2018-ஆம் ஆண்டிற்கான 11 பேர் கொண்ட சிறந்த ஒருநாள் அணி

England v India - 1st ODI: Royal London One-Day Series
England v India - 1st ODI: Royal London One-Day Series

#8 ரஷித் கான்:

Rashid Khan
Rashid Khan

ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷித் கான் அணியின் முதல் சுழற்பந்துவீச்சாளராக தேர்வாகிறார். இவர் பவுலிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறந்து விளங்கக்கூடியவர்.

இந்த ஆண்டில், 20 போட்டிகளில் பங்கேற்ற இவர் 48 விக்கெட்டுகளை வீழத்தியுள்ளார். இவரின் பவுலிங் சராசரி 14.46 ஆகும். எகானமி ரேட் 3.91. பவுலிங் ஸ்ட்ரைக் ரேட் 22.3. இதுமட்டுமின்றி இரண்டு முறை 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

இவர் பெரிய அணிக்கு எதிராக நிறைய போட்டிகள் விளையாடியது இல்லை. எனினும் இவரது திறமை மற்றும் இந்த ஆண்டின் புள்ளிவிவரங்களை கொண்டு எடுக்கப்பட்டன.

#9 குல்தீப் யாதவ்:

Chinaman
Chinaman

இந்திய அணி இந்த ஆண்டு பல வெற்றிகளை குவிக்க முக்கியப்பங்கு வகித்தார் குல்தீப். இந்த அணியில் இவர் இரண்டாவது சுழற்பந்துவீச்சாளராக தேர்வாகிறார். ஐசிசி தரவரிசை பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளார்.

இந்த ஆண்டில், 19 போட்டிகளில் பங்கேற்ற இவர் 45 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரின் பவுலிங் சராசரி 17.78 ஆகும். எகானமி ரேட் 4.64. பவுலிங் ஸ்ட்ரைக் ரேட் 23.0. இதுமட்டுமின்றி ஒரு முறை போட்டிக்கு 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

ரஷீத் மற்றும் குல்தீப் இருவரும் ஒரே அணியில் சுழற்பந்துவீச்சாளராக செயல்படுவது அணிக்கு பலம்.

#10 ஜஸ்பிரீட் பும்ரா:

Jasprit Bumrah
Jasprit Bumrah

தற்பொழுது இந்திய அணியின் அனைத்து வித போட்டிகளிலும் சிறந்த பவுலர் பும்ரா. டெஸ்ட் போட்டிகளில் இந்த ஆண்டு களமிறங்கி, அதிலும் அசத்தி வருகிறார். கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்துவதில் வல்லவர். முதல் பாதியில் விக்கெட்களையும் கைப்பற்றுவதுண்டு.

இந்த ஆண்டில், 13 போட்டிகளில் பங்கேற்ற இவர் 22 விக்கெட்டுகளை வீழத்தியுள்ளார். இவரின் பவுலிங் சராசரி 16.64 ஆகும். எகானமி ரேட் 3.63. பவுலிங் ஸ்ட்ரைக் ரேட் 27.5.

ஐசிசி ஒருநாள் பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் பும்ரா நம்பர் 1 பவுலர் என்பது குறிப்பிடித்தக்கது.

#11 ககிசோ ரபாடா:

Kagiso Rabada
Kagiso Rabada

தென்னாப்பிரிக்கா அணியின் சிறந்த பவுலரான ரபாடா அணியின் கடைசி வீரராக தேர்வாகிறார். மற்ற பவுலர்களான போல்ட், முஸ்டாஃபிசூர் ரஹ்மான் மற்றும் வோக்ஸ் போன்ற வீரர்கள் இருந்தாலும் ரபாடா சீரான முறையில் செயல்பட்டதன் காரணமாகவும் முக்கிய தொடரான இந்திய தொடரில் அசத்திய காரணங்களுக்காகவும் தேர்வாகிறார்.

இந்த ஆண்டில், 14 போட்டிகளில் பங்கேற்ற இவர் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரின் பவுலிங் சராசரி 26.17 ஆகும். எகானமி ரேட் 4.85. பவுலிங் ஸ்ட்ரைக் ரேட் 32.4

ஐசிசி ஒருநாள் பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் ரபடா 4ஆம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.