நடந்தது என்ன ?
2019 ஐபிஎல் தொடரின் தொடக்க விழா ரத்து செய்யப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக தலைவர் இன்று அறிவித்துள்ளார். இந்த ஐபிஎல் தொடக்க விழாவிற்காக ஒதுக்கப்பட்ட பணத்தை புல்வாமாவில் நடந்த கோர விபத்தில் பலியான 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவியாக வழங்கப்படும் என கூறியுள்ளார்.
கதைப் பிண்ணனி
பிப்ரவரி 14ஆம் நாள் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் விடுமுறை முடிந்து பணிக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். பேருந்து காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா என்ற கிராமத்தில் சென்று கொண்டிருந்த போது தற்கொலை படையினர் ஒரு காரில் 350 கிலோ வெடிபொருட்களுடன் வந்து இராணுவ வீரர்கள் வந்து கொண்டிருந்த பேருந்துக்கு அருகில் கொண்டு வந்து வெடிக்கச் செய்தனர். இதில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் சில இராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். இந்த கோர விபத்தினால் நாடே மிகவும் வருந்தியது. இந்த கோர நிகழ்வு கிரிக்கெட் விளையாட்டையும் அதிகம் பாதித்தது.
கதைக் கரு
இந்த கொடுர தாக்குதலினால் பாதிக்கப்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில் , ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவதற்கு முன் நடக்கும் பொழுது போக்கு தொட்க்க விழாவினை இந்திய கிரிக்கெட் வாரியம் ரத்து செய்வதாக அறவித்துள்ளது. இந்த தொடக்க விழாவில் இந்திய நடிகர் நடிகைகளின் ஆடல் நிகழ்வு நடைபெறும். நிறைய பேர் புல்வாமா தாக்குதலில் பாதிக்கப்பட்ட வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அளித்து வந்த நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியமும் தனது அறிவிப்பை தெரிவித்துள்ளது.
" இந்த வருட ஐபிஎல் தொடரில் தொடக்க விழா ரத்து செய்யப்படுகிறது.இந்த விழாவிற்கு ஒதுக்கப்பட்ட பணத்தை தியாக வீரர்களின் குடும்பங்களுக்கு அளிக்கப்படும் " என இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக குழு தலைவர் வினோத் ராய் கூறியுள்ளார்.
தொடக்க விழாவிற்காக ஒதுக்கப்பட்ட நிதி அமைப்பு மற்றும் அமைப்பு சார தொண்டு நிறுவனங்கள் மூலம் புல்வாமா விபத்தில் பலியான வீரர்களின் குடும்பங்களுக்கு சென்றடைய இந்திய கிரிக்கெட் வாரியம் வழிவகை செய்வதாக வினோத் ராய் தெரிவித்துள்ளார். " மீண்டும் திரும்ப பெற முடியாத தங்களது இன்னுயிரை புல்வாமா தாக்குதலில் இழந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிறைய தொண்டு நிறுவனங்கள் உதவி செய்து வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியமும் தற்போது உதவ வந்துள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் தனியார் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
அடுத்தது என்ன?
ஐபிஎல் நிர்வாகம் சமீபத்தில் முதல் இரண்டு வாரங்களுக்கான ஐபிஎல் அட்டவணையை வெளியிட்டது. அதன்படி 2019 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கடந்த தொடரின் சேம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோத உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் ஐபிஎல் தொடர் நடக்கும் போது வருவதால் முதல் இரண்டு வாரங்களுக்கு பிறகு நடக்கும் ஐபிஎல் போட்டிகளின் இடங்கள் மாற்றங்கள் வர வாய்ப்புள்ளது.