ஐ.பி.எல் 2019: மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறந்த வெளிநாட்டு வீரர்கள்

பெஹ்ரண்டோர்ஃப் வளர்ந்து வரும் டி-20 பவுலர், மெக்லீனகான் மும்பை அணிக்கு சிறந்த பந்துவீச்சாளர்.
பெஹ்ரண்டோர்ஃப் வளர்ந்து வரும் டி-20 பவுலர், மெக்லீனகான் மும்பை அணிக்கு சிறந்த பந்துவீச்சாளர்.

இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் மூன்று முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் யுவராஜ் சிங்கை ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கியது. மேலும் முக்கிய வீரர் லசித் மலிங்கா மற்றும் ஆர்.சி.பி அணியிலிருந்து குயின்டன் டி காக்கை வாங்கியது. அணியின் பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டையும் சமநிலை படுத்த ஆல்-ரவுண்டர்கள் முக்கியமானவர்கள். மேலும் வெளிநாட்டு வீரர்கள் அணிக்கு முக்கிய பங்கு வகிப்பார்கள்.

1.குவின்டன் டி காக்

டி காக் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்.
டி காக் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்.

தென் ஆப்பிரிக்கா அணியின் இளம் விக்கெட் கீப்பரான டி காக் பெங்களூர் அணியிலிருந்து மும்பை அணிக்கு வாங்கப்பட்டார். ஒருநாள் போட்டிகளில் சிறந்த தொடக்க ஆட்டக்காரரான டி காக் மும்பை அணிக்குச் சிறந்த தொடக்க ஆட்டக்காரராக இருப்பார். டி காக் பேட்ஸ்மேன்னாக மட்டுமல்லாது விக்கெட் கீப்பராகவும் சிறப்பாகச் செயல்படுவார். மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக இறங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

2. பென் கட்டிங்

சிறந்த பினிஷராக கட்டிங் இருப்பார்.
சிறந்த பினிஷராக கட்டிங் இருப்பார்.

மும்பை அணி ஒரு சிறப்பான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கொண்ட அணியாக உள்ளது. ஆல்-ரவுண்டர்களான பென் கட்டிங், பொல்லார்ட், பாண்டியா சகோதரர்கள் ஆகியோர் சிறந்த ஃபினிஷர்களாக இருப்பார்கள். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக சூர்யா குமார் யாதவ், யுவராஜ் சிங், இஷான் கிஷான் ஆகியோர் உள்ளனர். கட்டிங் ஆறாவது பந்து வீச்சாளராக அணியில் இடம் பெறலாம். ஆனால் மேற்கிந்திய தீவு அணியின் ஆல்-ரவுண்டரான பொல்லார்ட் மும்பை அணிக்கு முக்கிய வீரராக இருப்பதால், கட்டிங் அணியில் இடம் பெற சிறப்பாக விளையாட வேண்டிய நிலையில் உள்ளார். அதே நேரத்தில் கட்டிங் கடந்த ஆண்டு கிடைத்த குறைந்த வாய்ப்புகளிலும் சிறப்பாக விளையாடி தன்னை நிருபித்துள்ளார்.

3. ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப்

சிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளராக டி-20 போட்டிகளில் வளர்ந்து வருகிறார்.
சிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளராக டி-20 போட்டிகளில் வளர்ந்து வருகிறார்.

இந்தியாவுக்கு எதிரான டி-20 போட்டியில் நான்கு விக்கெட்களை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். ஆஸ்திரேலியாவின் இடது கை வேகப் பந்துவீச்சாளரான பெஹ்ரண்டோர்ஃப் ஆஸ்திரேலியா அணிக்கு தற்போது டி-20 போட்டிகளில் முக்கிய பந்து வீச்சாளராக இருந்து வருகிறார். பெர்த் ஸ்கார்சர்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான இவர் உள்நாட்டு போட்டியில் சிறப்பாக விளையாடியுள்ளார். பெஹ்ரண்டோர்ப் பந்தை ஸ்விங் செய்யும் சிறப்பான திறன் கொண்டவர். பும்ராவுடன் முதல் மற்றும் டேத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசுவார்.

4. மிட்செல் மெக்லீனகான்

மும்பை அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக இருந்தார்.
மும்பை அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக இருந்தார்.

தற்போது இவர் சிறிது காலத்திற்கு தேசிய அணியில் விளையாடவில்லை. ஆனால் மும்பை அணி மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற போதும் ஒரு நிலையான ஆட்டக்காரராக மிட்செல் மெக்லீனகான் இருந்துள்ளார். இடது கை பந்துவீச்சாளரான மெக்லீனகான், மும்பை அணிக்கு மிகவும் தேவையான சூழ்நிலையில் விளையாடியுள்ளார். ஒரு சிறந்த ஹிட்டராக மும்பை அணிக்கு விளையாடினார். மெக்லீனகான் அனுபவம் மும்பை அணிக்கு உதவும். நியூசிலாந்து நாட்டின் மற்றுமொரு வீரரான ஆடம் மில்னே இருவரும் வேகமாகவும், பவுன்ஸ் பந்துகள் வீசுவதில் சிறந்தவர்கள். கடந்த சீசனில் பந்துவீச்சு ஆலோசகராக பணியாற்றி வந்த லசித் மலிங்கா இந்த முறை மீண்டும் அணியில் இணைந்துள்ளார். மும்பை அணிக்கு வேகப்பந்து வீச்சர்களை பொருந்த வரை சிறப்பான வீரர்கள் உள்ளனர்.

எழுத்து- தீபக் பாண்டா

மொழிபெயர்ப்பு- சுதாகரன் ஈஸ்வரன்

App download animated image Get the free App now