ரோகித்தை டி20 கேப்டனாக களமிறக்குகிறதா பிசிசிஐ?

கோலி மற்றும் ரோஹித்
கோலி மற்றும் ரோஹித்

டி20 போட்டியை பொறுத்தவரையில் கோலியை காட்டிலும் கேப்டனாக மிகச் சிறப்பாக செயல்படுகிறார் ரோகித்சர்மா என்பது பல கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்தாகும்.

ஐபிஎல் போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மூன்று முறை ஐபிஎல் கோப்பையை தன் வசப்படுத்தியிருக்கிறார் ரோஹித் .ஆனால் விராட்கோலியோ இன்னும் வெல்லவில்லை..

இந்திய அணி பங்கேற்க்கும் பெரும்பாலான டி20 தொடர்களில் விராட்கோலிக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. அதனால் இந்திய அணி பங்கேற்க்கும் பெரும்பாலான டி20 தொடர்களில் ரோகித் சர்மா அணியை வழிநடத்திவருகிறார்.அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆசியக்கோப்பை தொடரில் விராட்கோலி இல்லாத நிலையிலும் ரோகித் தலைமையில் தோல்வியே சந்திக்காமல் ஆசியக்கோப்பையை வென்று வீருநடை போட்டது இந்திய அணி.

rohit sharma
rohit sharma

டி20 போட்டியில் நடப்பு உலக சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியை 3:0 என ஒயிட்வாஷ் செய்து பிரம்மிக்க வைத்தது இந்திய அணி! இதுபோன்ற காரணங்களால் இனிவரும் காலங்களில் பிசிசிஐ டி20 தொடரில் விராட்கோலிக்கு பதிலாக ரோகித்சர்மாவை நிரந்தர கேப்டனாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெஸ்ட்இண்டீஸ்க்கு எதிரான தொடர் முடிவடைந்த நிலையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்க்கொள்ள உள்ளது. அதில் மூன்று டி20, மூன்று ஒருநாள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

வருகிற நவ.21 டி20 தொடர் தொடங்க உள்ளது.

டி20 கேப்டனாக ரோகித்சர்மா பல மைல்கல்லை எட்டியுள்ளார்.

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் அடித்த சதத்தின் மூலம் டி20 போட்டியில் அதிக சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் நான்கு சதம் அடித்து முதலிடத்தில் உள்ளார்.

மேலும் டி20 போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 2207ரன்கள் குவித்து மார்டின் கப்தில்லுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். மார்டின் கப்திலை முந்த இன்னும் ரோகித்சர்மாவுக்கு 65ரன்களே தேவை.

மேலும் 2018 காலண்டர் ஆண்டில் டி20 போட்டியில் 560ரன்கள் குவித்து இந்த ஆண்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார்.

இந்த பட்டியலில் ஷிகர்தவண் 572 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ரோகித் சர்மா மேலும் 82 ரன்கள் குவித்தால் ஒரு காலண்டர் ஆண்டில் டி20 தொடரில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற விராட்கோலியின் சாதனையை முறியடித்து விடுவார்.

2016 ம் ஆண்டு விராட்கோலி டி20 போட்டிகளில் 641ரன்கள் குவித்ததே ஓரு ஆண்டில் ஓரு வீரர் குவித்த அதிகபட்ச ரன்களாக இருக்கிறது.

தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் தோனி சேர்க்கப்படாதது இந்திய இரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகள் நவம்பா் 21ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் போட்டிகளின் அட்டவணை விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,

டி20 தொடா்

நவம்பா் 21ம் தேதி பிரிஸ்பா்ன் நகரில் பகல் 2.30 மணிக்கு முதல் போட்டியும்,

நவம்பா் 23ம் தேதி மெல்பா்ன் நகரில் பகல் 1.30 மணிக்கு இரண்டாவது போட்டியும்,

நவம்பா் 25ம் தேதி சிட்னி நகரில் பகல் 1.30 மணிக்கு மூன்றாவது போட்டியும் நடைபெற உள்ளன.

டெஸ்ட் தொடா்:

டிசம்பா் 6-10ம் தேதி வரை நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்ட், ஓவல் மைதானத்தில் காலை 6 மணிக்கு தொடங்குகிறது.

டிசம்பா் 14-18 வரை நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பொ்த் மைதானத்தில் காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

டிசம்பா் 26-30 வரை நடைபெறும் 3வது டெஸ்ட் போட்டி மெல்போா்ன் நகரில் காலை 5 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

ஜனவாி 3-7 வரை நடைபெறும் கடைசி மற்றும் 4வது டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் காலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

ஒருநாள் போட்டி:

ஜனவரி 12ம் தேதி நடைபெறும் முதல் ஒருநாள் போட்டி சிட்னி நகாில் காலை 8.50 மணிக்கு தொடங்குகிறது.

ஜனவரி 15ம் தேதி நடைபெறும் 2வது போட்டி ஓவல் மைதானத்தில் காலை 9.20 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.

ஜனவரி 18ம் தேதி நடைபெறும் 3வது மற்றும் மெல்போா்ன் நகரில் காலை 8.50 மணிக்கு தொடங்குகிறது.

டி20 அணி:

விராட் கோலி (கேப்டன்), ரோகித் ஷா்மா, ஷிகா் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயஸ் ஐயா், மணிஷ் பாண்டே, தினேஷ் காா்த்திக், ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ், சாஹல், வாஷிங்டன் சுந்தா், குர்ணல் பாண்டியா, புவனேஷ்வா் குமாா், பும்ரா, உமேஷ் யாதவ், கலீல் அகமது.

டெஸ்ட் அணி:

விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், ரோகித் ஷா்மா, லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா, சடேஷ்வா் புஜாரா, அஜங்கியா ரகானே, ஹனுமன் விஹாரி, ரிஷப் பண்ட், பாா்த்திவ் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மொகமத் ஷமி, இஷாந்த் ஷா்மா, உமேஷ் யாதவ், பும்ரா, புவனேஷ்வா் குமாா்.

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now