மே 30 அன்று தொடங்க உள்ள 2019 உலகக் கோப்பைக்கு முன் இந்திய தேசிய அணியின் ஆல்-ரவுண்டர் கேதார் ஜாதவ் மீண்டும் தனது ஃபிட்னஸை மெருகேற்றி வருகிறார். இதற்கிடையில் இந்திய கிரிக்கெட் அணி மே 23 அன்று இங்கிலாந்து செல்ல உள்ளது. தற்போது இந்த பயணத்தில் சிறு பிரச்சினை எழுந்துள்ளது. உலகக் கோப்பைக்கு கேதார் ஜாதவ் பங்கேற்பது பற்றி இறுதி நிமிடங்களில் தான் முடிவு செய்யப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும் உலகக் கோப்பைக்கு அவரது ஃபிட்னஸ் சரியாக இருந்தால் மட்டுமே அவரை இங்கிலாந்து அனுப்ப முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணி மோதிய போட்டியில் கேதார் ஜாதவிற்கு காயம் ஏற்பட்டது. பஞ்சாப் அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது 14வது ஓவரில் ஓவர் த்ரோ-வை கேதார் ஜாதவ் பவுண்டரி லைனிலிருந்து தடுக்க முற்பட்ட போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் அவர் உடனே களத்திலிருந்து வெளியேறினார். அதன்பின் ஃபில்டிங் செய்ய கேதார் ஜாதவ் வரவில்லை. இந்த போட்டியில் கிங்ஸ் XI பஞ்சாப் அணி 2 ஓவர்கள் மீதமிருக்கும் நிலையிலே இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்தப் போட்டிக்கு பிறகு கேதார் ஜாதவ் ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 1 ரன்னில் கோப்பையை தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதுவரை கிடைத்த தகவலின்படி கேதார் ஜாதவிற்கு அதிகப்படியான காயம் ஏதும் இல்லை எனவும், இவர் உலகக் கோப்பையில் பங்கேற்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்பட்டது. பிசிசிஐ, ஆல்-ரவுண்டர் கேதார் ஜாதவின் ஃபிட்னஸ் மீது அதிக அக்கறை காட்டி வருகிறது. "கிரிக்நெக்ஸ்" என்ற இனைய தளத்திற்கு பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்தவதாவது: இந்திய அணியின் உடற்தகுதி மருத்துவர் கேதார் ஜாதவின் ஃபிட்னஸை தினமும் கவணித்து கொண்டு வருகிறார். இவரது ஃபிட்னஸ் மீது இந்திய கிரிக்கெட் வாரியமும் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
" இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வுக்குழுவினர் கேதார் ஜாதவின் உடற்தகுதி பற்றி தினமும் கேட்டறிந்து வருகின்றனர். இந்திய உடற்தகுதி மருத்துவர் ஃபாராட் கேதார் ஜாதவின் உடற் தகுதியை மிகவும் உண்ணிப்பாக கவணித்து வருகிறார். கேதார் ஜாதவ் ஃபிட் ஆகி விட்டால் உலகக் கோப்பையில் பங்கேற்பார். அவர் உலகக் கோப்பையில் பங்கேற்பது பற்றி அடுத்த வாரத்தில் முடிவு செய்யப்படும். இந்திய அணி மே 22 அன்று இங்கிலாந்து செல்ல உள்ளது. கேதார் ஜாதவ் சற்று தாமதமாக அணியில் இனைவார்."
கேதார் ஜாதவ் ஃபிட்னஸை மெருகேற்ற தவறும் பட்சத்தில் இந்திய தேர்வுக்குழுவினர் மாற்று வீரர்களை உடனே அறிவிக்கும். ஐசிசி விதிப்படி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி காயம் ஏற்பட்ட வீரர்களுக்கு மாற்று வீரர்களை தங்களது அணியில் மாற்றிக் கொள்ளலாம். அம்பாத்தி ராயுடு மற்றும் அக்ஸர் படேல் இவருக்கு மாற்று வீரராக வர வாய்ப்பு உள்ளது.