#2.கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
இருமுறை ஐபிஎல் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு சிறந்த பவுலிங் கூட்டணியை உருவாக்கி தங்களது அணியை மெருகேற்றியுள்ளது. கடந்த ஆண்டு காயம் காரணமாக விலகிய ஆஸ்திரேலியா வேகப்புயல் மிச்செல் ஸ்டார்க்கின் இழப்பு கொல்கத்தா அணியை பெரிதும் வாட்டியது. இருப்பினும், இளம் வேகப்பந்து வீச்சாளர்களான பிரசித் கிருஷ்ணா மற்றும் சிவம் மாவியின் அறிமுக சீசன் இந்த அணிக்கு சிறப்பாகவே அமைந்தது. ஐபிஎல் ஏலத்தில் நியூஸிலாந்து கிரிக்கெட்டில் கலக்கி வரும் லாக்கி பெர்குசன் மற்றும் தென்னாபிரிக்க அணியில் உள்ளூர் கிரிக்கெட்டில் தனது தரமான ஆட்டத்தால் சிறந்து விளங்கி வரும் ஆன்ரி நார்ட்ச்சி ஆகியோர் இந்த அணியின் பௌலிங் தரத்தை மேலும் கூட்டியுள்ளனர்.
இது மட்டுமின்றி உலகம் முழுவதும் நடைபெறும் பல்வேறு டி20 தொடர்களில் சிறந்து விளங்கி வரும் வீரரான ஹாரி கரிணியும் தற்போது இந்தணியில் இணைந்துள்ளார். கமலேஷ் நாகர் கோட்டியும் தனது அறிமுக ஐபிஎல் தொடரில் விளையாட தயாராகியுள்ளார்..இருப்பினும், இந்த அணிக்கு உள்ள மிகப்பெரும் பலமே குல்தீப் யாதவ்,சுனில் நரின் மற்றும் பியுஸ் சாவ்லா போன்ற சர்வதேச வீரர்களே. இவர்களில் குல்தீப் யாதவ் தற்போதைய சர்வதேச கிரிக்கெட் உலகின் சுழல்பந்துவீச்சாளர்களில் மதிப்பு வாய்ந்த வீரராக உருவெடுத்துள்ளார். மேலும், வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டரான ஆந்திரே ரஸ்ஸலின் பவுலிங்கும் அபாயகரமான ஒன்றாகவே கருதலாம்.
#1.சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
கடந்த சில வருடங்களாகவே ஐபிஎல் தொடரின் ஒரு ஆகச் சிறந்த பவுலிங் கூட்டணியை கொண்டுள்ள அணியாக கருதப்படுகிறது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. தரமான சர்வதேச டி20 பந்து வீச்சாளர்களான புவனேஸ்வர் குமார், ரஷித் கான் போன்ற வீரர்களும் உள்ளூர் கிரிக்கெட்டில் கலக்கி வரும் இளம் வீரர்களை கொண்ட ஒரு மிகச்சிறந்த கலவையாக உள்ள காரணத்தால், இந்த அணி பவுலிங்கில் சிறந்து விளங்குகின்றது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் ஐதராபாத் அணியில் இடம் பெற்று சிறப்பாக செயல்பட்டு இந்திய சீனியர் அணியில் இடம் பிடித்துள்ளார் சித்தார் கவுல்.
உள்ளூர் கிரிக்கெட்டில் கலக்கி வரும் பாசில் தம்பி மற்றும் சந்திப் ஷர்மாவும் இந்த அணியில் மேலும் இடம்பெற்றுள்ள இந்திய பந்துவீச்சாளர்கள் ஆவர். இவர்களின் பங்கு ஐதராபாத் அணியின் வெளிநாட்டு வீரர்களின் தேவையை குறைக்கும். சுழற்பந்துவீச்சில் வங்கதேச ஆல்ரவுண்டரான ஷகிப் அல்ஹசன் மற்றும் முகமது நபியுடன் இணைந்து இந்திய வீரரான சபாஷ் நதிமும் புதிதாக அணியில் இணைந்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே டிராபியில் சிறப்பாக செயல்பட்டுள்ள சபாஷ் நதிம், ஆப்கானிஸ்தானின் ரஷித் கானுக்கே போட்டியாக உருவெடுத்தது உள்ளார்.