நியூசிலாந்திற்கு எதிரான 2019 உலகக்கோப்பை தொடரில் ஆட்டத்தின் இறுதி வரை போட்டியை எடுத்துச் சென்று தோல்வியை தழுவிய மேற்கிந்தியத் தீவுகளின் கரோலஸ் பிராத்வெய்ட் மீண்டுமொருமுறை 2016 உலகக்கோப்பை தொடரின் பென் ஸ்டோக்ஸின் இறுதி ஓவரை நினைவு கூர்ந்துள்ளார். 2016 உலக டி20 கோப்பையின் இறுதிப் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் வீசிய இறுதி ஓவரில் 4 தொடர் சிக்ஸர்களை விளாசி கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார். இதே ஆட்டத்தை 2019 உலகக்கோப்பையில் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் வெளிபடுத்தினார். ஆனால் இந்தப் போட்டியில் அவருக்கு எந்த பேட்ஸ்மேனும் கை கொடுக்கமால் தோல்வியை தழுவினார்.
292 என்ற இலக்கை சேஸிங் செய்து விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் 164 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. இருப்பினும் கரோலஸ் பிராத்வெய்ட் தனது அதிரடி ஹீட்டிங் மூலம் ஆட்டத்தை கையில் எடுத்து கடைசி 3 ஓவர்களில் 33 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்கிற்கு கொண்டு வந்தார். 48வது ஓவரில் மேட் ஹன்றி வீசிய ஓவரில் 3 மிகப்பெரிய சிக்ஸர்களை கரோலஸ் பிராத்வெய்ட் விளாசினார். இதன் மூலம் 12 பந்துகளுக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது.
பிராத்வெய்ட் தனது அதிரடி சதத்தினை குவித்தார், அப்போது 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்கில் மேற்கிந்தியத் தீவுகள் இருந்தது. எனவே இவர் சிகஸர் விளாச முடிவெடுத்து சிகஸர் விளாசியபோது டிரென்ட் போல்ட் பவுண்டரி லைனிற்கு நேராக வந்த பந்தை கேட்ச் பிடித்து அசத்தினார். இதனால் மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றி வாய்ப்பு பறிபோனதை கண்டு கரோலஸ் பிராத்வெய்ட பெரும் ஏமாற்றத்துடன் தலை குனிந்து மண்டியிட்டார்.
அவரது அதிரடியான இன்னிங்ஸ்ற்கு நியூசிலாந்து ஃபீல்டர்கள் அவருக்கு ஆறுதல் கூறி தேற்றினர். பிராத்வெய்டின் அதிரிடியான 101 ரன்களுக்கு பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்கள் அவரை மிகுந்த உற்சாகப்படுத்தினர்.
இதில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸும் மேற்கிந்தியதீவுகளின் ஆல்-ரவுண்டரை புகழ்ந்து தள்ளினார். இங்கிலாந்து நட்சத்திர வீரரான இவர் இலங்கைக்கு எதிரான கடந்த உலகக்கோப்பை போட்டியில் தனி ஒருவராக நின்று போராடி வெற்றி வாய்ப்பை அடையும் நோக்கில் விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால் இவரது முயற்சி வீணானது. இவர் தற்போது தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் கரோலஸ் பிராத்வெய்டின் நியூசிலாந்திற்கு எதிரான சிறப்பான இன்னிங்ஸ் 2016 டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியை நினைவு கூர்ந்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.
"ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியில் இந்தியா த்ரில்லிங் வெற்றி பெற்றதற்காக முதலில் விராட் கோலிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், அடுத்ததாக @கரோலஸ்பிராத்வெய்ட் அவரை நான் குறிப்பிட்டு விடுகிறேன். இவரது இன்னிங்ஸிற்கு நான் ஆச்சரியப்பட காரணம் என்ன??? அதற்கு காரணம் கொல்கத்தாவில் நடந்த 2016ல் டி20 உலகக்கோப்பையில் விளையாடிய அதே அற்புதமான இன்னிங்ஸை மீண்டுமொருமுறை நியூசிலாந்திற்கு எதிராக உலகக்கோப்பையில் வெளிபடுத்தியுள்ளார். இவரது கட்டுப்பாட்டில் இருந்த இந்த இன்னிங்ஸ் எவ்வாறு நழுவியது என்பது எனக்கு தெரியவில்லை.
நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் போரடி தோல்வியடைந்ததின் மூலம் கிட்டத்தட்ட அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்ததுள்ளது. நியூசிலாந்து புள்ளிபட்டியலில் 11 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.