தற்போதைய கிரிக்கெட் உலகின் தலைசிறந்த மூன்று பினிஷர்கள்

Australia v India - ODI: Game 2
Australia v India - ODI: Game 2

கிரிக்கெட் போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்யும் ஒரு அணி வெற்றி பெறுவது, அந்த அணியிலுள்ள பந்துவீச்சாளர்களை பொருத்து அமையும். அதுபோல, இரண்டாவதாக பேட்டிங் செய்யும் ஒரு அணி வெற்றி பெறுவது, நிச்சயம் பேட்ஸ்மேன்களை பொருத்தே அமையும்.அதுவும் குறிப்பாக, அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் அவுட்டாக்கிய பின்னர் அணியின் பின்கள பேட்ஸ்மேன்கள் இறுதிகட்ட நெருக்கடி நேரங்களில் எதிரணியின் பந்துவீச்சை எளிதாக கையாண்டு, திறம்பட ரன்களை குவிப்பார்கள் அவ்வாறு,அணிக்கும் ரசிகர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்துள்ளனர். பிற்காலங்களில் அவர்களே ஆட்டத்தின் வெற்றியை தீர்மானிக்கும் சிறந்த பினிஷர்களாக உருவெடுத்தனர். இது, விவியன் ரிச்சர்ட்ஸ் காலத்தின் முதலே தொடங்கி மைக்கேல் பீவன், அப்துல் ரசாக், அரவிந்த் டி சில்வா, மைக்கேல் ஹசி, டிவிலியர்ஸ்,மகேந்திர சிங் தோனி வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அவ்வாறு இன்றளவும் சிறந்த பினிஷர்களாக உள்ள 3 பேட்ஸ்மேன்களை பற்றி நான் இங்கு குறிப்பிட்டுள்ளேன்.

#3 டேவிட் மில்லர்:

Australia v South Africa - T20
Australia v South Africa - T20

கடந்த 9 வருடங்களாக தென்னாப்பிரிக்கா அணிக்காக களமிறங்கி வருபவர், டேவிட் மில்லர்.சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான முதல் தொடரில் தனது திறமையை நிறைவாக செய்தமையால், தென்னாப்பிரிக்க அணியில் அடுத்தடுத்த தொடர்களில் இடம்பெற்றார். குறிப்பாக, அணி விக்கெட்களை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் போது தனது திறமையை வெளிக்காட்டி, அணியை வெற்றி பெறவும் செய்துள்ளார். கடந்த உலக கோப்பை தொடரிலும் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தென்னாபிரிக்க அணி தவித்துக் கொண்டிருந்த போது ஒரு சதத்தின் மூலம் ஆட்டத்தை நிறைவாக முடித்தார்..கடந்த ஆண்டு வரை, டிவில்லியர்சும் இவரும் இணைந்து தென்னாப்பிரிக்க அணிக்காக படைத்த சாதனைகள் ஏராளம். குறிப்பாக, இறுதிகட்ட நேரங்களில் அதிரடி காட்டி தங்கள் அணியை வெற்றி பெறச் செய்துள்ளனர். ஆனால், இம்முறை டிவிலியர்ஸ் ஓய்வு பெற்றுவிட்டதால் அணியில் இவர் மீது அதிகப்படியான எதிர்பார்ப்புகள் உள்ளன.112 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 38.61 என்ற சிறந்த சராசரியையும் 101.57 என்ற அற்புதத்தை ஸ்ட்ரைக் ரேட்டையும் கொண்டுள்ளார். இந்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை தொடரில் ஒரு டவுன் ஆர்டர் பேட்ஸ்மேனாக தனது கடமையை திறம்பட செய்வார் என எதிர்பார்க்கலாம்.

#2 ஜோஸ் பட்லர்:

England v New Zealand - ICC Champions Trophy
England v New Zealand - ICC Champions Trophy

ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக மட்டுமல்லாது ஒரு சிறந்த பினிஷராகவும் இங்கிலாந்து அணிக்காக தன்னை நிலைநிறுத்தி வருபவர், இந்த ஜோஸ் பட்லர்.அதிரடிக்கு பெயர் போனவரான இவர்,இதுவரை 122 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 39.7 என்ற நிலையான சராசரியையும் 116.98 என்றதொரு அட்டகாசமான ஸ்ட்ரைக் ரேட்டையும் வைத்துள்ளார். மேலும், சர்வதேச கிரிக்கெட் உலகில் தனக்கென தனி ஆட்டபோக்கை கொண்டுள்ளார், ஜோஸ் பட்லர்.மகேந்திர சிங் தோனி போலவே இவரும் இறுதிக்கட்ட நேரங்களில் களமிறங்கி அதிரடி காட்டிக் கொண்டிருக்கிறார். டி20 போட்டிகள் மட்டும் அல்லாது ஒருநாள் போட்டிகளில் தனது அதிரடி பாணியை கையாண்டு வருகிறார். நிச்சயம் இந்த 2019 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு இவருடைய பங்களிப்பு போற்றத்தக்க வகையில் அமையும்.

#1 மகேந்திர சிங் தோனி:

Australia v India - ODI: Game 1
Australia v India - ODI: Game 1

அனைத்து கால கிரிக்கெட் உலகின் பினிஷர்கள் பட்டியலில் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருகிறார், இந்தியாவின் எம் எஸ் தோனி. ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் இவரது திறமையால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டு பல வெற்றிகளைக் குவித்து உள்ளது. இதற்கு, 2011 உலக கோப்பை தொடரின் இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியே ஒரு சிறந்த சான்றாகும். மேலும், இவரது பினிஷிங் திறமையை பலமுறை நிரூபித்துள்ளார். சமீப காலங்களில் சீராக ரன்களை குவிக்க முடியாமல் திணறி வந்த தோனி பலரின் விமர்சனத்திற்கு உள்ளானார். ஆனால், தற்போது நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர்ச்சியான மூன்று சதங்களை அடித்து அனைவரின் விமர்சனத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும், இந்த தொடரின் இரு ஆட்டங்களில் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறவும் செய்துள்ளார். இது நிச்சயம் இந்த உலக கோப்பை தொடர் முழுவதும் இந்திய அணிக்கு கூடுதல் பலமளிக்கும். மேலும், இவர் ஒருநாள் போட்டிகளில் ஆட்டமிழக்காமல் விளையாடிய 48 போட்டிகளில் 46 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.