ஸ்போர்ட்ஸ்கீடா கிரிக்கெட் விருதுகள் 2018 : ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கிய பௌலர்கள்

ரஷீத் கான் மற்றும் குல்தீப் யாதவ்
ரஷீத் கான் மற்றும் குல்தீப் யாதவ்

பந்து வீச்சாளர்களை மட்டுமே கொண்டு ஒரு அணியை வெற்றி பெற வைக்க முடியும். ஒரு அணியை வெற்றியின் விளிம்பிற்கு கொண்டு செல்வதில் பந்து வீச்சாளர்களுக்கு முக்கிய பங்குண்டு. ஒருநாள் போட்டிகளில் இந்த ஆண்டில் மிரட்டும் வேகப்பந்துவீச்சாளர்கள், மாயாஜால சுழற்பந்து வீச்சாளர்கள் என பந்து வீச்சில் ஒரு சில வீரர்கள் கலக்கியுள்ளனர். இந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து இளம் ஸ்பின்னர்கள் ரஷீத் கான் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் உலகின் சிறந்த ஸ்பின்னர்களில் ஒருவராக உருவாகியுள்ளனர். அடில் ரஷீத், முஸ்தாபிஜூர் ரஹ்மான், சஹால், மோயீன் அலி, லுங்கி நிங்டி, அகிலா தனஜாயா மற்றும் திசரா பெரேரா என இந்த ஆண்டு சுழற்பந்து மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் அசத்தியுள்ளனர். இருந்த போதிலும் இவர்களை மிஞ்சும் அளவிற்கு இந்த ஆண்டு குறிப்பிட்ட ஒரு சில வீரர்கள் பந்து வீச்சில் மிரட்டியுள்ளனர்.

# 3 முஜிப் உர் ரஹ்மான்

முஜீப் உர் ரஹ்மான்
முஜீப் உர் ரஹ்மான்

ஆப்கானிஸ்தான் அணி தற்போது 20 ஓவர் மற்றும் 50 ஓவர்களில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் அணிகளில் ஒன்றாக உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருந்து வரும் வீரர்களில் ஒருவர் முஜிப் உர் ரஹ்மான். 17 வயதே ஆன இளம் சுழற்பந்து வீச்சாளர் தனது மாயாஜால பந்து வீச்சால் பேட்ஸ்மேன்களை திணறவைக்கிறார். வரும் காலங்களில் மிக சிறந்த பந்து வீச்சாளராக கலக்குவார். 2019 –ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு ஆப்கானிஸ்தான் அணி தகுதி பெற்றதில் இவரது பங்கு முக்கியமான ஒன்று. அயர்லாந்து அணியுடன் தனது முதல் தொடரில் 3 போட்டிகளில் 7 விக்கெட்கள், 3.87 எகனாமி ரேட் மற்றும் சிறந்த பந்து வீச்சாக 4 விக்கெட்களுக்கு 24 ரன்கள் தந்துள்ளார். இந்த ஆண்டு 20 போட்டிகளில் 37 விக்கெட்கள், 19.54 சராசரி, 3.84 எகனாமி ரேட் மற்றும் சிறந்த பந்துவீச்சாக 5 விக்கெட்களுக்கு 50 ரன்கள் எடுத்தார். ஒருநாள் போட்டியில் பந்து வீச்சாளர் பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளார்.

# 2 ரஷீத் கான்

ரஷீத் கான்
ரஷீத் கான்

கடந்த சில வருடங்களாக சுழற்பந்து பந்து வீச்சில் அசத்திவரும் ரஷீத் கான் இதுவரை 52 போட்டிகளில் 118 விக்கெட்கள், 14.47 சராசரி, 3.90 எகனாமி ரேட் மற்றும் 7 விக்கெட்களுக்கு 18 ரன்கள் எடுத்தது சிறப்பான பந்து வீச்சாக உள்ளது. 2019-ஆம் ஆண்டு ஐ.சி.சி உலகக்கோப்பைக்கு ஆப்கானிஸ்தான் அணி தகுதி பெற்றதில் முக்கிய காரணமாக இவர் இருந்தார். இந்த ஆண்டு 20 போட்டிகளில் 48 விக்கெட்கள், 14.45 சராசரி, 4-க்கு குறைவான எகனாமி ரேட், 5 விக்கெட்கள் 24 ரன்கள் கொடுத்தது சிறந்த பந்து வீச்சாக உள்ளது. ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்த ஆண்டு அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

# 1 குல்தீப் யாதவ்

குல்தீப் யாதவ்
குல்தீப் யாதவ்

இந்த ஆண்டு தென் ஆப்ரிக்கவிற்கு எதிரான 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் தனது சுழற்பந்து வீச்சில் 17 விக்கெட்கள் வீழ்த்தி கலக்கியுள்ளார். அதற்கு பிறகு நடந்த தொடர்களிலும் சிறப்பாக பந்து வீசியுள்ளார். இந்த ஆண்டு 19 போட்டிகளில் 45 விக்கெட்கள், 17.78 சராசரி, 4.64 எகனாமி ரேட், 25 ரன்களுக்கு 6 விக்கெட்கள் வீழ்த்தியது சிறந்த பந்து வீச்சாக உள்ளது. இந்த ஆண்டு அதிக விக்கெட்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். தரவரிசை பட்டியலில் முதல் 5 இடங்களில் உள்ள அணிகளுடன் சிறப்பாக பந்து வீசியுள்ளார். இதுவரை 33 போட்டிகளில் 4.74 எகனாமி ரேட், 67 விக்கெட்கள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டியில் அறிமுகமான இரண்டு ஆண்டுகளில் தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

Edited by Fambeat Tamil