ஆகஸ்ட் 16 அன்று நடைபெற உள்ள இந்திய பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணலில் பங்கேற்கவுள்ள 6 பெயர்களை கொண்ட இறுதிப் பட்டியலை வெளியிட்டது இந்திய கிரிக்கெட் நிர்வாகம். நமக்கு கிடைத்த பல தகவல்களின்படி டாம் மூடி, ராபின் சிங், லால்சந்த் ராஜ்பூட், பைல் சிம்மன்ஸ், மைக் ஹேசன் மற்றும் தற்போதைய இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் அந்த 6 பெயர்களாக வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் டாம் மூடி இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கடும் போட்டி போடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பதவிக்காக டாம் மூடி 3வது முறையாக பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. டாம் மூடி இவ்வருடத்தின் பாதி வரை ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக பதவி வகித்தார். 2019 உலகக்கோப்பை தொடர் முடிந்த பின்னர் அந்த அணி இங்கிலாந்திற்காக உலகக்கோப்பை வென்ற பயிற்சியாளர்கள் "டிரெவர் பெய்லீஸ்"-ஐ ஒப்பந்தம் செய்தது.
ராபின் சிங் இந்திய அணியின் மறைமுக ஃபீல்டிங் பயிற்சியாளராக இருந்து வருகிறார். இவர் வெவ்வேறு டி20 அணிகளின் பயிற்சியாளராக இருந்து வந்தார். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக உள்ளார்.
லால்சந்த் ராஜ்பூட் இந்தியா, ஆப்கானிஸ்தான், ஜீம்பாப்வே ஆகிய அணிகளின் பயிற்சியாளராக இருந்துள்ளார். இவரது தலைமையில் ஆப்கானிஸ்தான் அணி ஒரு முழு நேர ஐசிசி உறுப்பினராக மாற்றமடைந்தது. இவர் கடந்த காலங்களில் மும்பை இந்தியன்ஸ் அணியில் பேட்டிங் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
மைக் ஹேசன் நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக 2012 முதல் 2018 வரை இருந்துள்ளார். இவரது தலைமையில் நியூசிலாந்து 2015 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. 2019 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாகவே நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய இவர் பின்னர் 2019 ஐபிஎல் தொடரில் கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். மைக் ஹசன் சமீபத்தில் இப்பதவியிலிருந்தும் விலகியுள்ளார். 44வயதான இவர் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச தலைமை பயிற்சியாளர் பதவிக்கும் போட்டி போட்டு வருகிறார்.
பைல் சிம்மன்ஸ் முன்னாள் மேற்கிந்தியத் தீவுகளின் வீரர். இவர் மேற்கிந்தியத் தீவுகள், அயர்லாந்து, ஜீம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளின் தலைமை பயிற்சியாளராக பதவி வகித்துள்ளார். இவரது தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் 2016 டி20 உலகக்கோப்பை தொடரை கைப்பற்றியது.
கடைசியாக இந்திய அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளர்கள் ரவி சாஸ்திரியும் அடுத்த இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு நேரடியாக போட்டி போடுகிறார். தலைமை பயிற்சியாளர் பதவியை தக்கவைத்துக் கொள்ள இவருக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் ரவி சாஸ்திரி-யை தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்க குறைவான வாய்ப்புகளே உள்ளது.
இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் ஆகஸ்ட் 16 அன்று நடைபெற உள்ளது. கபில் தேவ் தலைமையிலான குழு இந்த 6 பெயர்களையும் ஒரு தரவரிசையாக தயார் செய்து இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு அனுப்புவார்கள். கபில் தேவுடன் இந்திய பயிற்சியாளரை தேர்வு செய்ய அன்சுமன் கேக்வாட் மற்றும் சாந்தா ரங்கசாமி ஆகியோர் உள்ளனர்.
மற்ற பயிற்சியாளர்கள் பதவிக்கான நேர்காணலை பிசிசிஐ எப்பொழுதும் நடத்தும் என தெரிவிக்கவில்லை. எம்.எஸ்.கே தலைமையிலான இந்திய தேர்வுக்குழு இந்திய அணியின் மற்ற பயிற்சியாளர்கள் பதவிக்கான நேர்காணலை நடத்தும்.