுஜா படேல் வேதா கிருஸ்ண மூர்த்தி, மன்ஷி ஜோஷி, பூனம் ரட், மோனா மேஷ்ரம், அருந்ததி ரெட்டி, ராஜேஸ் வரி, தான்யா பாட்யா, பூஜா