ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான பென் கட்டிங் பிக் பேஸ் கிரிக்கெட் தொடரில் பந்தை பிடிக்கும் போது பந்து முகத்தில் பட்டு காயமானார். பின்பு அவர் மீண்டும் அணிக்காக விளையாடினார். இது சமூக வளைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.
ஆஸ்திரேலியா-வில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான பிக் பேஸ் தொடர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான பென் கட்டிங் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாடி வருகிறார்.
இன்று நடைபெற்ற போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் அணி மெல்போர்ன் ரினிங்டேஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர் முடிவில் 144 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. பிரிஸ்பேன் அணியில் பிரெண்டன் மெக்கல்லம் அதிகபட்சமாக 47 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். கேப்டன் கிரிஷ் லின் 14 ரன்களும், பென் கட்டிங் 20 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். மெல்போர்ன் அணி சார்பில் உஸ்மான் கான் 3 விக்கெட்டுகளும், போய்ஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பின்னர் 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்கில் களமிறங்கியது மெல்போர்ன் அணி .
அந்த அணி முதல் ஓவரில் பாட்டின்சன் வீசிய நான்காவது பந்தை எதிர்கொண்ட மெல்போர்ன் அணி வீரர் மார்கஸ் ஹாரிஸ் பந்தை அடித்தார், அந்த பந்து பென் கட்டிங் இருந்த திசையை நோக்கி சென்றது. பென் கட்டிங் அதை கேட்ச் பிடிக்கும் போது பந்து அவர் கையை பதம்பார்த்து, மூக்கிலும் தாக்கியது. இதனால் காயமான கட்டிங் பந்தை பிடித்து கீழே எரிந்து விட்டார். இதைக் இண்ட ரசிகர்கள் அவர் பந்தை பிடித்ததை கொண்டாடுவதாக நினைத்தனர். ஆனால் அவர் எழுந்த பின்பு தான் தெரிந்தது. பந்து தாக்கியதில் அவர் மூக்கில் காயமானது என்பது. பந்து அவர் மூக்கில் தாக்கியதால் அவர் முகம் முழுவதும் இரத்தமானது. இதை கவனித்த மூன்றாவது நடுவர் மார்கஸ் ஹாரிஸ் நாட் அவுட்.என அறிவித்தார். பின்பு போட்டியை விட்டு வெளியேறினார் பென் கட்டிங்.
மெல்போர்ன் அணியின் துவக்க வீரர்கள் ஹார்வி 10 ரன்களிலும், ஹாரிஸ் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்பு களமிறங்கிய விக்கெட் கீப்பரான சாம் ஹார்ப்பர் 30 பந்துகளில் 57 ரன்களும், கேப்டன் டாம் கூப்பர் 28 பந்துகளில் 36 ரன்களும் குவித்து அணியை 15.4 ஓவர்களில் 145 ரன்கள் எடுத்து வெற்றியை தேடித் தந்தனர். இந்த போட்டியில் பென் கட்டிங் தனது முகத்தில் ஏற்பட்ட காயத்தில் தையல் போட்டு மீண்டும் போட்டியில் களமிறங்கினார். பிரிஸ்பேன் அணி சார்பில் முசீப் மற்றும் டாக்கெட் தல ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். காயத்துடன் பந்து வீசிய பென் கட்டிங் 2 ஓவர்களுக்கு விக்கெட் எதுவும் எடுக்காமல் 21 ரன்களை விட்டுக்கொடுத்தார். இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய சேம் ஹார்ப்பர் ஆட்ட நாயகன் விருதினைப் பெற்றார். இதன் மூலம் மெல்போர்ன் அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.
தனது ஆல்ரவுண்டர் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி வரும் பென் கட்டிங்-க்கு இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் கிடைக்காதது வருத்தமளிக்கிறது.