நடந்தது என்ன?
இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் தனியார் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த போது அம்பாத்தி ராயுடுவின் நக்கலான டவிட்டிற்கு பதிலளித்துள்ளனர்.
உங்களுக்கு தெரியுமா?
இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வுக்குழு ஏப்ரல் 15 அன்று 2019 உலகக் கோப்பையில் பங்கேற்கவுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது. அம்பாத்தி ராயுடு இந்த 15 பேர் கொண்ட அணியில் இடம்பெறவில்லை. ஏனெனில் சமீபத்தில் ராயுடு விளையாடிய போட்டிகளில் அவரிடமிருந்து சிறப்பான ஆட்டம் வெளிப்படவில்லை. விஜய் சங்கர் தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு நல்ல ஆட்டத்திறனை வெளிபடுத்தியதால் அவருக்கு இந்திய உலகக் கோப்பை அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என மூன்று விதங்களில் அசத்துவதால் விஜய் சங்கரை உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்துள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் குறிப்பிட்டுள்ளது.
கதைக்கரு
இந்திய தேர்வுக்குழு தலைவரின் இந்த கூற்றிற்கு அம்பாத்தி ராயுடு டிவிட்டரில் நக்கலாக பதிலளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரிய மூத்த அதிகாரி ஏப்ரல் 17 அன்று நடந்த தனியார் பத்திரிகை சந்திப்பில் ராயுடுவின் இந்த டிவிட் பற்றி கேள்வி எழுப்பியுள்ளார்.
"ராயுடுவின் டிவிட் பற்றி நாங்கள் அறிந்தோம். தற்போது அவரது மிகுந்த கோபத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். கண்டிப்பாக அவருக்கு ஒரு பெரிய ஏமாற்றமாக இருக்கும். இருப்பினும் அவரது உணர்வை டிவிட்டரில் இவ்வாறு வெளிபடுத்தியது வருத்தத்தை அளிக்கிறது"
அவரது உணர்வை புரிந்து கொண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் கருனையாக சில வார்த்தைகளை ராயுடுவிற்கு தெரிவித்துள்ளது.
"அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த பெருத்த ஏமாற்றம் தணிய சிறிய காலங்கள் ஆகும். அதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். அம்பாத்தி ராயுடு இந்திய உலகக் கோப்பை அணியின் முக்கிய காத்திருப்பு வீரராக உள்ளார். 15 பேர் கொண்ட உலகக் கோப்பை அணியில் எவரேனுக்கும் காயம் காரணமாக விலகினால் கண்டிப்பாக அம்பாத்தி ராயுடு இடம்பெறுவார் என்பதில் சந்தேகமில்லை."
இந்திய கிரிக்கெட் வாரிய மூத்த அதிகாரியின் இந்த கூற்றினால் ராயுடுவின் நக்கலான டிவிட்டை பிசிசிஐ அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை என தெள்ளத் தெளிவாக நமக்கு தெரிகிறது. அத்துடன் ஹைதராபாத் பேட்ஸ்மேன் ராயுடுவிற்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் எந்த சலசலப்பும் இல்லை என்பதும் நமக்கு தெரிகிறது. இது அம்பாத்தி ராயுடுவிற்கு ஒரு நல்ல செய்தியாகும்.
அடுத்தது என்ன?
அம்பாத்தி ராயுடு உலகக் கோப்பை இந்திய அணியின் காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட இந்திய உலகக் கோப்பை அணியில் யாருக்காவது காயம் ஏற்பட்டால் ராயுடு மாற்று வீரராக இடம் பெறுவார். ராயுடு தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை விளையாடிய போட்டிகளில் சிறந்த பேட்டிங்கை வெளிபடுத்தவில்லை. கூடிய விரைவில் அவரது இயல்பான அதிரடி ஆட்டம் வெளிபடும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.